logo blog

ப்ளாக் தொடங்குவது எப்படி?

ப்ளாக்கர் தளத்தின் மூலம் ஒரு பிளாக் தொடங்குவது எப்படி என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். ப்ளாக் ஆரம்பித்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் இப்பதிவில் விளக்கப்பட்டுள்ளது.

How-to-Start-a-successful-Blog
ப்ளாக் தொடங்குவது எப்படி?

ப்ளாக் தொடங்குவது எப்படி?

  • முதலில் பிளாக்கர்.காம் செல்லவும்.
  • அதில் உங்கள் ஜிமெயில் ஐடி கொடுத்து லாகின் செய்துகொள்ளவும்.
  • அதன் பிறகு New Blog கிளிக் செய்யவும்.
  • அடுத்து தோன்றும் பக்கத்தில் Title, Address, பெட்டியில் டைப் செய்து கீழுள்ள ஏதேனும் ஒரு Template தேர்ந்தெடுக்கவும்.
  • மூன்றையும் சரியாக கொடுத்த பிறகு இறுதியில் உள்ள Create Blog கொடுக்கவும்.
  • இப்பொழுது உங்களது "ப்ளாக்" ரெடி.

(குறிப்பு: address என்பதில் மட்டும் இடைவெளி இல்லாமல் எழுத்துகளை தட்டச்சிட வேண்டும். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்)








பிளாக் தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டியவைகள்: 


பிளாக் தொடங்குவதற்கு முன்பு, அந்த ப்ளாகிற்கான நல்ல பொருத்தமான தலைப்பை Title தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக இணைய தொழில்நுட்பம் குறித்த தகவல்களைப் பகிரப் போகிறீர்கள் எனில் Internet Technology Blog  என தலைப்பு வைக்கலாம். 

பிளாகின் தலைப்பு நீங்கள் எழுதப்போகும் வலைப்பதிவின் கட்டுரைகள், இடுகைகள், குறிப்புகள் போன்றவற்றிற்கு தொடர்புடையதாக இருக்க வேண்டும். அப்படி இருப்பின் தேடல் இயந்திரத்திற்கு தகுந்தவாறு உங்களுடைய வலைப்பூவை உவப்பாக்கம் SEO செய்ய முடியும். 

Search Engine Optimization - SEO பற்றித் தெரிந்தகொள்ள இந்த இடுகையை வாசிக்கவும்; 


பிளாக் பற்றிய விளக்கம் : Blogger Description: 

இது உங்கள் பிளாக் பற்றிய சிறு விளக்கத்தை கொடுப்பதற்கு பயன்படும் பகுதி ஆகும். இந்த பிளாக்கர் டிஸ்கிரிப்சனை எழுதுவதற்கு முன்பு, நன்கு யோசித்து எழுத வேண்டும். Blog Destciption உங்களுடைய வலைத்தளத்தில் இடம்பெறும் உள்ளடக்கத்தை சுருக்கமாக தெரிவிப்பதாக இருக்க வேண்டும். 

உதாரணமாக இந்த "தங்கம்பழனி வலைத்தளத்தின் Description இது.

தமிழில் கம்ப்யூட்டர், மொபைல், பிளாக்கர்,மென்பொருட்கள்.

முன்பு ஆங்கிலத்தில் இவ்வாறு இருந்தது.

Thangampalani Blog gives you about latest technology news in Tamil. And Here you can get blogger tips,tech tips, computer tips and tricks also. 

தமிழிலும் அழகாக விளக்கத்தை எழுதலாம் 

உதாரணமாக, www.velaivaippuseithigal.blogspot.com வலைத்தளத்தில் உள்ள சிறு விளக்கம் இது:


அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் வேலைவாய்ப்புச் செய்திகள் இடம்பெறும் தளம்

Blog Description -ஐ எங்கு எழுதுவது?

ப்ளாக்கரின் லாகின் செய்துகொண்டு, Layout தேர்ந்தெடுக்கவும். அதில் Header என்ற ஒரு பகுதி உண்டு. அதில் Edit கொடுத்தால் இப்படி தோன்றும். அதில் டைட்டிலுக்கு, அடுத்துள்ள பெட்டியில் Description என்ற பெட்டி இருக்கும். அதில் எழுத வேண்டும்.  படம் பார்க்க.

write blog description
write blog description

பிளாக் டெம்ப்ளேட்: Blogger Template


வெற்றிகரமான பிளாக் ஆரம்பிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. பிளாகை நல்ல அழகான தோற்றத்தில் காட்டுவதற்கு இது பயன்படுகிறது.  பிளாக்கர் தளத்தில் 15 வகையான பிளாக்கர் டெம்ப்ளேட் உள்ளது. அதைப் பயன்படுத்தலாம். 

அதேபோன்று, மேலும் சில கூடுதல் வசதிகளுடன் ஒரு வெப்சைட் போன்ற தோற்றத்தை தருவதற்கு, 1000 கணக்கான இலவச பிளாக்கர் டெம்ப்ளேட்கள் கிடைக்கின்றன. 

அவற்றை டவுன்லோட் செய்தும் பயன்படுத்தலாம். வாசகர்கள் ஒரு பிளாக்கை விரும்புவதற்கு இந்த பிளாக்கர் டெம்ப்ளேட் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல எளிமையான தோற்றத்தில் உள்ள பிளாக்கர் டெம்ப்ளேட்களே பெரும்பாலானவர்களை கவர்கிறது. 

