logo blog

புதியதாய் பிறந்தோம் 2015

புதிய ஆண்டு பிறந்திருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒவ்வொரு ஆண்டும் முடிந்து , புதிய வருடம் பிறக்கும்போதெல்லாம், ஏதேனும் உறுதியை எடுத்துக்கொள்வதும், அதை செயல்படுத்தி வெற்றி பெற எத்தனிப்பதும் ஒவ்வொரு ஆண்டும் நடந்துகொண்டேதான் உள்ளது.

நினைத்தெல்லாம் நடந்ததா?

அதற்கு நாம் என்ன செய்தோம்?. எந்தளவிற்கு நினைத்த காரியங்கள் வெற்றி பெற்றன? என்ன செய்திருந்தால் மேலும் மேம்படுத்தியிருக்கலாம்? என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கும் தருணம் இது.

கடந்த ஆண்டுகளில் நடந்த நல்லவைகளை நினைத்துப் பார்ப்போம். கெட்டவைகளை தூர எறிந்து விடுவோம்.
puthiya aandu 2015

இந்த ஆண்டு என்ன செய்யப்போகிறோம் என்பதையும், அதற்கான இலக்கையும், அதற்கான செயல்படுத்தல் வழிமுறைகளை செவ்வனே செய்து செயலாற்றுவோம்.

2015 - ல் புதியதாய் பிறந்தோம் என எண்ணிக்கொள்வோம்.....கடந்த ஆண்டின் கசப்பான நினைவுகளை மறந்து, புதிய ஆண்டில் புத்துணர்ச்சியுடன் வாழ்க்கையை தொடங்குவோம்.

வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்,
உங்கள் தங்கம்பழனி.
9865076239

Share this

2 comments

நன்றி குமார் சார்..!

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.