logo blog

பெஸ்ட் தமிழ் டைப்பிங் சாப்ட்வேர் NHM Writer

தமிழ் டைப்பிங் செய்ய பயன்படும் ஓர் அற்புதமான மென்பொருள் NHM Writer. இந்த மென்பொருள் மூலம் வெப்சைட்களில் பயன்படுத்தப்படும் தமிழ் "யுனிகோட்" எழுத்துருக்களை தட்டச்சிடலாம்.  தமிழ் உட்பட பெரும்பாலான இந்திய மொழிகள் அனைத்தையும் இதன் மூலம் தட்டச்சிடலாம். இதிலுள்ள சிறப்பம்சங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

unicode tamil typing software
யுனிகோட் தமிழ் டைப்பிங் சாப்ட்வேர்
NHM Writer - தமிழ் டைப்பிங் மென்பொருள்: 

என்.எச்.எம். ரைட்டரில்  Tamil 99 Unicode, Tamil Phonetic Unicode, Tamil Old typewriter Unicode, Tamil Bamini Unicode, Tamil Inscript Unicode,  போன்ற எழுத்துருக்களின் விசை பலகை தட்டச்சு முறையில் தமிழை தட்டச்சிடலாம்.

மேலும் இதில் புதிய தமிழ் எழுத்துருக்களை சேர்க்கும் வசதியும் உண்டு.

யுனிகோட் எழுத்து முறை பற்றித் தெரிந்துகொள்ள கீழுள்ள பதிவை வாசிக்கவும். 


தமிழ் மொழி மட்டுமல்ல.. இந்திய மொழிகளான Assamese, Bengali, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Punjabi மற்றும் Telugu ஆகிய மொழிகளில் இதன் மூலம் தட்டச்சிடலாம்.

Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera போன்ற அனைத்து பிரௌசர்களிலும் இம்மென்பொருளை பயன்படுத்தி தட்டச்சிட முடியும்.

1MB அளவே கொண்ட இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து. இன்ஸ்டால் செய்ய சில வினாடிகளே போதுமானது. 

NHM Writer ல் உள்ள கூடுதல் சிறப்புகள்: 

  • விண்டோஸ் சிடி இல்லாமலேயே Regional Language Support செய்யும் வசதி..
  • Windows 2003/XP, Windows Vista, Windows 7 மற்றும் தற்பொழுது புதியதாக வெளிவந்துள்ள  Windows 8,  விண்டோஸ் 8.1, விண்டோஸ் 10 ஆகிய இயங்குதளங்களை சப்போர்ட் செய்கிறது. 
  • விண்டோஸ் டெக்ஸ்ட் சர்வீஸ் வசதி மூலம் MS Office ல் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்யலாம். 
  • DTP தொழில் செய்பவர்களுக்கு தொழில் ரீதியாக பயன்படும் ஓர் அற்புதமான மென்பொருள் NHM Writer

யுனிகோட் முறையில் தமிழ் டைப்பிங் செய்ய மிகச்சிறந்த மென்பொருள் NHM Writer

NHM Writer மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: 

Download NHM Writer - The best Tamil software

Tags: Easy Tamil Typing software, Unicode Tamil typing software, Tamil Font converter, NHM Tamil writer, Tamlil typing software for free, NHM software download, free download NHM Writer, free download NHM Converter, Tamil font typeing software, Unicode Tamil typing software for PC, Tamil DTP software, free software, இலவச மென்பொருள், Tamil typing software. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.