ஸ்லோ இன்டர்நெட் கனெக்சனில் பேஸ்புக் பயன்படுத்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் - Tamil Tech

Jan 31, 2016

ஸ்லோ இன்டர்நெட் கனெக்சனில் பேஸ்புக் பயன்படுத்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்

பேஸ்புக். உலகின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஓர் சமூக வலைத்தளம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, இரவு பகல் முழுவதும் நேரம் காலம் பார்க்காமல் அதிலேயே கடலை போட்டு (?)  மூழ்கி கொண்டிருக்கும் ஓர் அற்புதமான இணையதளம்.

Facebook Android app
Facebook Lite android App

பேஸ்புக் பயன்படுத்த இன்டர்நெட் கனெக்சன் மிக முக்கியம். சில நேரங்களில் ஸ்லோ கனெக்சனால் பேஸ்புக் பயன்படுத்த முடியாது. இந்தியாவில் மட்டுமல்ல.. வளர்ந்த நாடுகளில் கூட இன்டர்நெட் கனெக்சன் பிரச்னை உள்ளது. இதை மனதில் வைத்துதான் "பேஸ்புக்" நிறுவனம் எந்த நேரத்திலும், தங்கு தடையின்றி பேஸ்புக் பயன்படுத்த புதிய ஆப்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது.


252 KB அளவே உள்ள இந்த புதிய ஆப்சில், News feed, Status Update, Photos Upload, Notifications என எல்லாவற்றையும் தங்கு தடையின்றி பெறலாம். இன்டர்நெட் - வைபை கனெக்சன் ஸ்லோவாக இருந்தாலும், மேற்கண்ட அப்டேட்களை தடையின்றி பெற முடியும் என்பதுதான் இந்த அப்சின் சிறப்பு.

ஆன்ட்ராய்டு மொபைலில் மட்டுமே இந்த ஆப்சை பயன்படுத்த முடியும். இதை கூகிள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

"லைட்" ஆப்ஸ் டவுன்லோட் செய்ய சுட்டி: 

No comments:

Post a Comment

Write Your Comments Here.