logo blog

ஆபாச படங்களை பரப்பும் பேஸ்புக் லிங்க் ! (விழிப்புணர்வு கட்டுரை)

Easy way to find out virus link on Facebook

பேஸ்புக் இன்பாக்சில் வரும் ஆபாச வைரஸ் லிங்க் பல பேரை முகம் சுழிக்க வைத்துள்ளது. நண்பர்களின் பெயரில் இன்பாக்ஸ் வழியாக பரவும் இந்த வைரஸ் மூலம் ஆபாச படங்கள், ஆபாச படங்களின் வீடியோ இணைப்புகள் டேக் செய்யப்பட்டு நண்பர்களின் டைம் லைனில் பதியப்பட்டது.

இந்த வைரஸ் இணைப்பானது ஆபாச படங்களை பதிந்ததோடு நில்லாமல், நட்பு வளையத்தில் இருக்கும் மற்ற நண்பர்களின் இன்பாக்சிற்கும் அவர்கள் அனுப்பியது போல அந்த வைரஸ் இணைப்பை தானாகவே அனுப்பியது.

தங்களுடைய நண்பர்தான் இணைப்பை அனுப்பியதாக கருதி, அதை கிளிக் செய்தவர்களுக்கும், அதே போல ஆபாச படங்கள் பரவியது....இவ்வாறு சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்து நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் நொடியில் பரவியது வைரஸ் இணைப்பு.

நிலைமை புரியாமல், எந்த நண்பரின் பெயரில் ஆபாச இணைப்பு வந்ததோ, அந்த நபரைப் பற்றிய தவறான எண்ணங்கள் பரஸ்பர நண்பர்களின் மத்தியில் ஏற்பட்டது.

இது போன்ற திடீரென இன்பாக்சிற்கு வரும் (லிங்க்) இணைப்புகளை உடனே கிளிக் செய்யாமல், அந்த லிங்க் (இணைப்பு) உண்மையாகவே நண்பர் அனுப்பியதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு கிளிக் (சொடுக்குதல்) செய்து பார்ப்பது நல்லது.

பேஸ்புக் இன்பாக்சில் அனுப்படும் லிங்க் பாதுகாப்பானதுதானா என்பதை கண்டறிய  ONLINE LINK SCAN என்ற இணையதளம் பயன்படுகிறது.


easy way to findout virus link on facebook


viruses, malware, phishing scams, and trojans

இந்த இணையதளத்தில் ONLINE LINK SCAN என்ற டூல் உண்டு. இதன் மூலம் உங்களுக்கு வந்த இணைப்புகளில் Viruses, Malware, Phishing Scams, மற்றும் Trojans போன்ற நச்சு நிரல்கள் உள்ளதா என அந்த இணைப்பை கிளிக் செய்யாமலே கண்டறிய முடியும். 

செய்முறை:

உங்கள் இன்பாக்சில் வந்த லிங்கை கிளிக் செய்யாமல், அதை அப்படியே காப்பி செய்து கொண்டு, ONLINELINKSCAN என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

அதில் உள்ள பெட்டியில் காப்பி செய்த இணைப்பை பேஸ்ட் செய்து SCAN LINK என்ற பொத்தானை அழுத்தவும். இப்போது அந்த இணைப்பு Scan செய்யப்படும். முடிவில் அந்த இணைப்பில் வைரஸ் பிரச்னைகள் இருந்தால்  அதற்கான LINK SCAN SUMMARY  காட்டும்.  

பேஸ்புக்கில் நண்பர் பெயரில் அனுப்பட்ட வைரஸ் இணைப்பு அடங்கிய ஸ்கிரீன் ஷாட் இது. 


அதில் உள்ள இணைப்பை லிங்க் ஸ்கேன் தளத்தில் சோதித்த பிறகு பெறப்பட்ட முடிவுகள் கீழே உள்ள Screen Shot காட்டுகிறது. 

link scan summary

இவ்வாறு உங்கள் இன்பாக்சில், திடீரன நண்பரின் பெயரில் அனுப்பபடும்   லிங்கில் வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதித்து கண்டறிய முடியும். வைரஸ் இருப்பது உறுதித செய்யப்படுமானால் அந்த இணைப்பை கிளிக் செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம். இதனால் நண்பர்களுக்கு இடையே ஏற்படும் மனச் சங்கடங்களை தவிர்க்கலாம்.

பதிவு பயனுள்ளதாக இருந்தால் Facebook, Twitter, Google Plus ல் பகிரவும். 

Tags: ஃபேஸ்புக் டிப்ஸ், தமிழ் பேஸ்புக் டிப்ஸ், Tamil Facebook tips, Facebook Tips, Facebook virus affection. Fix Facebook virus problem. 

Share this

1 comment

பயனுள்ள பதிவு

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.