logo blog

ஆன்ட்ராய்ட் போனை பாதுகாப்பாக பயன்படுத்த உதவும் 10 பதிவுகள் !

ஆன்ட்ராய்டு போனை பாதுகாப்பாக பயன்படுத்திட உதவி குறிப்புகளின் தொகுப்பு இங்கு இடம்பெற்றுள்ளது. கம்ப்யூட்டரைவிட அதிகளவு இணையம் மற்றும் தொலைத்தொடர்பு தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுபவை ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன். இன்டர்நெட் பயன்படுத்தும் எந்த ஒரு சாதனமும் வைரஸ் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதில்லை.

கம்ப்யூட்டர் என்றால் அதற்கேற்ற வகையில் வைரஸ் புரோகிராம்களை எழுதி, இணைத்துவிடுகின்றனர். ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் போன்களுக்கும் அதற்கு தகுந்த வைரஸ் அப்ளிகேஷன்களை உருவாக்கி இலவச இணைப்பாக இணையவழியில் செலுத்தி விடுகின்றனர். இதனால் இணையத்தின் மூலம் டவுன்லோட் செய்யப்படும் அப்ளிகேஷன்களில் இவலச இணைப்பாக வைரஸ்களும் வந்துவிடுகின்றன.

இதனைத்தவிர்க்க டவுன்லோட் செய்யப்பட உள்ள அப்ளிகேஷனின் நம்பகத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். ப்ளே ஸ்டோர் அல்லது வேறு ஏதாவது மூன்றாம் நபர் இணையதளத்திலிருந்து அப்ளிகேஷனை டவுன்லோட் செய்திடுமுன், அந்த இணைப்பு பற்றிய மதிப்பீட்டை தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்பு அதைத் தரவிறக்கியவர்கள் அதைப் பற்றிய கமெண்ட்ஸ் - ஸ்டார் வேலையூ கொடுத்திருப்பார்கள். அதை வைத்து உண்மையான, நம்பகத்தன்மை வாய்ந்த அப்ளிகேஷன்கள் - மென்பொருள் எவை என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

top android phone tamil tips
தமிழ் ஆன்ட்ராய்ட் போன் டிப்ஸ்

1. லாக் ஆகிவிட்ட ஆன்ட்ராய்ட் போனை மீண்டும் அன் லாக் செய்வது எப்படி? |  UnLock Android Phone

இது பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்னை. ஆன்ட்ராய்ட் போனை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அதை லாக் செய்து வைத்திருப்போம். சில நேரங்களில் குழந்தைகளோ, அல்லது நண்பர்களோ தெரியாமல் Screen Lock எடுக்கத் தெரியாமல் தவறாக செய்துவிட்டால் ஆன்ட்ராய்ட் போன் Lock ஆகிவிடும். மீண்டும் போனை UnLock செய்ய Email Password கேட்கும்.


சரியாக கொடுத்துவிட்டால் அன்லாக் ஆகிவிடும். இல்லையென்றால் மீண்டும் அதை ரீசெட் செய்துதான் ஆக வேண்டும். 

ஆன்ட்ராய்ட் போனை எப்படி அன்லாக் செய்வது?


 • முதலில் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட வேண்டும். 
 • அடுத்து Volume Button, Home Button, Switch Off Button ஆகிய மூன்றையும் ஒரே அழுத்தி பிடிக்க வேண்டும். 
 • இப்பொழுது ஆன்ட்ராய்ட் போனில் Recover Mode தோன்றும். 
 • அதில் Wipe Data Reset என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
 • பிறகு Reboot System Now என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
 • அடுத்து ஆன்ட்ராய்ட் போன் தானாகவே Restart (ஒரு முறை ஆப் ஆகி பிறகு ஆன் ஆகிவிடும். ) 
 • அதன் பிறகு உங்களுடைய இமெயில், பாஸ்வேர்ட் கொடுத்து ஆன்ட்ராய்ட் போனை பயன்படுத்தலாம். 


எப்படி Anroid Phone Reset செய்வது என்பதை காட்டும் வீடியோ

2. ஆன்ட்ராய்ட் போன் | வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க:


எப்படி ஆன்ட்ராய்ட் போனை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது?

உலக அளவில் ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள் இந்தியாவில்தான் அதிகம் என ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. அதே போல ஆன்ட்ராய்ட் போனில் அதிகம் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாடும் இந்தியாதானாம். கடந்த ஆண்டு மட்டும் ஏறக்குறைய 15 லட்சம் ஆன்ட்ராய்ட் போன்கள் வைரசால் பாதிக்கபட்டுள்ளனவாம்.

ஆன்ட்ராய்ட் போன் மூலம் Online Banking செய்வதால், அதை ஹேக்கர்கள் வைரஸ்கள் அனுப்பி முடக்குகின்றனராம். இப்படி உங்களுடைய ஆன்ட்ராய்  போனும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகம் இருக்க கண்டிப்பா ஏதேனும் ஒரு Android Virus Security App பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லையென்றால் ஆன்ட்ராய்ட் போனுக்கும் பாதுகாப்பில்லை..உங்களுடைய பணத்திற்கும் பாதுகாப்பு இல்லை.

அதனால் கண்டிப்பாக ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் போனிலும் Android Security App இருக்க வேண்டும்.


