logo blog

Windows 10 Upgrade செய்யசொல்லி வரும் போலி மின்னஞ்சல்கள் ! எச்சரிக்கை ரிப்போர்ட் !

சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம், Windows பயனர்களை புதிய இயங்குதளமான Windows 10 க்கு மாறிக்கொள்ள அறிவுறுத்தியிருந்தது. இனி அனைத்து சாதனங்களுக்கு (கம்ப்யூட்டர், டேப்ளட், அலைபேசி போன்றவை) ஒரே விண்டோஸ் இயங்குதளம்தான் இருக்கும் என அந்நிறுவனம் கூறியதை அடுத்து கோடிக்கணக்கான பேர் தொடர்ச்சியாக Windows 10 Upgrade செய்து கொண்டு வருகின்றனர்.

இந்த தருணத்தை பயன்படுத்தி Windows 10 Update செய்யுங்கள் என பலருக்கு மின்னஞ்சல்கள்  அனுப்பட்டுள்ளது தெரிய வருகிறது. அவ்வாறு அனுப்பபடும்  மின்னஞ்சல்கள் அ னைத்தும் போலியானவை என  அமெரிக்க நிறுவனம் சிஸ்கோ தெரிவித்துள்ளது.

windows 10 upgrade tips in tamil
Tamil Windows 10 Tips
Also Read: விண்டோஸ் 8.1 ல் உள்ள அற்புதமான வசதிகள்

உங்களுக்கு அதுபோல Upgrade Windows 10 என ஏதேனும் மின்னஞ்சல் கிடைத்திருப்பின் அதிலுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அதில் கம்ப்யூட்டரை பாதிக்க கூடிய வைரஸ் இணைப்புகள் இருக்கலாம் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

விண்டோஸ் 10 பதிப்பை அப்கிரேட் செய்ய வேண்டுமென்றால் நேரடியாக மைக்ரோசாப்ட் தளத்திலிருந்துதான் அப்டேட் செய்ய வேண்டும். அவ்வாறு  விண்டோஸ் 10 டவுன்லோட் & அப்கிரேட் செய்து கொள்வதே பாதுகாப்பானது.

விண்டோஸ் 10 பதிப்பு டவுன்லோட் & அப்கிரேட் செய்ய சுட்டி: 


இந்த பதிவை ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளசில் ஷேர் செய்யுங்கள். உங்களுடைய நண்பர்களும் தெரிந்துகொள்ளட்டும். 

Tags: Tamil Windows 10 Upgrade, Tamil Computer Tips, Tamil Windows 10 TIPS & TRICKS, Windows 10 Tamil Tips. 

Share this

4 comments

தகவலுக்கு நன்றி

வருகைக்கு நன்றி

நன்றி விஷ்ணு ஐயா!

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.