logo blog

லேப்டாப் திரையை டச் ஸ்கிரீனாக மாற்றும் சாதனம்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் சாதாரண திரை கொண்ட லேப்டாப் ஸ்கிரீனை "டச் ஸ்கிரீன்" ஆக மாற்ற புதிய சாதனம் வெளிவந்துள்ளது. லேப்டாப்பின் USB Port ல் இணைக்கப்பட்டு செயல்படுமாறு "பட்டை" வடிவத்தில் உள்ள இந்த  இதை Air Bar என குறிப்பிடுகின்றனர். இதை லேப்டாப் திரையின் அடிபாகத்தில் ஒட்டி பயன்படுத்த வேண்டும்.

laptop screen to touch screen
லேப்டாப் ஸ்கிரீனை டச் ஸ்கிரீனாக மாற்ற

லேப்டாப்பின் திரைக்கு கீழாக "ஏர் பார்" பட்டையை ஒட்டிய பிறகு, அதிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் "சாதாரண லேப்டாப்" திரையை "Touch Screen" ஆக மாற்றுகிறது. தொடர்ந்து அதில் பணியாற்றிய பிறகு மீண்டும் அந்த பட்டையை நீக்கிவிடலாம்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த "Neonode" என்ற நிறுவனம் இப்புதிய சாதனத்தை தயாரித்துள்ளது. இதன் விலை அமெரிக்க டாலரில் 49$ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ 3000 ரூபாய் பெறுமதியாக இருக்கும்.

இப்புதிய சாதனத்தின் வரவின் மூலம் சாதாரண லேப்டாப் திரையை கூட "டச் ஸ்கிரீன்" திரையாக பயன்படுத்த முடியும். புதிய டச் ஸ்கிரீன் லேப்டாப் வாங்க முடியாதவர்களுக்கு இது ஒரு வரபிரசாதமாக அமையும்.

இப்புதிய டச் ஸ்கிரீன் மேக்கர் எப்படி செயல்படுகிறது என்பதை காட்டும் வீடியோ.


Tags; Laptop touch screen, Air Bar to make touch screen, ordinary screen to touch screen, Touch Screen.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.