logo blog

ப்ளாக்கர் ரீடைரக்ட் பிரச்னை தீர புதிய ஸ்கிரிப்ட்

கடந்த ஜனவரி மாதத்தில் சில செக்யூரிட்டி பிரச்னை காரணமாக ப்ளாக்கர் தளங்கள் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப ரீடைரக்ட் செய்யப்பட்டது. ப்ளாக்கர் தளங்களில் இடம்பெறும் பதிவுகளை தணிக்கை செய்வதற்காக இதுபோன்று செய்யப்பட்டதாக கூகிள் அறிவித்தது.
blogger ncr redirect script
Blogger ncr redirect script

இதனால் blogspot.com என்ற ஒரே டொமைனில் செயல்பட்ட வலைப்பூக்கள் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக ரீடைரக்ட் செய்யப்பட்டு (.in, .au, .ch, .fr ) என டொமைன் மாற்றம் பெற்றது.

இதன் காரணமாக ப்ளாக்கர் தளங்களின் ரேங்க் குறைய ஆரம்பித்தது. உதாரணமாக அலெக்சா ரேங்கில் பிரச்னை ஏற்பட்டது. ஃபாலோவர் விட்ஜெட் சேர்ப்பதில் பிரச்னை ஏற்பட்டது. தமிழ்மணம், இன்ட்லி போன்ற திரட்டிகளில் பதிவுகள் இணைப்பதில் பிரச்னை மற்றும் திரட்டிகளின் ஓட்டுப்பட்டை சேர்ப்பதில் பிரச்னைகள் உண்டானது.

இதனை அடுத்து ப்ளாக்கர் தளங்கள் ரீடைரக்ட் ஆகாமல் மீண்டும் blogpot.com ற்கே திரும்பும் வகையில் Java script எழுதப்பட்டு பயன்படுத்தப்பட்டது. சிலர் சில வித்தியாசங்களுடன் நிரல்வரிகள் எழுதினர். அந்த நிரல்வரிகள் சரியாக செயல்பட்டாலும், அதிலும் சில குறைபாடுகள் இருந்தன.

இதனை அடுத்து, தற்பொழுது Labnol வலைத்தளத்தின் அமீத் அகர்வால் புதிய ஸ்கிரிப் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இது எவ்வித பிரச்னையுமின்றி நன்றாக செயல்படுகிறது.

இந்த ஸ்கிரிப்டை ப்ளாக்கர் தளத்தில் லாகின் செய்து கொண்டு, Edit Html கொடுத்து அதில் <head> டேக்கு கீழே ஒட்டி Save Template கொடுத்தால் ப்ளாக்கர் தளங்கள் ரீடைரக்ட் ஆகாமல்  blogspot.com ஆகவே ஓப்பன் ஆகும்.


செய்முறை:

1. Login to Blogger.com
2. Settings => Template => Edit HTML
3. Find in Template <head> Tag.
4. Past the Below code after <head> Tag.
5. Save Template.

Code for Prevent Blogger Country Redirection

<script type="text/javascript">

  /* Get the full URL of the current blogger page */
  var blog = document.location.href.toLowerCase();

  /* Do not redirect if the domain is .com already */
  if (!blog.match(/\.blogspot\.com/)) {

    /* Replace the country TLD with .com and ncr switch */
    blog = blog.replace(/\.blogspot\..*?\//, ".blogspot.com/ncr/");

    /* Redirect to the new .com URL in the current tab */
    window.location.replace(blog);
  }
 
</script>

இந்த ஜாவா ஸ்கிரிப்டை காப்பி செய்து கொண்டு, உங்கள் பிளாக்கரில் <head> டேக்கு கீழே பேஸ்ட் செய்து டெம்ப்ளேட்டை Save Template கொடுத்து சேமித்துவிடவும். புதியதாக உங்கள் பிளாக்கர் தளத்தை திறந்து பார்க்கும்பொழுது அது Country Redirect ஆகாமல் ப்ளாக்கர்.காம் - Blogger.com ஆகவே திறக்கும்.


Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.