logo blog

ஆளில்லா விமானம் வழியாக அஞ்சல் சேவை [Courier Service]

மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் செய்யும் காலமிது. உணவும், நீரும் மட்டுமே இன்னும் இயந்திரங்களால் உருவாக்க முடியவில்லை. மற்றபடி அனைத்து வேலைகளையும் செய்வதற்கு "இயந்திரங்கள்" வந்துவிட்டன. அந்த வகையில் பிரபலமான "அமேசான்" நிறுவனம் கொரியர் சர்வீஸ் செய்வதற்கு குட்டி ரக விமானங்களை விரைவில் பயன்படுத்த உள்ளது.

அமேசான் இணையதளத்தில் ஆன்லைன் ஆர்டர் செய்யப்படும் பொடுட்களைக் உடனடியாக கொண்டு சேர்க்க இந்த வகை விமானங்களை கொரியர் சர்வீசுக்காக பயன்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சோதனை முயற்சியாக இந்த வகை விமானங்களை பயன்படுத்திப் பார்த்ததில் பொருட்களை, சரியான முகவரிக்கு கொண்டு சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.



amazon-plan-to-deliver-products-through-unmanned-aircraft
ஆளில்லா விமானத்தில் கொரியர் சேவை

ஆளில்லாத விமானம் (unmanned aircraft) 


இந்த குட்டி ரக விமானத்தை ஓட்ட ஆட்கள் தேவையில்லை. தானாகவே இயங்கும். இந்த வகை விமானங்கள் ஐந்து கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து வரும் சக்தி கொண்டது. 

சுமார் பத்துகிலோமீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் இந்த வகை விமானங்கள் பார்சலை சரியாக கொண்டு வந்து சேர்க்கிறது. 

"அமேசான் வெப்சைட்" மூலம் தளத்தில் பொருட்களை ஆர்டர் செய்த அரைமணி நேரத்திற்குள் அப்பொருட்கள், வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடும். 

அது தொடர்பான வீடியோ ஒன்றினை தற்பொழுது அமேசான் நிறுவனம் வெளியிடபட்டுள்ளது.

வீடியோவில் அமேசான் நிறுவனத்திலிருந்து பொருளை ஒரு சிறிய பெட்டியில் எடுத்துச் செல்லும் விமானம், சரியாக குறிப்பிட்ட வீட்டின் முன் இறங்கி பார்சலை இறக்கவிட்டு, தானாகவே மேலேழும்பி சென்றுவிடுகிறது. 


இந்த சேவை முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது.

அமேசான் நிறுவனத்தைப் போன்றே, அமெரிக்காவின் பிரபல பீட்சா நிறுவனமான "தொமினோஷ்" நிறுவனம் பீட்சாக்ளை ஆளில்லா விமானம் மூலம் கொரியர் அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் இதுபோன்ற ஆளில்லாத குட்டி ரக விமானம் மூலம் கூரியர் சேவை செய்யும் வசதிகள் வருமெனில், போக்குவரத்து செலவுப் பிரச்னைகள் குறைவதோடு, டிராபிக் பிரச்னைகளும் ஏற்படாமல் இருக்கும். மும்பை போன்ற மக்கள் தொகை அடர்ந்த பெருநகரங்களில் இதுபோன்ற ஆளில்லா குட்டி ரக விமான கொரியர் சேவை பயனுள்ளதாக இருக்கும்.

Update: 13-05-2016

இந்த வகை குட்டி விமானத்தின் மூலம் தனி மனிதர்களும் பயணம் செய்ய முடியும் என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெட்ஸ்கீ வீரர் பிரான்கி சபாட்டா நிரூபித்துள்ளார். இதன் மூலம் எதிர்காலத்தில் தனி மனிதர்கள் இதுபோன்ற "ட்ரோன்" எனப்படும் சிறிய வகை விமானங்களில் பறப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

trone flight



In English: 

Amazon.com Inc. is testing delivery packages using drones, CEO Jeff Bezos said Sunday on the CBS television program "60 Minutes."

Bezos said the drones, unmanned vehicles that fly through the air, could deliver packages that weigh up to five pounds. That represents roughly 86 percent of packages that Amazon delivers, he said.

The drones, which would pick up items from Amazon's distribution centers and fly them to customer's homes, probably won't be put into use for four or five years, Bezos said.

"It will work, and it will happen, and it's gonna be a lot of fun," he said in the "60 Minutes" interview.

"It will work, and it will happen, and it's gonna be a lot of fun," he said in the "60 Minutes" interview.
Amazon may start using the drones, which can deliver packages within 30 minutes, in four to five years pending Federal Aviation Administration approval, Bezos said.

Source and Thanks to : http://www.chicagotribune.com/

Tags: Amazon, amazon courier service, amazon air courier service, amazon, plan, to, deliver, products, through, unmanned, aircraft.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.