logo blog

குரோம் பிரௌசரில் எக்ஸ்டன்சன் சேர்க்கும்போது NETWORK_FAILED என காட்டுகிறதா? தீர்வு !

இன்டர்நெட் கனெக்சன் சரியாக இருந்தாலும், குரோம் பிரௌசரில் எக்ஸ்டன்சன் சேர்க்கும்போது NETWORK_FAILED என காட்டுகிறதா? அதற்கு காரணம்  உங்களுடைய கூகிள் குரோம் பிரௌசர் அப்டேட் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இதை செக் செய்ய கூகிள் குரோம் பிரௌசரில் மெனு பார் கிளிக் செய்து, அதில் about Google chrome என்பதை பார்க்க வேண்டும்.
network failed chrome web store fix
உங்களுடைய குரோம் பிரௌசர் அப்டேட் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், மீண்டும் கூகிள் பிரௌசரை Uninstall செய்து விட்டு, புதிய குரோம் பிரௌசரை டவுன்லோட் செய்து Re-Install செய்ய வேண்டும்.

Google Chrome Browser -ஐ அன் இன்ஸ்டால் செய்ய

Start ==> Control Panel ==> Programs சென்று அதில் உள்ள கூகிள் குரோமை தேர்வு செய்து Uninstall கொடுக்கவும்.
பிறகு Start == Search ==> %temp% என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
டெம்ப் போல்டரில் உள்ள கோப்புகளை Select All கொடுத்து Delete கொடுக்கவும்.
அதன் பிறகு புதிய குரோம் பிரௌசரை டவுன்லோட் செய்யவும்.

புதிய குரோம் பிரௌசர் டவுன்லோட் செய்ய சுட்டி: Download New Google Chrome Browser

டவுன்லோட் செய்த குரோம் பிரௌசரை இன்ஸ்டால் செய்து முடிக்கவும். புதியதாக இன்ஸ்டால் செய்யப்பட்ட பிரௌசர் மூலம் புதிய கூகிள் குரோம் எக்ஸ்டன்சன் Add to Chrome கொடுக்கவும்.

இப்பொழுது எக்ஸ்டன்சன் எந்த பிரச்னையும் இல்லாமல் Add ஆகிவிடும்.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.