logo blog

ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ள சென்சார் டெக்னாலஜி குறித்த முழுமையான விவரங்கள்

"டச் போன்" இல்லாதவங்களே இப்போ இல்லைன்னு சொல்லலாம். அந்தளவுக்கு விலை மலிவா இப்போ கிடைக்குது... தொட்டவுடனே பட்டுன்னு ஆப்ச ஓப்பன் பண்ணிக் காட்டுகிற "Touch Phone" எப்படி செயல்படுதுன்னு தெரிஞ்சுக்கலாமா? அதுல நிறைய "Sensor" இருக்கு. அதுக்கு தமிழ்ல "உணரி"ன்னு பேரு வச்சிருக்காங்க. நாம தொட்டவுடனே அதை உணர்ந்து செயல்படறதாலதான் அதுக்கு இந்த பேரு. இதுல 14 வகையான "சென்சார்" இருக்கு. அதுல ஒரு சில முக்கியமானதை மட்டும் இங்கே பார்க்கலாம்.

Sensor Technology என்றால் என்ன? 

Sensor Technology என்பதை  தமிழில் "உணர்வலை" தொழில்நுட்பம் எனலாம். ஏதாவது ஒரு புற காரணியின் மூலம் தூண்டுதலைப் பெற்று, அந்த தூண்டலுக்கேற்ப செயல்படும் நுட்பம் சென்சார் தொழில் நுட்பமாகும். இன்று ஸ்மார்ட் போன்களில் இத் தொழில்நுட்பம் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது.
tamil smartphone sensor technology
ஸ்மார்ட்போன் டெக்னாலஜி

சென்சார் தொழில்நுட்பத்தின் செயல்பாடு: 


சென்சார் தொழில்நுட்பமானது ஒரு தூண்டுலைப் பெற்று அதற்கேற்ற வகையில் இயங்கும் என பார்த்தோம். அவ்வாறு ஏற்படுத்தப்படும் தூண்டுதலானது வெப்பமாக (heat) இருக்கலாம். ஒளியாக (Light) இருக்கலாம். ஏன் அது ஒரு ரேடியோ அலையாக (Radio) கூட இருக்கலாம். 
smartphone sensors
மேற்கண்ட இவற்றில் எந்த ஒரு காரணியும் ஒரு தூண்டுதலை (Temptation) ஏற்படுத்த முடியும். அது போன்ற "தூண்டுதலுக்கேற்ற துலங்கல்" செயல்பாடுதான் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகிறது. .

விரல்கள் இலேசாக திரையில் தெரியும் குறிப்பிட்ட அப்ளிகேஷன் அமைந்திருக்கும் படத்தை தொடும்பொழுது அந்த அப்ளிகேஷனுக்கான தூண்டல் சமிக்சைகள் உருவாக்கப்பட்டு,  அந்த  அப்ளிகேஷனை செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறது.  

சென்சார் தொழில்நுட்பம் தற்பொழுது பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சியுற்று வருகிறது. 

  • Ambient Light Sensor- ஒளி உணர்வலை: 


தற்போதுள்ள ஸ்மார்ட் டிவைஸ்களான (Smart Devices) டேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. இத் தொழில்நுட்பத்தின் பயனாக இதுபோன்ற சாதனங்களில் பயன்படுத்தப்படும் Battery Life அதிகரிக்கிறது. 

Ambient light sensor நுட்பமானது Display யை சரி செய்து, நமக்கு தெளிவாக காட்சி அமைப்பைக் கொடுக்கிறது.

அதிக ஒளியுடன் Display இருந்தால், அதனைக் குறைத்து, காட்சியினைத் தெளிவாகக் காட்டுவதுடன், அதன் மூலம் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.

  • Proximity sensor - அருகமைவு உணர்வலை 


இப்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் தொடுதிரை தொழில் நுட்பம் உள்ளது.  ஆனால் உங்களுக்கு "போன் கால்" வரும்போது மட்டும் அந்த தொடுதிரை தொழில்நுட்பம் வேலை செய்யாது. அவ்வாறு வேலை செய்யாமல் தடுக்கும் நுட்பத்திற்கு பெயர்தான் Proximity Sensor.

