logo blog

இன்டர்நெட்டில் உங்களுடைய சுய விவரங்கள் திருடபடாமல் இருக்க

இன்டர்நெட்டில் உங்களுடைய சுய விவரங்கள் திருடபடுகிறதா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆம்..அது உண்மைதான்.. நீங்கள் இணையத்தில் கொடுக்கும் சுய விபர குறிப்புகளை திருடி, அதைப் பயன்படுத்தி "மார்கெட்டிங்" செய்கின்றனர். அதாவது, உங்களுடைய பெயர், இமெயில் முகவரி, அலைபேசி எண் போன்றவைகளை மற்ற வணிக நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றனர்.
protect your data from online
உங்கள் தகவல்கள் திருடு போகாமல் பாதுகாத்திட

அந்த நிறுவனங்கள் உங்களுடைய அலைபேசி எண்ணுக்கு அழைத்து, அவர்களது தயாரிப்புகள், பரிச பொருட்கள், பேங்க் லோன் என நிறைய கதைகளை அளந்து விடுகின்றனர். யாருக்குமே உங்களுடைய மொபைல் நம்பர் கொடுத்திருக்க மாட்டீர்கள்.. ஆனால் ஏதோ ஒரு நிறுனத்திடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருக்கும்.

உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் SMS கள் கூட இதுதான் காரணம். இமெயிலுக்கு வரும் SPAM மெயில்களும் இந்த வகையில்தான் அடங்கும்.

ஏதாவது இணைய வழியில் பொருட்கள் வாங்க, உங்களது Credit Card, Debit Card பயன்படுத்தினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.. இல்லை என்றால் நீங்கள் கொடுக்கும் தகவல்களை (Card Number, Pin Number, Password போன்றவை) திருடிவிடுவார்கள்.

இதில் என்ன பெரிய அதிர்ச்சி தரும் விஷயம் என்றால், இலவசமாக இமெயில், மொபைல் நெட் வொர்க் போன்றவைகளை கொடுக்கும் பெரிய பெரிய நிறுவனங்களே மார்க்கெட்டிங் செய்வதற்காக தங்களுடைய வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்களை கொடுத்துவிடுகின்றனர் என்பதுதான்.

எப்படி தடுப்பது?

முக்கியமான தகவல்களை இணையத்தில் கொடுக்காதீர்கள். ஃபேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் தேவையில்லாமல் முக்கியமான தகவல்களை பகிர வேண்டாம். இணையத்தில் எந்த ஒரு முக்கியமான தகவலையும் சேமிக்கவும் வேண்டாம்.

அப்படி உள்ளிடப்பட்ட தகவல்களை, சேமிக்கப்பட்ட தகவல்களைதான் இன்டர்நெட்  மூலம் திருடி விடுகிறார்கள். எனவே கவனம் அவசியம். Spam, Virus போன்றவைகளை தடுக்க உங்களது கம்ப்யட்டரில் நல்லதொரு ஆன்ட்டி வைரஸ் பயன்படுத்தலாம். இதனால் தேவையில்லாத மல்வேர் புரோகிராம்கள், வைரஸ்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, அவற்றை அழிக்க முடியும்.

இதையெல்லாம் விட, இன்டர்நெட்டை பயன்படுத்தும்பொழுது, கவனமும் விழிப்புணர்வும் அவசியம் தேவை. ஒரு மென்பொருளை டவுன்லோட் செய்வதற்கு முன்பு, அதிலிருக்கும் கன்டிசன்களை படித்த பிறகு டவுன்லோட் செய்ய வேண்டும். இலவசமாக கிடைக்கிறதே என கன்டிசன்களை படிக்காமலேயே  Accept - ஏற்றுக்கொண்டு டவுன்லோட் செய்தால் கூடவே ஒட்டிக்கொண்டு வரும் புரோகிராம்களால் ஏகப்பட்ட தொல்லைகள் வந்து சேரும்.






Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.