logo blog

போட்டோஷாப் - ல் NHM Converter மூலம் தமிழ் எழுத்துரு பயன்படுத்துவது எப்படி?

how to use Tamil font in all Photoshop


போட்டோக்களை எடிட் செய்து அழகூட்ட பயன்படும்  (photographic designer)பயன்படும் ஓர் அருமையான மென்பொருள் போட்டோஷாப். நேரடியாக தமிழ் எழுத்துருக்களை போட்டோஷாப்பில் பயன்படுத்த முடியாது எனினும் போட்டோஷாப்பில் தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளது. அது குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

போட்டோஷாப்பில் தமிழ் எழுத்துரு பிரச்சினை


போட்டோஷாப்பில் ஆங்கிலத்தில் எழுதுவது எளிதானதுதான். அது இயல்பிருப்பாக அமைந்திருக்கும். தமிழில் எழுதுவது கடினம். தமிழ் எழுத்துருக்களை அம் மென்பொருளை எடுத்துக் கொள்ளாது. தமிழில் தட்டச்சிட்டாலும் அவைகளை சிறிய கட்டங்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ மாறிவிடும். 

எழுத்துரு பிரச்னையைத் தீர்க்க வழி


போட்டோஷாப்பில் பயன்படுத்த விரும்பும் தமிழ் எழுத்துருக்களை தரவிறக்கம்செய்து கொண்டு, அவற்றை கணினியில் உள்ள Fonts போல்டரில் சேர்க்க வேண்டும்.

Also Read: கம்ப்யூட்டரில் புதிய எழுத்துருக்களை Fonts சேர்ப்பது எப்படி? 

பிறகு NHM Writer மென்பொருளின் துணையுடன் உங்களுக்கு வேண்டிய எழுத்துக்களை உள்ளிட்டு, அவற்றை காப்பி செய்துகொண்டுபோய் போட்டோஷாப்பில் பேஸ்ட் செய்யலாம். அல்லது e-Kalappai, Azhagi மென்பொருட்களினையும் பயன்படுத்தலாம். அழகி மென்பொருளிலேயே எழுத்துரு மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு.

தமிழ் எழுத்துரு தரவிறக்கம் & நிறுவல்


யுனிக்கோட் எழுத்துருக்களிலேயே பல வடிவ எழுத்துருக்கள் உள்ளன. அவற்றை Download செய்து பயன்படுத்தலாம். 

சுட்டி: Download Unicode Fonts
             Download tamil True Type fonts 

  • டவுன்லோட் செய்யப்பட்ட எழுத்துருக்களை காப்பி செய்துகொண்டு, கம்ப்யூட்டரில் Start பட்டனை அழுத்தி, 
  • Control Panel  என்பதை கிளிக் செய்து, 
  • Fonts போல்டரை திறந்து, 
  • அதில் Paste  செய்துவிடலாம். 
  • பிறகு பாண்ட்போல்டரை மூடிவிடலாம்.

NHM Converter: 


NHM Converter என்பது ஒரு எழுத்துரு மாற்றி மென்பொருளாகும். இந்த மென்பொருள் மூலம் ஒரு எழுத்துருவில் உள்ள வார்த்தைகளை மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றிக்கொள்ள முடியும். 

உ.ம். 

உங்களுக்கு யுனிகோட் எழுத்துரு வேண்டும். ஆனால்  பாமினி தமிழ் தட்டச்சு மட்டுமே தெரியும் எனில் பாமினி எழுத்துருவைப் பயன்படுத்தி வேண்டியதை தட்டச்சிட்டுவிட்டு, அவற்றை அப்படியே Unicode  எழுத்துருவை தேர்ந்தெடுத்து Convert என்ற பொத்தானை சொடுக்குவதன் மூலம் மாற்றிக்கொள்ள இயலும். 

தமிழ் தட்டச்சு தெரியவில்லையா? 


NHM Writer- மென்பொருளில் உள்ள Phonetic முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆங்கில எழுத்துகளை உள்ளிட்டு ஒலிபெயர்ப்பு முறையில் தமிழ் வார்த்தைகளை பெறலாம். பிறகு அந்த வார்த்தைகளை NHM Converter மூலம் தேவையான எழுத்துருவிற்கு மாற்றிக்கொண்டு, மாற்றிய எழுத்துருவை போட்டோஷாப்பில் பயன்படுத்திக்கொள்ள முடியும். போட்டோஷாப்பில் Text Tool தேர்ந்தெடுத்து அதில் பேஸ்ட் செய்த பிறகு அந்த எழுத்துக்குரிய தமிழ் Font -ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம் தமிழ் எழுத்துகள் காட்சி அளிக்கும். 

Tam, Bamini, Tab, TACE, TSCII, Unicode, Vanavil, Shreelibi, Unicode, Vanavil, Softview ஆகிய தமிழ் எழுத்துருக்கள் உள்ளன. வேண்டிய எழுத்துருக்களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். 

எளிய தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ள இந்த தளத்தை நீங்கள் அணுகலாம்.

Also Read: தமிழில் டைப் செய்ய பயன்படும் NHM - Writer மென்பொருள்

வீடியோ டுடோரியல் :

கீழிருக்கும் இணைப்பிணை சொடுக்கி இப்பதிவிற்கான வீடியோவினைக் காணுங்கள்.

How to use tamil in photoshop cs3 (video tutorial)

Tags: NHM writer, NHM Converter, font converter, tamil font converter, photoshop cs3, tamil in photoshop cs3, Photoshop, Tamil Type in photoshop, tamil type in photoshop cs3, Type tamil fonts, photoshop tamil type.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.