logo blog

இணைய ஜோதிட இதழ் அறிமுகம் | தலையெழுத்து

முப்பது வருட ஜோதிட கலை அனுபவம். வெளிநாடுகளுக்கு சென்று ஜோதிட கலை ஆராய்ச்சி . அதில் ஆழமாக ஆராய்ச்சி செய்து, தான் கற்ற ஜோதிட கலையை மக்களுக்கு கட்டுரைகளாக எழுதி அர்பணிக்கும் தன்மை. ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக கொடுக்கும் வல்லமை. ஜோதிட கலையில் நிபுணத்துவம். இவற்றுக்கெல்லாம் சொந்தகாரர்தான்  "ஜோதிட மாமணி" திரு 'ஆஸ்ட்ரோ சிவம்' அவர்கள். 

இவருக்கு இப்படி ஒரு அறிமுகமே தேவையில்லை. உலகெங்கும் இவரது ஜோதிட கட்டுரைகளுக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். பத்திரிகைகள், மற்றும் பதிப்பகங்களுக்கு மட்டுமே எழுதிக்கொண்டிருந்த இவர் தற்பொழுது வலைப்பதிவெழுத தொடங்கி இருக்கிறார்.


"தலையெழுத்து" என்ற பெயரில் இவர் தொடங்கியிருக்கும் இணைய ஜோதிட  இதழில் ஜோதிடம், மருத்துவம், ஆன்மீகம், புதிய நவீன விஷயங்கள் என பல்வேறுபட்ட பதிவுகளை எழுதுகிறார். 

thalaiyeluthu-jothida-inaiya-ithal

ஆசிரியரைப் பற்றி: 

திரு. ஆஸ்ட்ரோ சிவம் அவர்கள் நக்கீரன் வார இதழ் வெளியிடும் பாலஜோதிடம் -இதழில் தொடர்ந்து ஆய்வு கட்டுரைகள் எழுதி வருகிறார்.

விரைவில் இவர் எழுதிய "சனிப்பெயர்ச்சி" ஜோதிட கட்டுரை நக்கீரன் - பால ஜோதிடம் இதழில் வரவிருக்கிறது. 

நக்கீரன் இதழ் மட்டுமல்லாமல் குருவருள் ஜோதிடம் | ஜோதிடஅரசு |மாதஜோதிடம் | ஞானசிந்தாமணி போன்ற மாத ஜோதிடம் இதழ்களிலும் சிறந்த ஜோதிட கட்டுரைகளை எழுதி வருகிறார்.

சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சென்று ஜோதிடம் பார்த்த அனுபவம் பெற்றவர். ஜோதிட கலையில் முப்பது வருடம் அனுபவம் பெற்றவர். ஜோதிடம் பற்றிய ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டு, சிறந்த ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி ஜோதிட மாமணி  பட்டம் பெற்றவர். 

jothida-mamani-astro-sivam

தற்பொழுது தலையெழுத்து என்ற வலையிதழை தொடங்கி நடத்தி வருகிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை எழுதி வருகிறார். 

மனிதர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பெண்களுக்கான பிரச்னைகள், குழந்தை பேறு, வெளிநாடு செல்லும் வாய்ப்புகள், தொழில் தொடங்க என மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் தனது ஜோதிட அனுபவத்தை வைத்து அறிவியல் ரீதீயாக ஜோதிடத்தை அதில் தொடர்பு படுத்தி ஆதாரப்பூர்வமாக எழுதி வருகிறார். 

காதலில் வெற்றி பெற மினி ஜோதிட டிப்ஸ் கொடுக்கும் இவர் கள்ளக் காதல் வர காரணம் என்ன ?  போன்ற வேடிக்கையான பதிவுகளையும் எழுதி ஜோதிட ரீதியாக விளக்குகிறார். 

தலையெழுத்து இணைய இதழில் வெளியாகும் பதிவுகள் ஒவ்வொன்றும் படித்து, ரசித்து பாதுகாக்க கூடியவை. 

சில பதிவுகளின் தலைப்புகளைப் படிப்பதற்கு வேடிக்கையாக இருப்பது போல தோன்றினாலும், அதில் உள்ள உண்மைத் தன்மையை அறிந்து உணரும்போது இதில் இத்தனை விஷயம் இருக்கிறதா என ஆச்சர்யம் ஏற்படுகிறது. 

திருமண தடங்கல், கடன் தொல்லை என மனிதர்களுக்கு  ஏற்படும் பெரிய பெரிய பிரச்னைகளுக்கு தனது ஜோதிட அனுபவத்தில் பிரச்னைக்குரிய காரணங்களை அலசி ஆராய்ந்து அவற்றை தீர்க்கும் வழிமுறைகளை கூறுகிறார். 

தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கும் இவரை அணுகலாம். உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை  கருத்துப் பெட்டியின் மூலம் கேட்டும், அதற்கான தீர்வுகளை பெறலாம். 

பழகுவதற்கு இனிமையான ஜோதிட மாமணி திரு. 'ஆஸ்ட்ரோ சிவம்' அவர்களின் தலையெழுத்து ஜோதிட இதழை வாசித்து பயன்பெறுங்கள். 


                   ஆசிரியர் : ஜோதிட மாமணி திரு. ஆஸ்ட்ரோ சிவம்.



Share this