logo blog

வாட்சப்பில் மறைந்திருக்கும் ரகசியங்கள் (டிப்ஸ் & ட்ரிக்ஸ்)

"வாட்சப்" பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லமளவுக்கு வாட்சப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். குறுந்தகவல்கள் அனுப்ப பயன்படும் இலவச செயலியான இதில் இருக்கும் வசதிகள் பல. இந்த வசதிகளால் நன்மைகள் இருந்தாலும், சில தவிர்க்க முடியாத தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த தொல்லைகளிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதை இந்த "வாட்ஸ்ப் டிப்" பதிவு கற்றுக்கொடுக்கிறது.

tamil whatsapp tips and tricks 2016
வாட்ஸப் டிப்ஸ் & ட்ரிக்ஸ் 2016


1. வாட்ஸப் குரூப் சாட் வசதியை நிறுத்த


நண்பர்கள் பலருக்கும் பயன்படும் தகவல்களை குரூப் சாட் வசதி மூலம் பறிமாறலாம். நண்பர்கள் பலர் இணைந்து அரட்டை அடிக்கவும் இந்த வசதி பயன்படுகிறது. குறிப்பிட்ட சப்ஜக்டைப் பற்றி கலந்தாலோசிக்கவும் இந்த வசதி பயன்படுகிறது. ஒரு சில குரூப் சாட்டில் தேவையில்லாத "ஆபாச தகவல்கள்" பறிமாறிக் கொள்வார்கள். அதுபோன்ற தகவல்கள் அல்லது உங்களுக்குப் பிடிக்காத தகவல்களை குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்த முடியும்.

இந்த வசதியை செயல்படுத்த Menu => Mute => சென்று அதில் உள்ள டைம் பிரேமை செலக்ட் செய்ய வேண்டும்.


வாட்சப் குரூப் சாட்டில் உங்கள் தகவல்களை படித்தவர்களை கண்டுபிடிக்க


வாட்ஸப் குரூப் சாட்டில் நீங்கள் அனுப்பிய தகவல்களை படித்தவர்கள் இன்னாரென்ன கண்டுபிடிக்க முடியும். தனியாக நீங்கள் ஒருவருக்கு அனுப்பிய மேசேஜை படித்தார்களா இல்லையா என்பதை ஈசியா தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் அனுப்பிய டெக்ஸ்ட்டில் 2 ப்ளூ டிக்மார்க் இருக்கும். அதை வைத்து கண்டு பிடித்துவிடலாம். ஆனால் "குரூப்" சாட்டில் அப்படி இல்லை. அதை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் நீங்கள் அனுப்பிய டெக்ஸ்டின் மீது சிறிது நேரம் அழுத்த வேண்டும். உடனே அதில் ஒரு "பாப் அப்" மெசேஜ் வரும். அதில் "Info" என்பதை அழுத்தினால்,

1. யார் யாருக்கு தகவல் சென்றது | Delivered To
2. யாரெல்லாம் படித்தார்கள் | Read By

என பட்டியலிட்டு காட்டும்.

who-has-read-whatsapp-group-message
வாட்சப் டிப்ஸ்


வாட்சப் பிரைவசி செயல்படுத்த


உங்களது ப்ரோபைல், மேசேஜ்களை யாரெல்லாம் படிக்க வேண்டும், யாரெல்லாம் படிக்க கூடாது என்பதையும், யாரெல்லாம் உங்களது ப்ரொபைல் படங்களை பார்க்க முடியும் அல்லது பார்க்க கூடாது  என்பதையும் நீங்கள் Whatsapp Privacy செட்டிங் மூலம் தீர்மானிக்க முடியும். அதாவது யார் வேண்டுமானாலும் பார்க்க அனுமதிக்கலாம். அல்லது உங்களது கான்டாக்டில் இருப்பவர்கள் மட்டுமே பார்க்கும்படி அமைக்கலாம். அல்லது எவருமே பார்க்க முடியாத படியும் செட்டிங்ஸ் அமைக்கலாம். இதைச் செய்ய

1. Settings => Account =>Privacy செல்லவும்.
2. அதில் Last Seen, Profile Photo, Status போன்றவற்றில் உள்ள Every One, My Contact, No body என்பவற்றில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து விடலாம்.

Tamil whatsapp Tips
Tamil whatsapp Tips
இது போன்று நிறைய "வாட்சப் டிப்ஸ்" உள்ளது. இனி வரும் பதிவுகளில் அவைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.


Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.