logo blog

ஆன்ட்ராய்ட் போனில் தமிழ் டைப் செய்ய [Mobile Tips]

ண்ட்ராய்ட் போன்களில் தமிழ் டைப் செய்ய ஒரு சில மென்பொருட்கள் இருக்கின்றன. எனினும் அவற்றில் சிறந்ததாக கருதப்படுவது முரசு செல்லினம் மென்பொருள்.


tamil typing software
Tamil Typing Software


ஆன்ட்ராய்ட் போனில் தமிழ் டைப் செய்ய: முரசு செல்லினம் மென்பொருள் (செயலி) : 

மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன் என்பவர் இச் செயலியை உருவாக்கினார். இலவசமாக கிடைக்கும் Murasu Sellinam மென்பொருள் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுள்ளது.

இம்மென்பொருளை பயன்படுத்திய பயனர்கள் கொடுத்த Feed Back -ஐ ஆராய்ந்து, அதில் உள்ள குறைகளை நிவர்த்தி முரசு மெல்லினம் மென்பொருள் புதுப்பிக்கப்பட்டது.

புதுப்பிகப்பட்ட செல்லினம் 2 செயலியை ஆண்ட்ராய்ட் ஸ்டோரில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆன்ட்ராய்ட் போன்களில் தமிழ் டைப் செய்ய இந்த செல்லினம் 2 மென்பொருள் ஏற்றாக இ.

செல்லினம் மென்பொருளில் உள்ள சிறப்பம்சங்கள்


1. சொல் திருத்தி: 

மென்பொருளின் மிக முக்கியமான சிறப்பாக சொல்திருத்தி (Automatic word Editor) வசதியை கூறலாம். இந்த செல்லினம் தமிழ் எழுதியில், மற்ற தமிழ் டைப் செய்யும் மென்பொருள்களில் ஏற்படுவது போன்று சொற்பிழைகள் ஏற்படுவதில்லை. இதில் தவறாக எழுத்துப் பிழையுடன் தட்டசிட்டாலும், அந்த வார்த்தையை "சொல் திருத்தி" வசதியின் மூலம் தானாகவே திருத்தி அமைத்து விடும். 

2. எண்களை உள்ளிடுதலில் புதிய வழி: 

சாதாரணமாக மொபைல் போனில் உள்ள கீபோர்டில் எண்களை உள்ளிட 123 என்ற விசையைகளைத் தட்டி, பிறகு கிடைக்கும் குறியீடுகள் மற்றும் எண்களுக்கான குறியீடுகளை போர்டில் தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்யும் வழிமுறையே உள்ளது. 

ஆனால் புதிய செல்லினம் பதிப்பில் அவ்வாறில்லை. முதல் வரிசையில் உள்ள விசைகளை தொடர்ந்து அழுத்தினாலே எண்களை உள்ளிடும் வசதி தோன்றும்.

tamil type app for android


3. Predictive Text:

ஆங்கிலத்தில் ஒரு சொல்லை தட்டச்சிடும்பொழுது, தானாகவே இந்த சொல்தானா என்பதை காட்டும் வசதிகள் உண்டு. அதுபோல செல்லினம் மென்பொருளில் தானியங்கி வார்த்தை வசதிகள் உண்டு. நீங்கள் தட்டச்சிடும் முதன் மூன்று எழுத்துக்களை உணர்ந்துகொண்டு அந்த எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகளை வரிசைப்படுத்தி காட்டும். 

செல்லினம் மென்பொருள் மூலம் தட்டச்சிடும்பொழுது தோன்றுகிற கீழ்நோக்கிய அம்புக்குறி (Lower aero Mark) -ஐ அழுத்தினால் அந்த எழுத்துகளில் தொடங்கும் சொற்பட்டியல் விரித்துக் காட்டப்படும். தேவையான வார்த்தையை அதிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். 

செல்லினம் மென்பொருளில் உள்ள கூடுதல் வசதிகள்: 

ஆன்ட்ராய்ட் போனில் தொழிற்படும் சொல் திருத்தியுடன் கூடிய முதல் தமிழ் மென்பொருள் இதுவாகும். இம்மென்பொருளை பிரபல செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களான HTC, APPLE தங்களுடைய ஸ்மார்ட்போன் சாதனங்களில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து வழங்குகின்றன. 

வெளியான சில மாதங்களிலேயே செல்லினம் மென்பொருள் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை உணர்ந்த மற்ற ஆன்ட்ராய்ட் போன் தயாரிப்பாளர்களும் இதனை தங்களுடைய தயாரிப்புகளில் இணைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

செல்லினம் 2 மென்பொருள் ஆன்ட்ராய்ட் போன்களில் தமிழ் டைப் செய்ய பயன்படும் மிகச்சிறந்த மென்பொருட்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஒரு லட்சத்திற்கும் மேலானோர்கள் இதை தரவிறக்கம் - டவுன்லோட் - செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

செல்லினம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி : Download Free Tamil input Software Sellinam 2


ஆங்கிலத்தில் செல்லினம் மென்பொருள் பற்றிய குறிப்புகள்: 

  • Sellinam enables Tamil text input on mobile devices. 
  • It was first developed in the year 2003 and subsequently launched for public usage in 2005 on Ponggal day.
  • Sellinam for Android is a complete input method suite that has specific keyboards for Tamil, English, Phone Number and URL entries. 
  • You may choose between Murasu Anjal and Tamil99 keyboard layouts for Tamil text input.
  • Sellinam also includes a dictionary that offers suggestions based on the first few letters that you type. 
  • This tremendously helps you compose your messages quickly and easily while minimising embarrassing spelling errors.
  • As this is a system wide input method, you may use Sellinam to send SMS messages, Whatsapp, Viber, Skype, Tweet, Facebook and all the fun things you do on your phone - directly in Tamil. 
  • There is no need to cut-and-paste!
  • Enjoy Sellinam and please spread the word around if you like this app.

Features of Sellinam Version 2.0

This is a major new version of Sellinam for Android. Some key features include:

1. World-level auto-correction
2. Extended suggestions list
3. Long-press for alternate keys
4. UI changes
5. Various bug fixes for stability
6. Support for Android 4.3

For More Details visit : http://sellinam.com

Tags: Free Tamil Typing Software, Tamil software for android Phone, Tamil android tips, Sellinam Tamil Typing software.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.