logo blog

காணாமல் போன மொபைல்போனை கண்டுபிடிக்க உதவும் செயலி !

இப்போது இருக்கிற அவசர யுகத்தில போனை வீட்டில் எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆன்ட்ராய்ட் போனை சைலண்டில் வைத்துவிட்டால், ரிங் விட்டு தேடி கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.

find phone in silent mode
சைலண்ட் மோடில் உள்ள போனை கண்டுபிடிப்பது எப்படி?



இதற்கு ஒரு அற்புதமான வழி இருக்கிறது. கம்ப்யூட்டர் மூலம் காணாமல் போன ஆன்ட்ராய்ட் போனை கண்டுபிடிக்கலாம். இதற்கு


  • முதலில் பிரௌசரில் "Android Device Manager" என கொடுக்க வேண்டும். இப்போது தோன்றும் விண்டோவில் "Accept" கொடுக்க வேண்டும்.
  • அடுத்து ஆன்ட்ராய்ட் போனுக்கான கூகிள் அக்கவுண்ட்டில் லாகின் செய்ய வேண்டும். 
  • இப்பொழுது உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் இணைக்கப்பட்டுள்ள கருவிகளை திரையில் பார்க்க முடியும்.
  • அதில் RING , Enable Lock and Erase என்ற பட்டன்கள் இருக்கும். 
  • அதில் Ring என்ற பட்டனை அழுத்தவும்.
  • இப்பொழுது உங்களது "ஆன்ட்ராய்ட்" போன் சைலண்ட் மோடில் இருந்தாலும், ரிங் ஆகும். 

இதை வைத்து உங்களுடைய போனை நீங்கள் தேடி எடுத்துக்கொள்ளலாம். போன் காணாமல் போனாலும், இந்த முறையில் போனை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம்.

காணாமல் போன போனை தேடுவதற்கென்றே செயலிகள் - Android Apk உள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம்.

Share this

1 comment

உபயோகமான தகவல் நன்றி நண்பா.

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.