logo blog

வாட்சப்பில் வீடியோ கால் செய்யும் வசதி

வாட்சப்பில் வீடியோ அனுப்பலாம். படங்கள் அனுப்பலாம். மெசேஜ் அனுப்பலாம். கால் செய்து பேசலாம். இத்தனை வசதி இருந்தும் வீடியோ கால் செய்யும் வசதி மட்டும் இல்லையே என ஏங்கியவர்கள் நிறைய பேர். அவர்களின் ஏக்கங்களை தீர்த்து வைக்க வந்துவிட்டது புதிய "Whatsapp Video Call App". இந்த செயலி மூலம் வாட்சப் நண்பர்களுக்கு வீடியோ கால் செய்யலாம்.

whatsapp video call tamil
வாட்சப் - வீடியோ கால் வசதி

அந்த செயலியின் பெயர் Booyah. இது ஒரு மூன்றாம் நபர் செயலி ஆகும். ஐபோன் வைத்திருப்பவர்களும் இச் செயலியைப் பயன்படுத்தி வாட்சப் வீடியோ கால் பேசலாம்.

வாட்சப் மூலம் வீடியோ கால் செய்வது எப்படி?


கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம்  Booyah செயலியை டவுன்லோட் செய்து கொள்ளவும்.


Booyah செயலியை எப்படி பயன்படுத்துவது?

இந்த செயலியைப் பயன்படுத்த எந்த ஒரு கணக்கும் தொடங்க தேவையில்லை. டவுன்லோட் செய்த பிறகு செயலியை திறந்து
ஸ்டார்ட் நௌ  - Start Now என்ற பட்டனை அழுத்தவும்.


பிறகு தோன்றும் பக்கத்தில் மேல்புறம் இருக்கும் பச்சை நிற பட்டனை அழுத்தி, யாருக்கு வீடியோ கால் செய்ய வேண்டுமோ அவருடைய எண்ணை தேர்வு செய்யவும்.
அவருக்கு வாட்சப் மூலம் ஒரு இணைப்பு மேசேஜாக அனுப்ப படும். அதை கிளிக் செய்து, அவரும் அவருடைய போனில் இந்த செயலியை நிறுவிக்கொள்ள முடியும்.

பிறகு பரஸ்பரம் இருவரும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும். குரூப் வீடியோ கால் வசதியும் இதில் உண்டு. வீடியோ கால் செய்யவிருக்கும் ஒவ்வொரு நபரின் போனிலும் இந்த செயலி கட்டாயம் நிறுவப்படிருக்க வேண்டும்.

இது வாட்சப் நிறுவனத்தின் உத்யோக பூர்வமான செயலி அல்ல. மூன்றாம் நபர் செயலி.

தரவிறக்கம் செய்வதற்கான இணைப்புகள்: 

Booyah ஆன்ட்ராய்ட் செயலி
Booyah ஐபோன் செயலி



Share this

1 comment

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.