ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணனுமா? அப்போ இந்த ஆண்ட்ராய்ட் ஆப்பை டவுன்லோட் பண்ணுங்க ! - Tamil Tech

Feb 14, 2016

ஈசியா ரயில் டிக்கெட் புக் பண்ணனுமா? அப்போ இந்த ஆண்ட்ராய்ட் ஆப்பை டவுன்லோட் பண்ணுங்க !

ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய பல வழிகள் இருக்கிறது. அவற்றில் சில சிக்கல்களும் ஏற்படுவதுண்டு. நினைத்த உடனே, நினைத்த ரயில்நிலையத்திலிருந்து டிக்கெட்டை புக் செய்வது என்பது கடினம். ஏற்கனவே அந்த நிலையத்திலிருந்து பயண சீட்டு அனைத்தும் நிரப்ப பட்டிருந்தால், அடுத்த ரயில் நிலையத்தில் கிடைக்கிறதா என சோதிக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு ரயில் நிலையமாக பார்த்து புக் செய்வது கடினம். அந்த தகவல்களை எல்லாம் தொகுத்து, எந்தெந்த ரயில் நிலையத்தில், எந்தெந்த வழித்தடங்களில் டிக்கெட் காலியாக உள்ளது என தெரிந்துகொண்டு, டிக்கெட் புக் செய்ய பயன்படுகிறது 'டிக்கெட் ஜுகாத்' என்ற ஆன்ட்ராய்டு ஆப்.Easy Rail Ticket Booking android app
இரயில் டிக்கெட் புக்கிங் "ஆப்"


இந்த ஆப் மூலம் ஒரு ரயில் நிலையத்தில் கிடைக்கவில்லை என்றாலும், அதற்கு அடுத்தடுத்து உள்ள ரயில் நிலையத்தின் டிக்கெட் கிடைக்கப்பெறுகின்ற நிலைமையை தெரிந்துகொள்ள முடியும். டிக்கெட் கிடைக்கப்பெற உள்ள ரயில்நிலையத்தின் மூலம்  டிக்கெட் புக் செய்திடலாம்.

கரக்பூர் ஐ.ஐ.டி., சமீபத்தில் நடத்திய உலக வர்த்தக மாதிரி போட்டியில், இந்த ஆப், முதல் பரிசாக, 1.5 லட்சம் ரூபாய் வென்றது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் ஜூகாத் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி:


டிக்டெக் ஜூகாத் ஆப் பயன்படுத்தி எப்படி ரயில் டிக்கெட் புக் செய்வது என்பது குறித்த விரிவான விளக்கங்களைப் பெற கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.


ரயில் டிக்கெட் புக் செய்ய உதவும் ஆன்ட்ராய்ட் 'ஆப்'
ரயில் டிக்கெட் புக் செய்ய உதவும் ஆன்ட்ராய்ட் 'ஆப்'
Posted by FB Videos on Sunday, February 14, 2016
தொடர்புடைய பதிவு: டாப் 10 ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்ஸ் 2010.

Tags: app for help to rail ticket booking, Android app for Rail Ticket Booking, Ticket Jugaad android app, Rail Ticket Booking, Easy Rail Ticket Booking, Southern Railway Ticket Booking. Railway Ticket Available.

No comments:

Post a Comment

Write Your Comments Here.