logo blog

பிரௌசரில் தேவையற்ற தொந்தரவுகளை கொடுக்கும் விளம்பர மால்வேர்களை நீக்கும் வழிமுறைகள் !

இலவச மென்பொருள் டவுன்லோட் செய்து பயன்படுத்தும்போது அதனுடன் ஒட்டிக்கொண்டு வரும் மல்வேர் புரோகிராம்களால் சில நேரங்களில் பிரச்னை ஏற்படக்கூடும். அதுபோன்றதொரு மால்வேர் புரோகிராம்தான் Search safe finder.

method for remove safefinder virus
Safe Finder Malware Removal


இது ஒரு பிரௌசர் Hijacker Program ஆகும். இது உங்களுடைய பிரௌசரில் உள்ள "சர்ச் என்ஜின்" URL ஐ மாற்றி, தன்னுடைய பக்கதின் URL நிரப்பிவிடும்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் இன்டர்நெட் கனெக்ட் செய்து, பிரௌசரை ஓப்பன் செய்யும்பொழுதும் Search safe finder பக்கம்தான் தோன்றும். பிரௌசரில் புது பக்கத்தை திறந்திடும்பொழுது தானாகவே வேறொரு பக்கத்திற்கு ரீடைரக்ட் செய்யும்.

தேவையில்லாத இணைய பக்கங்களையும், விளம்பரங்களையும் தோன்றச் செய்து எரிச்சலூட்டும்.  இதை உங்களுடைய கம்ப்யூட்டர், பிரௌசரில் முற்றிலும் நீக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம்.


Also Read: குரோம் பிரௌசரில் Do Search மால்வேர் நீக்குவது எப்படி?

search.safefinder மல்வேர் நீக்குவது எப்படி?


இதை நீக்குவதற்கு முதலில் அந்த புரோகிராம் Uninstall செய்ய வேண்டும். 

1. Start பட்டனை அழுத்தி Control Panel செல்லவும்.
2. Uninstall a Program கிளிக் செய்யவும்
3. தோன்றும் பக்கத்தில் "Safe finder Program" என்பதை தேடி, அதன் மீது ரைட் கிளிக் செய்து Uninstall கொடுக்கவும்.
search safefinder removal

பிரௌசரில் search.safefinder நீக்கும் முறை:


கூகிள் குரோம்: 

பிரௌசரின் வலது மேல் பக்கத்தில் இருக்கும் மூன்று கோடுகள் இருக்கும் ஐகானின் மீது கிளிக் செய்யவும்.
settings செல்லவும். அதில் Extension கிளிக் செய்து தேவையில்லாத Safe Finder உட்பட தேவையில்லாத Extension களை நீக்கவும். 
பிறகு settings கிளிக் செய்து, show advance Settings கிளிக் செய்து, அந்த பக்கத்தில் இறுதியில் உள்ள Reset Settings கிளிக் செய்யவும். 
முடித்த பிறகு பிரௌசரை "ரீஸ்டார்ட்" செய்யவும். 


ஃபயர்பாக்ஸ்

பயர்பாக்ஸ் பிரௌசரில் மெனுபாரில் உள்ள Tools==> Add Ons கிளிக் செய்யவும். அல்லது Ctrl+Shift+A அழுத்தவும்.

இப்பொழுது தோன்றும் பக்கத்தில் இடது புறத்தில் உள்ள Extension என்பதை கிளிக் செய்து, Safe Finder உட்பட தேவையில்லாத Extension நீக்கவும். 

பிறகு, மெனுபாரில் Help கிளிக் செய்து, TroubleShooting Information கிளிக் செய்து "Reset Firefox" அல்லது "Refresh Firefox" கொடுக்கவும். 

இறுதியாக FireFox பிரௌசரை ரீஸ்டார்ட் செய்யவும். 


இறுதியாக செய்ய வேண்டியவை: 

இவ்விரண்டு வழிமுறைகளையும் செய்தும் மீண்டும் Seach safefinder பக்கம் உங்கள் பிரௌசரில் தோன்றினால், 

உங்களுடைய டெஸ்க்டாப்பில் உள்ள "Browser Shortcut" மீது ரைட் கிளிக் செய்து, Properties செல்லவும். அதில் ஃபயர்பாக் பிரௌசர் எனில் Target  பெட்டியில் "C:\Program Files (x86)\Mozilla Firefox\firefox.exe" இப்படி இருக்க வேண்டும். இதற்கு மேல் "C:\Program Files (x86)\Mozilla Firefox\firefox.exe"Seach safefinder இப்படி ஏதேனும் கூடுதலாக இருந்தால் அவற்றை அழிக்கவும். பிறகு Apply கொடுத்து ஓ.கே கொடுக்கவும். 

அதே போல கூகிள் குரோம் பிரௌசர் ஷார்ட் கட் லும் ரைட் கிளிக் செய்து ப்ராப்ர்ட்டீஸ் சென்று Target பெட்டியை சரி பார்க்கவும். அதில் "C:\Program Files (x86)\Google\Chrome\Application\chrome.exe" என இருக்க வேண்டும். அதனுடன் கூடுதலாக "C:\Program Files (x86)\Google\Chrome\Application\chrome.exe"seach saffinder.com

இப்படி ஏதேனும் இருப்பின் அவற்றை நீக்கி Apply கொடுத்து OK கொடுக்கவும். 

இறுதியாக உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்யவும். 

இப்பொழுது உங்களுடைய பிரௌசரில் இணைந்திருந்த Search.Safefinder மால்வேர் நீங்கி இருக்கும்.

Also Read: Ask மால்வேர் நீக்குவது எப்படி?

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.