உங்களுக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசுவதற்கு காதருகே ஸ்மார்ட்போனை கொண்டு செல்லும்பொழுது தானாகவே Touch Screen Lock ஆகிவிடும். அதனால் எந்த ஒரு அப்ளிகேஷனும் காதில் பட்டு திறக்காது.  பேசி முடித்த பிறகு, காதிலிருந்து ஸ்மார்ட்போனை விலக்கும்போது  தானாகவே மீண்டும் Touch Screen பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்த அருமையான வேலையை செய்வதுதான் Proximity Sensor

  • GPS - Global Positioning System- புவி இட நிறுத்தல் 


இந்த தொழில் நுட்பம், Military operations களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.  சில வருடங்களுக்கு முன்பே பொதுமக்களுக்கும் GPS Technology பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.  

நீங்கள் இருக்கும் இடத்தை, இந்த தொழில் நுட்பத்தின் பின்னணியில் இயங்கும் Graph கண்டறிந்து, Smartphone Display - ல் காட்டுகிறது. இப்பயன்பாட்டின் மூலம் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியைக் கண்டறியலாம். GPS என்று சொல்லப்படும் Global Positioning System நுட்பத்திற்கான செயற்கைகோள்கள் பூமியை ஒரு நாளில் இருமுறை சுற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • அசிஸ்ட்டட் ஜிபிஎஸ் - Assisted GPS 


Mobile Network கள் நேரடியாக Satelitesகளை தொடர்பு கொள்ள முடியாத போது, இந்த தொழில் நுட்பமானது, அதற்கான சர்வர்களின் உதவியுடன் செயல்படுகிறது.  

iPhone 3G, 3GS, iPhone4 ஆகியவை இந்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. iPhone 4 S, GLONASS என்று அழைக்கப்படும் கூடுதல் வசதியுடன் கூடிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது.

  • Accelerometer- அக்ஸிலரோமீட்டர் 


ஸ்மார்ட் போனில் இயங்கும் Accelerometer நுட்பம், போன் எந்த பக்கம் திருப்பப்படுகிறது என்பதனை உணர்ந்து, அதற்கேற்றார் போல, திரைக் காட்சியைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, பக்கவாட்டில் போன் திருப்பப்படும்போது, காட்சி Portrait நிலையிலிருந்து Landscape நிலைக்கு மாற்றப்படுகிறது. 

இதே தொழில் நுட்பம், செறிந்த நிலையில், gyroscopic Sensor என்னும் தொழில் நுட்பமாகச் செயல்பட்டு, போனின் மாற்று நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு தன் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.

  • Compass -காம்பஸ் 


காம்பஸ் என்பது புவியின் முனைகளைக் காந்தத்தின் உதவியுடன் அறிந்து திசை காட்டும் கருவியாகும். ஸ்மார்ட்போனில் உள்ள இந்த தொழில் நுட்பம், காந்த அலைகளைப் (Magnetic waves) போனின் செயல்பாட்டைப் பாதிக்காத வகையில் மாற்றி, திசைகளைக் காட்டுகிறது. 

  • Other Sensor Technology: மற்ற சென்சார் நுட்பங்கள்


மேலும் gyroscope, BSI போன் சென்சார் தொழில்நுட்பங்களும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட அனைத்து தொழில் நுட்பங்களும், குறைந்த மின்சக்தி செலவில் Low power, திறன் கூடுதலாகக் கொண்ட செயல்பாடுகளைத் தரும் இலக்குடன் செயல்படுபவை. 

Sensor Technology தொடர்ச்சியாக பல்வேறு படிநிலைகளில் வளர்ச்சியுற்று வருகிறது. எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பமானது மேலும் ஆச்சர்யமிக்க புதிய செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Tags: Sensor, sensors, smartphone sensors, bsi sensors, gyroscope sensor, Ambient Light Sensor, Proximity sensor, GPS Global Positioning System, Assisted GPS, Accelerometer, Compass sensor. 

Share this

1 comment

This comment has been removed by a blog administrator.

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.