logo blog

AdBlock நீட்சியை தடை செய்வது எப்படி?

How to Stop or block ad blocker from prevent ads in website

வெப்சைட்டில் உள்ள விளம்பரங்களை தடை செய்யப் பயன்படும் நீட்சி AD Block. இந்த நீட்சியை பிரௌசரில் இணைத்துக்கொண்டால் வெப்சைட்டில் விளம்பரங்கள் தோன்றாது. இது ஒரு வகையில் பயனுள்ளதாக இருந்தாலும்,

விளம்பர வருமானத்தை நம்பி மட்டுமே நடத்தப்படும் சில குறிப்பிட்ட வெப்சைட்களுக்கு வருமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் அதுபோன்ற வெப்சைட்டுகள் விளம்பர தடுப்பான் நீட்சியை (Adblocker) தற்காலிகமாக தடை செய்ய கோரும். அல்லது அந்த குறிப்பிட்ட வெப்சைட்டை மட்டும் ADBLOCK நீட்சியிலிருந்து விலக்கு அளிக்க கோரும்.

அந்த வெப்சைட்டை பார்க்க வேண்டுமெனில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாக AdBlock லிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த வெப்சைட்டை பார்க்க முடியும். அதில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகளை படிக்க முடியும்.

AD Blocker ஐ தற்காலிகமாக நிறுத்த


  • உங்கள் பிரௌசரில் இணைக்கப்பட்டுள்ள Ad Blocker நீட்சியின் படத்தின் மீது கிளிக் செய்க.
  • அதில் Pause AdBlock என்பதை டிக் செய்து தற்காலிகமாக AD Blocker செயல்படாமல் நிறுத்தி வைக்கலாம். 

how remove adblock extension
AdBlock நீட்சியை நீக்குவது எப்படி?

Ad Blocker -ல் குறிப்பிட்ட வெப்சைட்களை மட்டும் அனுமதிக்க



  • Adblocker நீட்சி பட்டனை அழுத்தவும்.
  • அதில் Option கிளிக் செய்க
  • அடுத்து திறக்கும் பக்கத்தில் Show ads on webpage or domain என்பதை கிளிக் செய்க.
  • அதன் கீழ் இருக்கும் பெட்டியில் விளம்பர விதிவிலக்கு அளிக்க செய்ய விரும்பும் வெப்சைட்டின் முகவரியை சேர்க்க. 
  • இறுதியாக Ok பட்டனை அழுத்துக. 
how to remove adblock



remove adblock extension


அவ்வளவுதான். இதைச் செய்து முடித்தவுடன் விலக்கு கொடுக்கப்பட்ட வெப்சைட்கள் விளம்பரங்களுடன் தோன்றும். அவற்றை வழக்கம்போல பார்த்து, படிக்க முடியும். இதனால் வெப்சைட் வைத்திருப்பவர்களுக்கும் வருமான பாதிப்பு ஏற்படாது.

பார்வையாளர்களும் அந்த வெப்சைட்டை எந்த வகையிலும் தடையில்லாமல் பார்க்க முடியும்.

Tags: Adblock tips, Tamil Internet Tips, how to stop ad blocker or pause, Tamil Computer Internet Tips.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.