logo blog

ஆங்கில உச்சரிப்பு பிரச்னையை போக்கும் மென்பொருள்

ஆங்கிலத்தை கற்றுக்கொள்வது கூட சுலபம்தான். ஆனால் அதில் உள்ள உச்சரிப்பு பிரச்னை தீர்ப்பது பெரும்பாடாக இருக்கும். நன்றாக படித்த ஆங்கில பேராசிரியர்களுக்கு கூட 'ஆங்கில உச்சரிப்பு பிரச்னை' பெரும் தலைவலியாக இருக்கும்.

ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்றுக்கொண்டு சரளமாக பேச நினைக்கின்றனர். பலருக்கு தயக்கத்தினாலேயே ஆங்கிலம் பேச வருவதில்லை. ஆனால் அவர்கள் அதை புரிந்து கொள்வார்கள். பேசும்போது தவறாக பேசிவிடுவோமா, தவறாக உச்சரிப்பு செய்து விடுவோமோ என்ற பயம் இருக்கும்.

ஆங்கிலம் பேசுவதற்கு சரியான உச்சரிப்பு  தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பேச்சின் பொருளே மாறிவிடும். ஒரு ஆங்கில வார்த்தையை அல்லது வார்த்தைகளை எப்படி சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள ஆங்கில உச்சரிப்பு பிரச்னையை போக்கும் மென்பொருள் ஒன்று உண்டு.


english reader software
ஆங்கில உச்சரிப்பை சரி செய்யும் மென்பொருள்


ஆங்கில உச்சரிப்பு பிரச்னையை போக்கும் மென்பொருளை பயன்படுத்துவது எப்படி?


பேச வேண்டிய ஆங்கில செய்திகளை, தகவல்களை அல்லது உரையாடல்களை காப்பி செய்து பெட்டியில் உள்ளிட்டு Play பட்டனை அழுத்தும்போது அதிலுள்ள ஆங்கிலத்தை மென்பொருள் சரியான உச்சரிபுடன் வாசிக்கும்.

நிறுத்தல் குறி, கமா மற்றும் இன்ன பிற குறிகளுடன் அமைந்த எழுத்துகளை (டெக்ஸ்ட்டை) அழகாக நிறுத்தி படிக்கிறது. 

இந்த மென்பொருளில் இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன. இது ஆண் மற்றும் பெண் குரல்களில் ஆங்கில வார்த்தைகளை சரியான உச்சரிப்புடன் வாசிக்கும்.

ஆங்கில உச்சரிப்பு பிரச்னையை போக்கும் மென்பொருள் டவுன்லோட் செய்ய செய்ய சுட்டி: 


ஆங்கிலத்தில்; 

Free NaturalReader 13

Main feature
  • Full functional text to speech with free voices
  • Open Word, PDF and other documents
  • Floating bar to read any text in other applications
  • Change speed and speaker
  • It is Free to use and free to download.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.