logo blog

ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் சிட்டுக்குருவி விமானங்கள் !

தலைப்பு பார்த்து ஆர்வமா வந்த நீங்க தயவு செய்து டென்சன் ஆகிடாதீங்க.... தொடர்ந்து படிங்க....என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமே..!!

எந்த ஒரு குறுகலான இடத்திலும் ஆராய்ச்சி மேற்கொள்ள கண்டுபிடிக்கப்பட்டவை Drone என்னும் சிறிய ரக விமானங்கள். இந்த வகை விமானத்தில் தற்பொழுது மிகச் சிறிய விமானத்தை வடிவமைத்துள்ளனர்.

2.2 நீள, அகலம் கொண்ட இந்த ரக விமானத்தை TRNDlabs நிறுவனம் தயாரித்துள்ளது.
kutti vimanam
குட்டி ரக விமானம்

இரவு நேரத்திலும் பறக்கும் வகையில் இதில் Led Lights கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது கரணம், சுழற்சிகளை மேற்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

இச்சிறிய ரக விமானத்தின் விலை $49 .



இந்த சிறிய ரக விமானத்தை பற்றிய இப்பதிவை எழுதும்போது, பிரேசில் நடைபெற்ற வேடிக்கையான விபத்தை பற்றி நினைவு வந்துவிட்டது.

நம் நாட்டில் விவசாய பயிற்களுக்கு மெஷினில் மருந்து தெளிப்பதை போல, வெளிநாடுகளில் பயிர்களுக்கு மருந்து தெளிக்க குட்டி ரக விமானத்தைப் பயன்படுத்துவார்கள். அந்த வகை விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டது.

அதில் பரிதாபமாக 5 பேர் பலியாகிவிட்டனர். குழந்தைகள் விளையாடும் எலக்ட்ரானிக் பொம்மைகளை கூட எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் ஆபத்து விளைவிக்கும்.

சிறய ரக விமான ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்கு உள்ளாகும் காட்சி:



இதுபோன்ற குட்டி ரக விமானத்தைப் பயன்படுத்தி சிலர் சமூக விரோத செயல்களைச் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. டென்மார்க் போலிசார் அதுபோன்ற குட்டி ரக விமானங்களை கைப்பற்ற கழுகுகளுக்கு பயற்சியளித்து வைத்துள்ளனர்.

"போலிஸ் கழுகு" ஒன்று குட்டி ரக விமானத்தை பறந்து கைப்பற்றும் காட்சி:

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.