logo blog

இங்கிலீஸ் டூ தமிழ் டிரான்ஸ்லேட் சாப்ட்வேர்

சிலருக்கு தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்ய வேண்டிய தேவைகள் அதிகம் இருக்கின்றன. அதே போல ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய வேண்டிய தேவைகள் நிறைய உள்ளன. அலுவலக ரீதியாகவோ, அல்லது தனிப்பட்ட வேலைகள் காரணமாகவோ இதுபோன்ற மொழிமாற்றம் - மொழிப்பெயர்ப்புகள் அவசியமாகின்றன.

அந்த வகையில் இங்கிலீஸ் டூ தமிழ் / தமிழ் டூ இங்கிலீஸ் டிரான்ஸ்லேட் செய்ய மென்பொருள் நிறைய வந்துவிட்டன. தமிழ் கோப்புகளை நேரடியாக ஆன்லைனில் அப்லோட் செய்து, அதை டிரான்ஸ்லேட் செய்யக் கூடிய டூல் வசதிகள் உண்டு. அவற்றில் குறிப்பிட்ட சொல்லக் கூடியவை இரண்டு.

tamil english translation software
தமிழ் - இங்கிலீஸ் டிரான்லேஷன் சாப்ட்வேர்


1. Google Transliteration
2. WikiBhasha

1. கூகிள் டிரான்ஸ்லேட்

டிரான்லேட்டரில் முதன்மையானதாக கருதப்படுவது Google Transliteration. இதைப் பயன்படுத்தி, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு டிரான்லேட் செய்யலாம். இதன் மூலம் கிடைப்பெறும் மொழிப்பெயர்ப்பு 100% சதவிகிதம் சரியாக இருக்காது. என்றாலும், ஓரளவிற்கு மொழிபெயர்ப்பு பொருள் தரக்கூடியதாக இருக்கும்.

2. விக்கிபாஷா

இதுவும் ஒரு மொழிமாற்றி இயந்திரம்தான். விக்கிபீடியாவிற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் டவலப் செய்த Translate Tool Kit இது. ஆனால் தமிழ் டிரான்ஸ்லேஷன் என்பது கடினமான ஒன்றாக உள்ளது. தமிழிலுள்ள எழுத்து வடிவங்கள் ஒரே மாதிரியானவை இல்லை. இந்த பிரச்னையால் தமிழில் குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு தானியங்கி முறையில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பது மிக கடினமானதாக உள்ளது.

தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்க்க "ஆன்லைன் டிக்ஷனரி"


தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க ஆன்லைன் டிக்சனரி உள்ளது. தற்பொழுது இணையத்தில் உள்ள Tamil to English Dictionary Websites கள் சில.

1. Tamil Dict.Com
2. dictionary.tamilcube.com
3. Tamil Wiktionary
4. DSAL dictionaries
5. Pals e-dictionary
6. Tamil Virtual University Dictionaries
7. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
8, Lifco Tamil - Tamil - English Dictionary
9. Tamil Lexicon
10. Agaraadhi

மேலும் கூடுதல் English - Tamil Dictionary பற்றி தெரிந்துகொள்ள இவ்விணைப்பை சொடுக்கவும்.

Tamil - English Dictionary Android Apps


கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் டிக்ஷனரி போன்றே தற்காலத்தில் பிரபலமடைந்து வரும் "ஆன்ட்ராய்ட்" போனுக்கும் "Dictionary Apps" உண்டு. அவற்றைப் பயன்படுத்தி, மிக விரைவாக தமிழ் சொற்களுக்கான ஆங்கில பொருளை அறிந்துகொள்ளலாம். ஆங்கிலத்திற்கான தமிழ் பொருளையும் இதன் மூலம் அறிந்துகொள்ள  முடியும்.

1. Tamil Dictionary Android App
2. English to Tamil Dictionary
3. English to Tamil Dictionary | Nithra Edu Solutions



Tags: Tamil Dictionary, Tamil - Tamil English Dictionary, useful websites, free dictionary software, Free Tamil Translator Software.

Share this

3 comments

தங்கள் பயனுள்ள தகவல்களுக்கு என் நன்றியும்பாராட்டுக்களும் உரித்தாகுக

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Apple lpadல் android appsயை install செய்வது எப்படி

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.