logo blog

251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்பது ஏமாற்று வேலையா? அதிரடி ரிப்போர்ட்!

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து உலகின் மிக குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்த்திலிருந்து மக்களின் மனதில் குறைந்த விலை போனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
kidaikkuma freedin 251 smartphone
கிடைக்குமா? ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போன்

அந்த ஆசையில் குறைந்த விலை போனை வாங்குவதற்காக அளவுக்கு அதிகமானோர் ரிங்கிங் பெல்ஸ் நிறுவன இணையதளத்தை அணுகினர். இதனால் அந்நிறுவனத்தின் வெப்சைட் சர்வர் முடங்கிபோனது.

முன்னதாக இப்போன் ஒரு ஆண்டு வாரண்டியுடன் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக இந்தியா முழுவதும் 650 இடங்களில் சர்வீஸ் சென்டர்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
freedom 251 smartphone

பரப்புக்கு உள்ளான Freedom 251 போன் நான்கு இன்ஞ் திரை, 1.3GHz Quad-core பிராஸசர், 1 ஜிபி ரேம், 8 ஜி.பி. உள்ளக சேமிப்பு (32 ஜிபி வரை விரிவாக்கம் செய்துக்கொள்ள முடியும்), 3.2-மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் கேமரா, லாலீபாப் 5.1 இயங்குதளம் மற்றும் ஒரு 1450mAh பேட்டரி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போனை வாங்க ஓரே நேரத்தில் www.freedom251.com என்ற இணையதள முகவரியில் லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்ய வந்திருந்ததால், அந்த இணையதளம் திடீரென முடங்கியது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

 இந்நிலையில், ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்களுக்கு ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், தங்களுடைய வலைதளத்திலேயே ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில், "நண்பர்களே உங்களின் அளவு கடந்த வரவேற்புக்கு நன்றி! நொடிக்கு சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்கள் வருவதால் எங்களின் வலைதள சர்வரால் இயங்க முடியவில்லை.

நாங்கள் இதனை சரி செய்து கொண்டிருக்கிறோம். அடுத்த 24மணி நேரத்திற்குள், இப்பிரச்சனையை முடித்து மீண்டும் வருவோம். வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும், வரவேற்பிற்கும் எங்களின் மதிப்புக்குரிய நன்றிகள்" என்று தெரிவித்துள்ளது.

இணையதளத்தை அணுகிய சிலர், கொடுத்த தகவல்படி, இந்த போன் ஆர்டர் செய்த பின்பு 40 நாட்களில் டெலிவரி செய்யப்படும் என்ற தகவல் மட்டுமே கிடைப்பதாக கூறியுள்ளனர். இதனால் உண்மையிலேயே இந்த தளத்தின் மூலம் குறைந்த விலை போன் கிடைக்குமா என பெரும்பாலான மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.

நம்ப முடியாத விலையில், தரமான ஒரு மொபைல் கிடைக்கிறது என மக்களை நம்ப வைத்த நிறுவனம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: Freedom 251 Buy online, India's Cheapest Freedom smartphone 251, how to buy Freedom 251 smartphone, Ringbell smartphone, Ring Bell Freedom 251 phone.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.