ஆன்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய அவசியமான மென்பொருட்கள்


ஆன்ட்ராய்ட் போனில் கட்டாயம் சில அப்ளிகேஷன்கள் இருக்க வேண்டும். அவை ஆன்ட்ராய்ட் போன் பாதுகாப்பு மற்றும் முக்கியமான பணிகளை மேற்கொள்ள பயன்படும் Apps கள்தான். இவைகள் இருந்தால் தான் ஒரு ஆன்ட்ராய்ட் போன் முழுமை பெறும். 


3. ஆன்ட்ராய்ட் ரூட்டீங் | Android Rooting


ஆன்ட்ராய்ட் போனை நமக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும் முறைக்கு பெயர்தான் ஆன்ட்ராய்ட் ரூட்டிங்.  ஆன்ட்ராய்ட் போனில் உள்ள System File களை Android தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். இதை காப்பி செய்யவோ மாற்றம் செய்யவோ முடியாது. 

இதனால் சில Apps களை இதில் நிறுவ முடியாமல் போகும். Android Root செய்யப்பட்ட மொபைல்களில் எல்லா வித App களையும் நிறுவிக்கொள்ளலாம். கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் நீங்கள் நினைத்த ஆப்ஸ் களை எல்லாம் ஆன்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் Android Phone -ஐ Root செய்தே ஆக வேண்டும். 

ஆன்ட்ராய் போன் ரூட் செய்யும் வழிமுறை


ஆன்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்வதற்கு உங்களிடம் இருக்க வேண்டியவை: 

 • ஒரு கம்ப்யூட்டர் இருப்பது அவசியம். 
 • மொபைல் டூ கம்ப்யூட்டர் இணைக்க அந்த மொபைலுக்கான Data Cable இருக்க வேண்டும். 
 • மொபலுக்கான USB Driver Software. (ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் தேவையில்லை) 
 • அதற்கு அடுத்து ஆன்ட்ராய்ட் போனை "ரூட்" செய்வதற்கான மென்பொருள் - Android Root Software.


லிங்கை கிளிக் செய்து சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்துகொள்ளவும். 

இப்பொழுது உங்களுடைய மொபைலில் சில செட்டிங்ஸ் வேலைகள் செய்ய வேண்டும். 
1. மொபைலில் Settings செல்லவும்
2. EVELOPER OPTIONS ==> USB DEBUGGING ==> ENABLE கொடுக்கவும்.
3. இப்பொழுது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த Kingo Android Root Software ஓப்பன் செய்து வைத்துக்கொள்ளவும்.
4. டேட்டா கேபிளை ஆன்ட்ராய்ட் போனில் இணைத்து, கம்ப்யூட்டரின் USB போர்ட்டில் கேபிளை இணைக்கவும். 
5. சிறிது நேரத்தில் Android Root Software உங்களுடைய போன் மாடல் எண்ணை காட்டி, Root செய்யவா என கேட்கும். 
6. நீங்கள் அனுமதி கொடுத்தவுடன் RooTing நடைபெறும். 2 நிமிட முடிவிற்கு பிறகு உங்களுடைய போன் ரீ ஸ்டார்ட் ஆகும்.
7. இப்பொழுது போன் மெனுவில் Super User என்ற மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். 
8. அப்படி இருந்தால் உங்களுடைய போன் "ரூட்" செய்யப்பட்டுவிட்டது என்று பொருள். 


இனி, நீங்கள் விரும்பிய அப்ளிகேஷனை உங்களுடைய "ஆன்ட்ராய்ட்" போனில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். 

ஆன்ட்ராய்ட் போன் ரூட் செய்வதால் ஏற்படும் தீமைகள்


ஆன்ட்ராய்ட் போனை ரூட் செய்வதில் இரண்டு பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். ஒன்று வைரஸ் பிரச்னை... இரண்டு Warrenty பிரச்னை. ரூட் செய்யப்பட்ட போன்களுக்கு எந்த கம்பெணியும் வாரண்டி தருவதில்லை. ஆன்ட்ராய் போன் ரூட் செய்யப்பட்டதால், அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் கேள்வி குறி ஆகிவிடும். இதனால் எந்த ஒரு அப்ளிகேஷன் மூலமும் மிக எளிதாக வைரஸ் பரவும்.

ஆன்ட்ராய்ட் போன் வேகம் குறையாமல் இருக்க


ஆன்ட்ராய்ட் போன் வேகம் குறையாமல் புதிய போன் வேலை செய்ய ஆப்ஸ் உள்ளது. இதைப் பயன்படுத்தினால், தேவையில்லாத அப்ளிகேஷன்கள் பின்னணியில் ரன் ஆவதை தடுத்து நிறுத்தும். போனை பயன்படுத்தாத நேரத்தில் ஏற்கனவே ஓப்பன் செய்து ரன் ஆகி கொண்டிருக்கும் அப்ளிகேஷன்களை நிறுத்தும். இதனால் பேட்டரி வீண் ஆவது தடுக்கப்பட்டு பேட்டரி சேமிக்கப்படும். 

இது பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள "ஆன்ட்ராய்ட் போன் வேகம் குறையாமல் இருக்க பயன்படும் அப்" படிக்கவும். 


இதுபோன்ற ஆன்ட்ராய்ட் டிப்ஸ் தமிழில் படிக்க கிளிக் செய்யவும் 

Android Phone Tips and Trick in Tamil Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.