logo blog

இலவசமாக கோப்புகளை சேமித்திட Cloud Storage வசதி !

இலவசமாக கோப்புகளை சேமித்திட நிறைய வெப்சைட்டுகள் உள்ளன. அவற்றில்  கூகிள் ட்ரைவ், ட்ராப்பாக்ஸ் மற்றும் ஜஸ்ட் குலூட் போன்ற இணைய வழி சேமிப்பகங்கள் முதன்மையானவை.  இந்த வெப்சைட்கள் மூலம் மிக முக்கியமான கோப்புகளை இலவசமாக சேமித்து கொள்ளலாம்.
free eclouds storage websites
இணைய வழி சேமிப்பகங்கள்: 

இணையத்தின் வழியாக சேமிக்கும் வசதிகளை சில நிறுவனங்கள் வழங்குகின்றன. குறிப்பாக கூகிள் நிறுவனம் கூகிள் ட்ரைவ் Google Drive என்ற சேமிப்பக வசதியை வழங்குகிறது. ட்ராப்பாக்ஸ் என்ற நிறுவனமும் கோப்புகளை சேமிக்க தனது Server - ல் இலவச இட வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

online file storage just cloud
ஜஸ்ட் குலூட் - JUST CLOUD என்ற இணையதளம் மேற்குறிப்பிட்ட சேமிப்பகங்களைப் போன்றதே. இதில் குறிப்பிட்ட அளவு வரைக்கும் கோப்புகளை இலவசமாக சேமிக்க முடியும். 


இணைய வழி சேமிப்பகங்கள் மூலம் கோப்புகளை ஏன் சேமிக்க வேண்டும்? 

கம்ப்யூட்டரில் முக்கியமான கோப்புகள் சேமித்து வைத்திருந்தால், அது திடீரென பழுதடையும்போது அந்த பைல்களை எடுத்து பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம். இதுபோன்ற நிலைமை வராமல் தடுக்க இணையத்தின் மூலம் கோப்புகளை சேமித்து வைக்கலாம்.

இணைய சேமிப்பகத்தின் பயன்: 

இணைய சேமிப்பகங்கள் மூலம் கோப்புகளை சேமிக்கும்போது, எந்நிலையிலும், எந்த இடத்திலிருந்தும், அவற்றை எடுத்துப் பயன்படுத்த முடியும். இணைய சேமிப்பகங்கள் மூலம் சேமிக்கும் கோப்புகள் அழிவதற்கு வாய்ப்புகள் 99.9% இல்லை. பாதுகாப்பானதும் கூட.

இணைய சேமிப்பகத்தின் மூலம் கோப்புகளை எப்படி சேமிப்பது?

குறிப்பிட்ட இணைய சேமிப்பகத்தின் சுட்டியை கிளிக் செய்து , அதில் File Upload ஆப்சனை பயன்படுத்தி, எந்த கோப்பின் சேமிக்க வேண்டுமோ அதை தரவேற்றம் செய்து சேமித்துகொள்ளலாம். 

இணைய சேமிப்பகம் JUST CLOUD செல்ல சுட்டி: 

 http://www.justcloud.com

கூகிள் ட்ரைவ் செல்ல சுட்டி

 http://www.drive.google.com

மேலும் சில இலவசமாக பைல்களை சேமிக்க பயன்படும் வெப்சைட்டுகள்

  1. Box
  2. Bitcasa
  3. Evernote
  4. iCloud
  5. Mega
  6. SkyDrive

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.