logo blog

ப்ளாக்கரில் புதிய விட்ஜெட் வசதி - Featured Post Widget

ப்ளாக்கரில் தொடர்ந்து புதிய வசதிகளை இணைத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது Blogger Featured Post Widget இணைந்துள்ளது.





உங்களுடைய ப்ளாக்கர் தளத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சிறந்த போஸ்ட்டை Featured Post Widget ல் இணைத்து முகப்பு பக்கத்தில் சிறப்பு போஸ்ட்டாக காட்ட முடியும்.

செய்முறை:

1. Blogger.Comல் லாகின் செய்து  கொள்ளவும்.
2. Layout ==> Add a Gadget ==> Featured Post தேர்ந்தெடுக்கவும்.
3. தோன்றும் பெட்டியில் உங்கள் வசதிக்கு ஏற்ப டிக் ஏற்படுத்திக்கொள்ளவும்.
4. Select a featured post என்ற தலைப்பின் கீழ் All Labels என்பதில் கீழ் சமீபத்திய பதிவுகள் காட்டும்.  அதில் குறிப்பிட்டு காட்ட வேண்டிய பதிவொன்றின் மீது கிளிக் செய்யவும். தற்பொழுது அந்த பதிவு Preview பகுதியில் Featured Post ஆக காட்டும்.
5. இறுதியாக கீழுள்ள Save பட்டனை அழுத்தி சேமித்துவிடலாம்.
6. இப்பொழுது அந்த Featured Post உங்களுடைய ப்ளாக்கரில் முகப்பு பக்கத்தில் தோன்றி இருக்கும்.
new-featured post widget

new featured post widget

குறிப்பு: All Labels என்பதை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் லேபிளில் உள்ள ஏதேனும் ஒரு பதிவை தேர்ந்தெடுக்கலாம். அல்லது All Labels ன் அருகில் உள்ள Search பாக்சில் நீங்கள் விரும்பும் பதிவின் தலைப்பை / வார்த்தைகளை கொடுத்து தேடி, அந்த இடுகையை Featured Post ஆக தேர்ந்தெடுத்துவிடலாம். பதிவை தேர்ந்தெடுத்த பிறகு SAVE கொடுக்க மறக்க வேண்டாம்.


Share this

2 comments

என் ப்ளாகில் ஃபாலோவர் விட்ஜெட் எப்படி இணைக்க வேண்டும்??

Blogger -ல் லாகின் செய்து கொள்ளுங்கள்.
Layout ==> add a gadget ==> More gadgets ==> Followers

More Gadgets கிளிக் செய்து, Scroll down செய்தால் அதில் இறுதியில் Followers விட்ஜெட் இருக்கும். இணைத்துக்கொள்ளுங்கள்.

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.