logo blog

பைல்கள் பற்றிய முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள பயன்படும் மென்பொருள் !

சாதாரணமாக கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகள், மென்பொருட்களின் போன்றவற்றை பற்றி அறிந்து கொள்ள கோப்புகளின் மீது ரைட் கிளிக் செய்து Properties சென்று பார்ப்போம். அதில் ஒரு சில அடிப்படை தகவல் மட்டும் தெரிந்துகொள்ள முடியும். கோப்புகள் பற்றிய முழுமையான விபரங்களை [Full Details of Files or software] தெரிந்துகொள்ள முடியாது.

மென்பொருள் கோப்பு பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள உதவும் மென்பொருள் தான் Extended File Details என்ற மென்பொருள்.

இது ஒரு போர்ட்டபிள் [Portable Tool] சாப்ட்வேர்.

இதை ஒரு USB Flash Drive  போன்ற ஏதேனும் சேமிப்பகத்தின் மூலம் சேமித்து வைத்துக்கொள்ளலாம். போர்டபிள் மென்பொருள் என்பதால் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டிய தேவையில்லை. மிக எளிமையான தோற்றத்தை [Interface] கொண்டுள்ளது.

tool for know file full details

இந்த போர்டபிள் டூலில் Drop and Drag வசதி உண்டு. ஒரு கோப்பு பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், ஃபைலை டிராக் அன்ட் டிராப் செய்துவிட்டால் போதுமானது.

இதன் மூலம் ஒரு கோப்பின் ,


  • Filename
  • file type
  • company name
  • description
  • legal copyright
  • legal trademark
  • trademark
  • comments
  • MD5 


போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். .

இதில் கூடுதல் வசதியாக file size, creation date, last acceded and modified dates மற்றும் CRC போன்ற தகவல்களை கூட தெரிந்துகொள்ள  கூட வசதி உள்ளது.

இதைப் பயன்படுத்தும்போது மற்ற மென்பொருள்களை போல அதிகமான CPU இடத்தை எடுத்துக்கொள்வதில்லை. அதனால் System Slow ஆவதில்லை. இந்த மென்பொருளை சோதித்துப் பார்த்ததில் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கிறது.

கோப்புகள் பற்றிய விபரங்களை டெக்ஸ்ட் பைலாக TEXT FILE சேமிக்கும் வசதியும் இதில் உண்டு.  இதனால் அந்த பைல்களைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

Extended File Details டவுன்லோட் செய்ய சுட்டி: Download Extended File Details Portable Tool for free


Tags: free software, tamil tech news, #Tamil Computer Tips, Computer tips in tamil, computer tips, know about files details on computer, Extended File Details.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.