logo blog

ஆன்ட்ராய்ட் போன் வைரஸ் நீக்க பயன்படும் 6 மென்பொருட்கள் !

ஆன்ட்ராய்ட் போன் ஆன்டி வைரஸ் |  6 Best Android Mobile Phone Security Apps


ஆன்ட்ராய்ட் போன் எந்தளவுக்கு பிரபலமாகி கொண்டு வருகிறதோ, அந்தளவுக்கு அதில் மல்வேர் மற்றும் வைரஸ்களும் பெருகி வருகிறது. ஒரு சில ஆன்ட்ராய்ட் போன் பயனர்களுக்கு இது கண்டிப்பாக தெரியும்.

best android phone security
சிறந்த ஆன்ட்ராய்ட் போன் ஆன்டி வைரஸ்

ஆன்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் கூகிள் அக்கவுண்ட்டுடன் ஒருங்கிணைப்பட்டுள்ளது. இதனால் மால்வேர், வைரஸ் பிரச்னைகள் கண்டிப்பாக வரும். அதனால்தான் ஒவ்வொருவரும் தங்களுடைய டேப்ளட் | ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் ஆன்டி வைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும்.

ஆன்ட்ராய்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் | Android Anti-Virus Software

ஆன்ட்ராய்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள் நிறைய உள்ளன. அவற்றில் மிகச்சிறந்த மற்றும் முக்கியமான ஆன்ட்டி - வைரஸ் மென்பொருட்களை மட்டும் இங்கு வரிசைபடுத்தி கொடுத்துள்ளோம்.

1. Avast - அவாஸ்ட்

இது மிகச் சிறந்த "Android Mobile Security" மென்பொருள் / அப்ஸ். இது உங்களுடைய சொந்த டேட்டாவை பாதுகாக்கிறது. நீங்கள் பிரௌஸ் செய்யும்போது வைரஸ் உள்ள வெப்சைட்களை அடையாளப்படுத்தி காட்டுகிறது.

இதில் உள்ள மிகச்சிறந்த பயன் "Firewall and Anti Theft".


2. AVG - AntiVirus - ஏவிஜி ஆன்ட்டி வைரஸ்

மற்றுமொரு சிறந்த ஆன்ட்ராய் போன் ஆன்ட்டி-வைரஸ் இது.  இது மொபைலில் உள்ள Insfection - ஐ கண்டுபிடித்து, சரி செய்கிறது. என்னென்ன இன்பெக்சன் எதில் எதில் உள்ளது என்பதை வகைபடுத்தி,  வரிசைப்படுத்தி காட்டுகிறது.

3. Dr. Web Anti-Virus - டாக்டர் வெப் ஆன்ட்டி வைரஸ்

 மல்வேர், ஆன்ட்டி வைரஸ் தாக்கத்திலிருந்து உங்களுடைய ஸ்மார்ட் போன் டேட்டா வை பாதுகாக்கிறது டாக்டர் வெப் ஆன்ட்டி வைரஸ் புரோகிராம்.

இது இயங்கும்போது பேட்டரி லெவல் குறைவது இல்லை. இதுதான் இந்த ஆன்ட்ரி வைரசில் உள்ள "பெஸ்ட்" சிறப்பம்சம்.

4. லுக் அவுட் மொபைல் ஆன்ட்டி வைரஸ் | Look Out Mobile Security

 டேப்ளட், அன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான மற்றுமொரு சிறந்த Anti - Virus "லுக் அவுட்" மொபைல் செக்யூடிரிட்டி மென்பொருள்.

இது ஸ்பேம், வைரஸ், இன்ஸ்பெக்சன் போன்றவற்றிலிருந்து மொபைலை பாதுகாப்பு அளிக்கிறது. இதில் Shedule Scan  வசதி உண்டு.

ஒருவேளை உங்களுடைய மொபைல/ டேப்ளட் தொலைந்து போனால் கண்டுபிடிக்க உதவும்  "Missing Devise Feature" வசதி இதில் உண்டு.

5. Trend Micro Mobile Security - ட்ரெண்டு மைக்ரோ மொபைல் செக்யூரிட்டி

உங்களுடைய மொபைல் டேட்டா இழப்பை தடுத்து, ஸ்பைவேர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கிறது "ட்ரென்ட் மைக்ரோ" மொபைல் செக்யூரிட்டி. மால்சியஸ் லிங்க்குகளை "ஹைலைட்" செய்யும் டைட்டானியம் செக்யூரிட்டி வசதி, வெப்சைட் அச்சுறுத்தல்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

6. Comodo Mobile Security and Antivirus - கொமோடோ மொபைல் செக்யூரிட்டி


வைரஸ், ஸ்பேம் மற்றும் மொபைல் டேட்டா இழப்புகளை தவிர்க்க பயன்படும் மற்றுமொரு பயன்மிக்க ஆன்ட்ராய்ட் மொபைல் ஆன்ட்டி வைரஸ் அப்ளிகேஷன் இது.

இதில் உள்ள "Health Check" பட்டனை அழுத்தினால் உங்களுடைய ஸ்மார்ட் போனை "ஸ்கேன்" செய்து அதில் உள்ள வைரஸ், ஸ்பேம்களை கண்டறிந்து நீக்குகிறது.

நீங்கள் பிரௌஸ் செய்யும்போது "ஆன்லைன் இன்ஸ்பெக்சன்" ஏதேனும் இருந்தால், அதை கண்டுபிடித்து காட்டுகிறது.

மேற்கண்ட அப்ளிகேஷன்கள் அனைத்தும் " ஆன்ட்ராய்ட் போனுக்கான மிகச் சிறந்த 6 ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள்" . இவை அனைத்தும் "Google Play Store" முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. டவுன்லோன் செய்ய சுட்டி:

Go To Google Play Store for Android Mobile Security Apps

தொடர்புடைய பதிவு: ஆன்ட்ராய்டு போனை பாதுகாப்பாக பயன்படுத்திட உதவும் குறிப்புகள் !


Tags: Android Phone Virus Security, Free Anti-Virus for Android Smartphone and Tablet, Free Anti-Virus for Smartphone and tablet. Tamil Android security software, Android Phone tips in Tamil, Android Mobile Antivirus.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.