logo blog

பென்டிரைவ் வழியாக கம்ப்யூட்டருக்கு வைரஸ் பரவுவதை தடுக்கும் வழிமுறைகள் !

கம்ப்யூட்டர் பயன்படுத்தாதவர்கள் கூட பென் டிரைவ் உபயோகிக்கும் காலம் இது. ஆடியோ, வீடியோ, டாகுமெண்ட்கள், போட்டோக்கள் என பென் டிரைவில் பதிந்து சேமிக்கப்படும் விடயங்கள் ஆயிரம்.

how to stop virus through pendrive
பென் டிரைவிலிருக்கும் வைரஸ் கம்ப்யூட்டருக்கு பரவாமல் தடுப்பது எப்படி?

அவற்றை நண்பர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்த கொடுக்கும்போதுதான்  "வைரஸ்" பிரச்னை தொடங்குகிறது. கம்ப்யூட்டரில் "பென் டிரைவ் மூலம் வைரஸ்" பரவுவதற்கு முக்கியமான காரணம் பென் டிரைவில் உள்ள  "Auto Run"  கோப்புதான். இது அனைத்து பென் டிரைவிலும் "Hide" செய்யப்பட்டிருக்கும். நம் கண்ணுக்குத் தெரியாது.  பென்டிரைவில் உள்ள வைரஸ் இயங்குவதற்கு இந்த வசதியை நம்பிதான் உள்ளது. இந்த வசதியை இயங்காமல் செய்தால் பென்டிரைவில் உள்ள வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.

பென் டிரைவ் இணைக்கும்பொழுது ஆட்டோ ரன் இயங்குவதை தவிர்க்க,

  • பென் டிரைவை கம்ப்யூட்டரில் செருகுவதற்கு முன்பு கம்ப்யூட்டரில் உள்ள "ஷிப்ட்" கீயை அழுத்திப் பிடித்துக்கொள்ளவும். 
  • இப்பொழுது பென் டிரைவை செருகவும்
  • பென்டிரைவ் "டிடெக்ட்" ஆகும் வரை காத்திருக்கவும். 
  • டிடெக்ட் ஆன பிறகு ஷிப்ட் கீயை விட்டுவிடவும்
  • இப்பொழுது பென்டிரைவை "வைரஸ் ஸ்கேனர்" கொண்டு SCAN செய்யவும்.

பென்டிரைவை  இந்த முறையில் பாதுகாப்பாக செருகிய பிறகும் கூட "ஆட்டோ ரன்" - Auto Run இயங்க வாய்ப்புள்ளது. அதாவது, நீங்கள் "மை கம்ப்யூட்டர்" ஐகானை கிளிக் செய்து, "Removal Device" கிளிக் செய்து பென்டிரைவ் ஓப்பன் செய்யும்பொழுதும் "Auto Run" இயங்க வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்க்க, நேரடியாக கம்ப்யூட்டரில் உள்ள "Star Button" (விண்டோஸ் லோகோ) பட்டனையும் + E விசையையும் அழுத்தினால் "My Computer" ஓப்பன் ஆகும். இப்பொழுது "Removal Device" மீது ரைட் கிளிக் செய்து "வைரஸ் ஸ்கேன்" செய்துவிடலாம். வைரஸ் பென்டிரைவில் இல்லை என்பது உறுதியான பிறகு, அதில் உள்ள போல்டர்களை திறக்கலாம்.

சில நேரங்களில் வைரஸ் போல்டர் வடிவில் இருக்கும். அது போல்டர்தான் என நினைத்து "டபுள்" கிளிக் செய்தால், உடனே வைரஸ் இயங்கி கம்ப்யூட்டரை தாக்கும்.

இதைத் தவிர்க்க எப்பொழுதும் எஸ்க்புளோரரின் வலது புறமுள்ள "Pan"ல் டபுள் கிளிக் செய்யாமல், இடப்புறமுள்ள பேனில் உள்ள போல்டர்களின் மீது சிங்கிள் கிளிக் செய்து திறக்கலாம். வைரஸ் போன்ற போலியான போல்டர்கள் இடப்புற பேனில் தெரியாது. இதன் மூலம் "வைரஸ் போல்டர்"களை கிளிக் செய்யாமல் தவிர்க்கலாம். அதுபோன்ற போலியான போல்டர்கள் அழித்துவிடலாம்.

இவ்வாறு பென்டிரைவ் வழியாக கம்ப்யூட்டருக்கு வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.

Also Read: கம்ப்யூட்டரில் Auto-Play வசதியை நிறுத்துவது எப்படி?

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.