logo blog

கம்ப்யூட்டர் கீபோர்ட் வேலை செய்யவில்லையா?

கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள அதிகமாக பயன்படுத்தும் ஒரு சில விசைகள் (Keyboard Buttons) நாளாக நாளாக வேலை செய்யாமல் போய்விடும். அப்படிபட்ட சூழ்நிலையில் அந்த விசைக்குரிய எழுத்தை எப்படி டைப் செய்வது?

இருக்கவே இருக்கிறது On Screen Keyboard. இது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இருக்கும். இதைப் பயன்படுத்தி, செயல்படாத விசைக்குரிய எழுத்தை மௌஸ் வைத்து கிளிக் செய்து கொண்டு வரலாம்.


windows on screen keyboard
On Screen Keyboard

சில நேரங்களில் கீபோர்ட் வேலை செய்யாமல் அடம் பிடிக்கும். அதுபோன்ற சூழ்நிலையிலும் இந்த ஆன் ஸ்கிரீன் போர்ட் ஆபத்பாந்தவனாக உதவுகிறது.

விண்டோஸ் 7 ல் ஆன் ஸ்கிரீன் கீபோர்ட் -  On Screen Keyboard எப்படி கொண்டு வருவது? 

fix keyboard key problems

  • கீபோர்டில் ஸ்டார்ட் (Windows) பட்டனை அழுத்துங்கள்
  • அதில் தோன்றும் சர்ச பாக்சில் OSK என டைப் செய்து Enter தட்டுங்கள்.
  • இப்பொழுது உங்கள் கம்ப்யூட்டரில் மேலே உள்ள படத்தை போல Onscreen keyboard தோன்றும். 
ஆன் ஸ்கிரீன் போர்டில் உள்ள எழுத்துகளின் மீது மௌஸ் வைத்து கிளிக் செய்தால் அந்த எழுத்துகள் டாகுமெண்டில் தோன்றும்.

Also Read: கம்ப்யூட்டரில் எளிதாக தமிழ் டைப் செய்ய

Tags: Tamil computer tips, Onscreen Board, Windows 7, Computer Keyboard Problem.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.