logo blog

பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

எந்த ஒரு சாப்ட்வேர், பிரௌசர் எக்ஸ்டன்சன்  இல்லாமல், ஃபேஸ்புக் வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்ய முடியும்.

தற்பொழுது யூடியூப்புக்கு நிகராக பேஸ்புக் வீடியோக்கள் பிரபல மடைந்து வருகின்றன. இதனையடுத்து பேஸ்புக்கும் வீடியோ பக்கங்களில் சில வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. உதாரணமாக நீங்கள் ஒரு பேஸ்புக் வீடியோவை தனிப்பட்ட பக்கத்தில் பார்க்கும்போது, அது தொடர்புடைய வீடியோக்களை வலது புறம், யூடியூபை போன்றே பட்டியலிட்டு காட்டும்.
அன்றாடம் பேஸ்புக்கில் விதவிதமான வீடியோக்கள் பயனர்களால் பதியபட்டு வருகிறது.  அதில் விருப்பமான Facebook Video -ஐ டவுன்லோட் செய்ய Browser Extension  அல்லது Facebook Videos down-loader பயன்படுத்தபட்டு வந்தது.

இந்த இரண்டுமே இல்லாமல்,

 விரைவாக பேஸ்புக்கில் இருந்தவாறே எந்த ஒரு சாப்ட்வேரும் இல்லாமல் அந்த வீடியோவை டவுன்லோட் செய்ய முடியும்.

செய்முறை:

1. டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோவை Play செய்யவும்
2. வீடியோவின் மீது ரைட் கிளிக் செய்து Show Video Url என்பதை சொடுக்கவும்.
3. காட்டப்படும் Video URL ஐ காப்பி செய்து கொள்ளவும்.
4. காப்பி செய்த FaceBook Video URL ஐ பிரௌசரில் புது Tab ஓப்பன் செய்து Address Bar - ல் Past செய்யவும்.
5. பிறகு அதில் www என்பதற்கு பதிலாக (நீக்கிவிட்டு) m கொடுத்து Enter அழுத்தவும்.
6. இப்பொழுது வீடியோ தோன்றும். அதன் மீது ரைட் கிளிக் செய்து Save video as என்பதை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான். நீங்கள் விரும்பிய பேஸ்புக் வீடியோ எந்த ஒரு சாப்ட்வேர் இன்றி எளிதாக டவுன்லோட் ஆகும்.

விபரத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும்:


Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.