பிளாக்கர் தளத்தில் இடம்பெற வேண்டிய விட்ஜெட்கள் 


நூற்றுக்கணக்கான பிளாக்கர் விட்ஜெட்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானதாக Feed Burner Email Subscription விட்ஜெட்டை கூறலாம். இந்த விட்ஜெட், பிளாக் தளத்திற்கு வரும் வாசகர்கள் அவர்களுடைய இமெயில் அட்ரசை பதிந்து, Subscribe செய்துகொள்ளலாம். 

இதனால் ஒவ்வொரு புதிய பதிவு அல்லது கட்டுரை அல்லது இடுகை அவருடைய இமெயில் அட்ரசுக்கே சென்றுவிடும். அந்த வாசகர் அவருடைய இமெயிலை தினமும் பார்க்கும்பொழுது, உங்களுடைய கட்டுரையும் அவருடைய இன்பாக்சில் சென்று சேரந்திருக்கும். அங்கிருந்து கிளிக் செய்து உங்களுடைய பிளாக்கிற்கு வந்து முழுமையான கட்டுரையை அவர் வாசிக்க முடியும். ஓர் அற்புதமான பயன்மிக்க விட்ஜெட் இது. 

பாலோவர் விட்ஜெட் 

இந்த விட்ஜெட்டானது பிளாக்கர் கொடுக்கும் மற்றுமொரு கூடுதல் வசதியாகும். இதைப் பயன்படுத்தும் மற்ற பிளாக் எழுதும் நண்பர்களுக்கு, அவர்கள் பாலோ செய்த பிளாகில் புது பதிவுகள் வந்திருந்தால், பிளாக்கர் தளத்திலேயே கீழே காட்டும். அந்த இணைப்பை கிளிக் செய்து, உரிய வலைப்பதிவை படிக்க முடியும். 

பேஸ்புக் லைக்பாக்ஸ் விட்ஜெட்:

பிளாக்கர் தளத்திற்கு தேவையான மற்றுமொரு முக்கியமான விட்ஜெட் பேஸ்புக் லைக் பாக்ஸ் விட்ஜெட். இதன் மூலம் உங்களுடைய பிளாக்கை பேஜ்புக்கில் தொடர முடியும். 

சோசியல் ஷேரிங் பட்டன்ஸ்: 

பேஸ்புக், கூகிள் ப்ளஸ், ட்விட்டர் போன்ற சமூக தளங்களுக்கான Share  பட்டன்களையும் ஒரு விட்ஜெட்டாக வைக்கலாம். அந்த பட்டன்களைப் பயன்படுத்தி, வாசகர்கள் அவருடைய நண்பர்களுக்கு கட்டுரையை பகிர முடியும். 

பிளாக் போஸ்ட் - Blog Post


பிளாக் போஸ்ட் என்பது நீங்கள் எழுதும் கட்டுரை/பதிவு. இதில் கட்டுரை, கவிதை, படங்கள், குறிப்புகள், காணொளிகள் என அனைத்தும் சேர்ந்த ஒரு கலவையாக இருக்கலாம்.

கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் விடயங்கள் ஏற்கனவே உள்ள வெப்சைட்டிலிருந்து காப்பி செய்யப்பட்டதாக இருக்க கூடாது. உங்களுடைய சொந்த கட்டுரைகளாக Unique Content ஆக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாசகர்கள் விரும்பி படிப்பார்கள். 

பிளாக் போஸ்ட் எழுதும் முறை: 


மற்ற வெப்சைட்கள், புத்தக்கங்களிலிருந்து கட்டுரையை எடுத்து அதை மீள் பதிவிடக்கூடாது. 

writing blog post
ப்ளாக் போஸ்ட் எழுதும் முறை

ஒரு முழுமையான கட்டுரையாக இருக்க வேண்டுமெனில்  தலைப்பிலிருந்து ஆரம்பித்து, அதைப் பற்றிய விரிவான விளக்கங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். சொந்த நடையில் எழுத வேண்டும். 

தேவையெனில் கட்டுரைக்குத் தேவையான தொடர்புடைய படங்கள், ஆடியோ, வீடியோ போன்றவையும் சேர்த்துக்கொள்ளலாம். 

Tech Blog பொருத்தவரை ஆதாரப் பூர்வமான தகவல்களாக இருக்க வேண்டும். தெளிவான வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அவ்வாறு பிளாக் போஸ்ட் அமைந்தால், வாசகர்கள் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கு எளிதாக இருக்கும். 

Post title முக்கியம்

கட்டுரைக்குத் தொடர்பே இல்லாத தலைப்புகளை எழுதுவதை தவிர்க்க வேண்டும். கட்டுரைக்கு தொடர்புடைய சரியான தலைப்புகளை எழுத வேண்டும்.  தலைப்பானது கட்டுரையின் உள்ளடக்கத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். 

உ.ம்: கம்ப்யூட்டர் குறித்து எழுதுவதாக இருப்பின் கம்ப்யூட்டர் குறித்த முழுமையான தகவல்கள் என தலைப்பிருக்க வேண்டும். 



Share this

2 comments

நீங்கள் இந்த ஊர் ?தயவுசெய்து பதில் கூறுங்கள் rajaraja8877@gmail.com

நான் உங்கள் ஊரேதான் ராஜா ராஜ்

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.