logo blog

ப்ளாக் ஆரம்பித்து பணம் சம்பாதிப்பது எப்படி? | Money Making Tips

How to make a successful blog on blogger


ப்ளாக் [BLOG]: இந்த ஆங்கில சொல்லிற்கு தமிழில் வலைப்பூ, வலைமனை, வலை குடில் என பெயரிட்டுள்ளனர். தற்பொழுது வலைப்பூ என்ற சொல்லே பெருமளவு தமிழ் வலைப்பதிவர்கள் பயன்படுத்துகின்றனர்.
make money through blog
ப்ளாக்கில் பணம் சம்பாதிப்பது

ப்ளாக்கர் [BLOGGER] : வலைப்பூ [Blog]ஆரம்பிக்க பயன்படும் கூகிள் ஆரம்பித்த இலவச சேவை இணையதளம்.  இது Blogger.com என்ற டொமைனில் இயங்குகிறது. மற்றுமொரு பாப்புலர் வெப்சைட் wordpress.com.

Blogger, Wordpress இவை இரண்டிலும் மக்கள் வலைப்பூ எழுத பெருமளவு பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இவற்றில் Blogger தளம்தான் சிறந்த ப்ளாகிங் சர்வீஸ் கொடுக்கிறது. முற்றிலும் இலவசமானது.

ப்ளாக்கரில் கூடுதல் வசதியாக ப்ளாக் மூலம் சம்பாதிக்கும் [Earn Money Through Blog] வசதியும் [Google Adsense] உண்டு. எனவே ப்ளாக்கர் மூலம் வலைப்பூ ஆரம்பிப்பதே சிறந்ததாக இருக்கும்.

ப்ளாக் தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டியவை:

ப்ளாக்கில் என்ன எழுத போகிறோம் என்பதை முதலில் முடிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒன்றை பற்றி மட்டுமே எழுதுவதென்றால், அது குறித்த தகவல்களை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உதாரணமாக, Tech Blog எழுத போகிறீர்கள் என்றால், எதைப் பற்றிய  "டெக் ப்ளாக்" என்பதை தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக Computer Tech Blog.

கம்ப்யூட்டரைப் பற்றி அக்கு வேறு ஆணிவேராக உங்களுக்குத் தெரியும் என்றால் அதைப்பற்றி எழுத முடிவெடுக்கலாம். எதைப் பற்றி எழுதினாலும் அதைப் பற்றிய முழுமையாக அறிவு இருக்க வேண்டும். அது தொடர்பான செய்திகள் / தகவல்களை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

போட்டி: ப்ளாக்கில் தற்பொழுது அதிக போட்டி நிலவுகிறது. இதற்கு முன்பே பல ஜாம்பவான்கள் Tamil Computer Tech எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வலைப்பூ பிரபலமடைந்து நிறைய வாசகர்களை பெற்று இருக்கும். அவர்கள் மாதிரியே நீங்களும் பிரபலம் ஆக வேண்டுமென்றால் சிறிது நாளாகும். அதுவரைக்கும் பொறுமை தேவை.

வித்தியாசமான பதிவுகள்:

ப்ளாக்கில் எழுதும் கட்டுரைகள் வித்தியாசமாக, எளிதாக புரியும்படி இருக்க வேண்டும். வாசகர்களுக்கு பிடித்த மாதிரி கட்டுரைகள் இருந்தால் கட்டாயம் வாசகர்கள் வருகை புரிவார்கள். மற்ற ப்ளாக்கர்கள் எழுதுவதை போல இல்லாமல், உங்களது எழுத்து நடை மற்றும் உள்ளடக்கங்கள் தனிப்பட்டதாக [UNIQUE CONTENT] ஆக இருக்க வேண்டும். அவ்வளவுதான் விடயம்.

ப்ளாக் வகைகள் |Type of Blog

டெக் ப்ளாக்தான் மட்டும்தான் எழுத வேண்டுமா? என்றால் நிச்சயம் இல்லை.உங்களுக்கு விருப்பமானதை எழுதலாம். சினிமா விமர்சனம் [MOVIE REVIEW], கவிதை, பொது கட்டுரை, விழிப்புணர்வு, உலகில் நடக்கும் வித்தியாசமான நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள், விவாதங்கள் இப்படி எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்.

உங்களது ஆக்கங்கள்/ படைப்புகள் பிடித்திருந்தால், ஒரு முறை உங்களுடைய ப்ளாக்கிற்கு வருகை தரும் வாசகர்கள் மீண்டும் வருகை தர ஆரம்பிப்பார்கள். அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் கட்டுரைகள் [BLOG POST] இருக்க வேண்டும்.

