logo blog

பிளாக்கர் வலைத்தளங்களுக்குப் பயன்படும் புதிய ரெஸ்பான்சிவ் பிளாக்கர் டெம்ப்ளேட்

மொபைல் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் போன்களின் வருகையால், மொபைல் மூலம் அதிகமானோர் பிரௌசிங் செய்கின்றனர்.

கம்ப்யூட்டர் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 25% சதவிகித்தினர் கம்ப்யூட்டர் மூலமும்,  75% சதவிகித்தினர் மொபைல் மூலமும் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.

எனவே அதற்கு தகுந்தது போல வலைப்பூவின் வடிவமைப்பும் (Blogger Template) இருக்க வேண்டும்.

ரெஸ்பான்சிவ் ப்ளாக்கர் டெம்ப்ளேட்: 

கம்ப்யூட்டர், டேப்ளட், மொபைல் திரைகள் பல்வேறு அளவுகளில் வருகிறது. இந்த திரைகளின் அகலத்திற்கு ஏற்ப வலைப்பூவை மாற்றி அமைத்துக்கொள்பவைதான் 'ரெஸ்பான்சிவ் டெம்ப்ளேட்'.

இந்த டெம்ப்ளேட்டில், பார்க்கப்படும் சாதனத்துக்கு ஏற்ப நீள அகலங்களை மாற்றிக்கொள்ளும்படி நிரல்வரிகள் எழுதப்பட்டிருக்கும். இதனால் எந்த சாதனத்திலிருந்து வலைப்பூவை பார்க்கிறோமோ அதன் திரையின் நீள, அகலத்திற்கு ஏற்ப வலைப்பூவின் வடிவமைப்பும் பொருத்தமாக மாறிவிடும்.

உதராணத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
Responsive-blogger-template-for-tamil-bloggers
Responsive Blogger Template

இத்தகைய வார்ப்புருக்கள் (Templates) சில இலவசமாக கிடைக்கின்றன. கூகிளில் Free Responsive blogger template என தேடினால்  கிடைக்கும்.  விலை கொடுத்து வாங்க கூடிய Premium Responsive Blogger Template களும் கிடைக்கின்றன.

தங்கம்பழனி வலைப்பூ வில் ரெஸ்பான்சிவ் ப்ளாக்கர் டெம்ப்ளேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரௌசரை மினிமைஸ் செய்தால், வலைப்பூவின் நீள, அகலமும் அதற்கு பொருத்தமாக சிறியதாகி விடும்.

Tags: blogger responsive template, responsive template, blogger resizable template, Free Responsive blogger template, Premium Responsive Blogger Template. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.