logo blog

ஸ்பைஸ் நிறுவனத்தின் டச் ஸ்கிரீன் மற்றும் கீபோர்ட் இரண்டும் உள்ள மொபைல் போன் !

டைப் செய்திட கீபோர்ட் , கேம்ஸ் மற்றும் மற்ற ஆப் களை கையாள டச் ஸ்கீரீன் என இரண்டையும் ஒரே மொபைல் போனில் கொண்டு வந்துள்ளது ஸ்பைஸ் நிறுவனம்.

இரண்டு வசதியும் உள்ள இந்த போனின் விலை எவ்வளவு தெரியுமா?  வெறும் 5000 ரூபாய் தான். பட்ஜெட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

HVGA டிஸ்பிளே கொண்ட இந்த போனில் 3.5 அங்குல அகல திரை,  இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் Dual core Processor இயங்குகிறது.

LED Flash இணைந்த 3.2  Mega Pixel மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது.

இணைய அழைப்பு பயன்பாட்டிற்கு, 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட இன்னொரு கேமரா முன்புறமாகத் தரப்பட்டுள்ளது.

மற்ற Spice Smartphones களை போலவே, இதிலும் 3ஜி இணைப்பு மற்றும் இரண்டு சிம் இயக்கமும் இதில் கிடைக்கிறது. Spice Cloud, Opera Mini, BBM, Twitter, Whatsapp, OLX மற்றும் Getit ஆகிய அப்ளிகேஷன்கள் பதியப்பட்டு இந்த மாடல் வெளிவருகிறது. Mute, Popup Play, Intelligent Answer என மேலும் பல புரோகிராம்களும் கிடைக்கின்றன. 

இந்த போனில் உள்ள Special Features டச் ஸ்கிரீன் மற்றும் QWERTY Keyboard தரப்பட்டிருப்பதுதான். எனவே, கீ போர்ட் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களையும், Touch Screen வசதியினைப் பெரிதாக எண்ணும் வாடிக்கை யாளர்களின் எதிர்பார்ப்பு மற்றும் விருப்பத்தை இந்த போன் நிறைவு செய்கிறது.

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன். இதன் தடிமன் 11 மிமீ. எடை 118 கிராம்.

இதன் ராம் மெமரி 512 MB storage Memory, எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி. இதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.

இதன் Battery 1500mAh திறன் கொண்டதாக உள்ளது. 

வெள்ளை மற்றும் சில்வர் வண்ணங்களில் வரும் இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.4,799 மட்டுமே. இதனுடன் ரூ.500 மதிப்புள்ள போன் வைத்துப் பயன்படுத்தக் கூடிய கூடு தரப்படுகிறது. 

Amazon மற்றும் Shaolic இணைய தளங்கள் மூலமாகத் தற்போது இதனை வாங்கலாம்.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.