வாட்சப்பில் திடீரென ஏற்படும் கோளாறை சரி செய்யும் வழிமுறைகள் ! - Tamil Tech

Mar 19, 2016

வாட்சப்பில் திடீரென ஏற்படும் கோளாறை சரி செய்யும் வழிமுறைகள் !

செய்திகள், படங்கள், வீடியோ, குறுந்தகவல்கள் என பல்வேறுபட்ட வசதிகளை கொண்டிருக்கும் வாட்சப் செயலிக்கு பயனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். ஏறக்குறைய 900 மில்லியன் பயனர்களை அடைந்திருக்கும் வாட்சப் செயலியில் அவ்வப்பொழுது திடீரென சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட செய்கிறது. அத்தகைய பிரச்னைகளை நீங்களாகவே சரி செய்வது எப்படி என்பதை அறிந்துகொள்வோம்.

fix whatsapp problem tamil guide
வாட்சப் பிரச்னை சரி செய்ய


இது போன்ற பயனுள்ள செய்திகளை முகநூலில் படிக்க கிளிக் செய்யவும்.


1. வாட்சப் இன்ஸ்டால் செய்வதில் உள்ள  பிரச்னை சரி செய்ய

சில நேரங்களில் வாட்சப் இன்ஸ்டால் செய்வதிலயே பிரச்னை இருக்கும். அப்படி பிரச்னை ஏற்பட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் Settings >> Security >> Unknown Sources என்பதில் டிக் செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆன்ட்ராய்ட் OS 2.1 ஆவது இருக்க வேண்டும். இவைகள் இருந்தால் மிக எளிதாக வாட்சப் இன்ஸ்டால் செய்திட முடியும்.

2. வாட்சப் செயலி வேலை செய்யவில்லையா?

முதலில் உங்களுடைய நெட்வொர்க் வேலை செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இதைச்செய்ய புதிய வர்சன் வாட்சப் செயலியை ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்யலாம்.  தரவிறக்கம் செய்த பிறகு வாட்சப் உபயோகித்து பார்க்கவும்.

அதற் பிறகும் வேலை செய்யவில்லை என்றால், ஏற்கனவே இருக்கும் வாட்சப் செயலியை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு, புதியதாக டவுன்லோட் செய்த வாட்சப் செயலியை இன்ஸ்டால் செய்துவிடுங்கள். இப்பொழுது கண்டிப்பாக வாட்சப் செயலி வேலை செய்யும்.

3. வாட்சப் ப்ரோபைல் பிக்சரை மறைக்க

வாட்சப் Profile Picture மறைக்க வாட்சப் ப்ளஸ் செயலியை டவுன்லோட் செய்திட வேண்டும். இந்த செயலியைப் பயன்படுத்தி வாட்சப் ப்ரோபைல் பிக்சரை மறைத்திட முடியும்.

வாட்சப் புதிய வர்சன் டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Whats app New Version

Tags: Tamil Whatsapp tips, Fix Whatsapp problem, Whatsapp tips in Tamil.

No comments:

Post a Comment

Write Your Comments Here.