logo blog

MS-Word - டாகுமெண்டில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையை அறிந்துகொள்ள

இன்றைய காலத்தில் MS - Word பயன்படுத்தாத அலுவலங்களே இல்லை. கடிதம், கட்டுரை, மற்றும் ஆபிஸ் தொடர்பான டாகுமெண்டுகள் M.S. Word மூலம்தான் தட்டச்சிடப்படுகின்றன.

நீங்கள் தட்டச்சிடும் எம்.எஸ்.வேர்ட் டாகுமெண்டில் குறிப்பிட்ட அளவுதான் எழுத்துகள், வார்த்தைகள் இருக்க வேண்டும் என்ற நிர்ணயம் செய்திருந்தால், வார்த்தைகளின் எண்ணிக்கை அறிய அதிலேயே வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
word count in ms-word
எம்.எஸ்.வேர்ட் 

2007 MS-word -ல் இடது கீழ்புற மூலையில் பக்கங்களின் எண்ணிக்கை மற்றும் வார்த்தைகளின் எண்ணிக்கையை காட்டும் பட்டன்கள் இருக்கும்.


அதில் words என்ற பட்டன் மீது கிளிக் செய்தால், Word Count Dialog box தோன்றும். தோன்றிய பெட்டியில் அந்த டாக்குமெண்டில் இடம்பெற்றிருக்கும்

  1. பக்கங்களின் எண்ணிக்கை (Number of Pages), 
  2. வார்த்தைகளின் எண்ணிக்கை (Number of Total Words), 
  3. ஸ்பேஸ் இல்லாமல் அதில் உள்ள கேரக்டர்களின் எண்ணிக்கை (characters),
  4. இடைவெளியுடன் சேர்த்து உள்ள கேரக்டர்களின் எண்ணிக்கை(characters with space), 
  5. பத்திகளின் எண்ணிக்கை Number of Paragraphs 
  6. மற்றும் டாக்குமெண்டில் உள்ள மொத்த வரிகளின் எண்ணிக்கை (Lines) 
என தனித்தனியாக பட்டியலிடப்பட்டிருக்கும்.

MS- Word Tips Tamil

இந்த வசதியைப் பயன்படுத்தி, எம்.எஸ். டாகுமெண்டில் இடம்பெற்றுள்ள பக்கங்கள், பத்திகள், அதிலுள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டறியலாம்.

இந்த வசதியின் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வார்த்தைகள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட  முக்கிய அலுவலக கடிதங்கள், கட்டுரைகள் போன்றவற்றை தட்டச்சிட்டு அனுப்ப முடியும். 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.