டைமிங் முக்கியம் 

கால கிரமமாக பதிவிடுவது அவசியம். ஒரு நாளைக்கு ஒரு பதிவு எழுதி வெளியிட நினைத்தால், தொடர்ந்து நாள் தவறாமல் எழுத வேண்டும். அல்லது முறை வைத்தும் எழுதலாம். வாரத்திற்கு மூன்று  அல்லது ஐந்து பதிவுகள் என தீர்மானித்து எந்தெந்த நாட்களில் எழுதி வெளியிலாம் என தீர்மானம் செய்யலாம்.

உதாரணமாக வாரத்திற்கு 3 பதிவுகள் எனில் திங்கள் , வியாழன், சனி இப்படி நாட்களை தேர்ந்தெடுத்து, அந்த நாட்களில் பதிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் பதிவுகளை வெளியிட [PUBLISH POST] வேண்டும்.  தொடர்ச்சியாக சரியான நேரத்தில் பதிவுகளை வெளியிடப்படுவது அவசியம். அப்பொழுதுதான் வாசகர்கள் இந்த நேரத்திற்கு உங்களுடைய - இந்த வலைப்பூவில் புதிய பதிவுகள் வெளிவந்திருக்கும் என்ற மனப்பான்மையை பெற்று, சரியான நேரத்திற்கு வருகை தருவார்கள்.

எழுதும் கட்டுரை உள்ளடக்கத்தில் தலைப்புகள் [HEADING], உப தலைப்புகள் (Sub Heading), புல்லட் பார்மட்டீங்க, Block Quotes  போன்ற சில ஜிகினா வேலைகள் செய்ய வேண்டும். குறிப்பாக பதிவின் தலைப்பு கவர்ச்சியாகவும் [Catchy Words], பதிவிற்கு தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும்.

அப்படி செய்தால் படிக்கும் வாசகர்களை கவருவதாக இருக்கும். பதிவும் அழகாக இருக்கும். கூடவே கூகிளுக்கும் பிடிக்கும். இதை SEO - Search Engine Optimization என குறிப்பிடுவார்கள். இதைப்பற்றி விரிவாக மற்றொரு பதிவில் பார்ப்போம்.

எழுதும் பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்தால் போதும். தானாவே உங்களுக்கென ஒரு எழுத்து நடை [Writing Style]வந்துவிடும். அப்புறம் என்ன... உங்களுக்கான வாசகர்கள் தொடர்ந்து உங்களுடைய வலைப்பூவிற்கு வரத் தொடங்கிவிடுவார்கள். ஒரு நாள் உங்கள் பதிவை படிக்காமல் போனாலும் கூட "அடடா..இன்று மிஸ் பண்ணிட்டோமே" என வருத்தப்படுவார்கள். எப்படியும் அடுத்த நாள் மறக்காமல் படித்துவிடுவார்கள்.

வாசகர்களின் எண்ணங்களை புரிந்துகொள்ள வேண்டும். சரியான முறையில் எழுத வேண்டும். தலைப்பு ஒன்றை வைத்துவிட்டு, அதற்கு தொடர்பில்லாத செய்திகளை, தகவல்களை எழுதியிருக்க கூடாது. அது வாசகர்களை வெறுப்படைய செய்யும். என்ன எழுதுகிறார்களோ, அதற்கு பொருத்தமான தலைப்பினை வைக்க வேண்டும். அந்த தலைப்பில் உள்ள வார்த்தைகள் உள்ளடக்கத்தை உணர்த்துவதாக அமைய வேண்டும். இப்படி எழுதுவது On Page SEO விற்கு உதவும். இதைப்பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

ப்ளாக்கர் டெம்ப்ளேட்:

ப்ளாக் ஆரம்பிக்க முடிவெடுத்த உடனே, என்ன எழுதுகிறீர்களோ அதற்கு பொருத்தமான டெம்ப்ளேட் தேர்ந்தெடுப்பது முக்கியம். Blogger வழங்கும் Default Blogger Template களையும் பயன்படுத்தலாம். இதிலும் Simple, Picture, Dynamic போன்ற வித்தியாசமான டெம்ப்ளேட்கள் உண்டு. அவற்றையும் பயன்படுத்தலாம்.

தனி நபர் வடிவமைத்த இலட்சக்கணக்கான Blogger Template இன்டர்நெட்டில் இலவசமாக கிடைக்கிறது. அவற்றில் பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்தும் பயன்படுத்தலாம்.

புதிய ப்ளாக் தொடங்குவது குறித்த விரிவான விபரங்களை தெரிந்துகொள்ள   "ப்ளாக் தொடங்குவது எப்படி" என்ற பதிவை வாசிக்கவும்.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.