logo blog

ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் !

இணையத்திலும் சரி, சராசரி வாழ்க்கையிலும் சரி, ஸ்மார்ட்போன் என்ற வார்த்தை தற்பொழுது அதிகமாக புழங்கி வருகிறது.

தகவல் தொடர்புக்கு பயன்படுவதோடு விளையாட்டு, மருத்துவம், காலநிலை, வரைபடங்கள், இன்டர்நெட் போன்ற அன்றாட முக்கியமான தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கி ஒரு கணினியை போன்று ஸ்மார்ட்டாக செயல்படுவதால் இதற்கு ஸ்மார்ட்போன் என்று பெயர். 

Smartphone Operating Systems - ஸ்மார்ட்போன் இயங்குதளம்


ஸ்மார்ட் போன்களை இயக்க வைக்க பயன்படும் ஓர் அடிப்படை மென்பொருளை Smartphone Operating Systems என அழைக்கிறோம். கம்ப்யூட்டருக்கு சில வகை OS உள்ளது போன்றே ஸ்மார்ட் போனிற்கு OS உள்ளது. அவற்றில் முதன்மையானதும், அனைத்து பயனர்கள் எளிதாக கையாளக் கூடியதுமான இயங்குதளம் Android OS. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் தரத்திற்கு அடுத்து உள்ளது விண்டோஸ் 8 இயங்குதளம், அதன் பிறகு பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் iOS. இதுபோன்ற வேறு சில இயங்குதளங்களும் ஸ்மார்ட் போன்களுக்கு  உண்டு.

Android OS - ஆண்ட்ராய்ட் இயங்குதளம் 


ஆன்ட்ராய்ட் என்பது ஒரு மென்பொருள். நவீன ஸ்மார்ட்களுக்கான இயங்குதளம் இது. ஆண்ட்ராய் இயங்குதளம் சில பதிப்புகள் பெற்றுள்ளது. புதிய பதிப்பு கிட்-காட். ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களில் இயங்க கூடிய மொபைல் போன்கள் மிக பிரபலமானதற்கு காரணம், அதனுடைய யூசர் பிரண்ட்லி இடைமுகம். Android பற்றிய முழுமையான தகவல்களுக்கு: 



ஸ்மார்ட் போன் பகுதிகள்


எந்த ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பும், அப்பொருள் பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருப்பது நல்லது. அந்த வகையில் நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு முன்பு அதுபற்றிய முக்கியமான தகவல்களை அறிந்துகொள்வது நல்லதுதானே.

Type of Display in smartphone (Touch Screen) - திரை


ஸ்மார்ட் போனில் முதல் தோற்றத்தை தருவது டிஸ்பிளேதான். Smartphone - ன் அனைத்து டிஸ்பிளேக்குளும் தொடுதிரை நுட்பத்தின் அடிப்படையில் அமைந்தவை. டிஸ்பிளேயில் நீள அகலங்களை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எந்த வகையான டிஸ்பிளே அமைந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். 

டிஸ்பிளேயில் TFT LCD, IPS-LCD, Resistive Touchscreen LCD, Capacitive Touchscreen LCD, OLED, AMOLED, Super AMOLED, Retina Display, Haptic / Tactile touchscreen, Gorilla Glass
போன்ற வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. 

அவற்றில் தற்பொழுது புதிய நுட்பத்துடன்  வெளிவந்துள்ள Gorilla Glass Display. இந்த  வகை டிஸ்பிளேயில் உள்ள நுட்பமானது கீழே விழுந்தாலும் திரை உடையாது. கீரல் விழாது. இந்த வகை நுட்பமே தற்பொழுதும் பெரிதும் விரும்படுகிறது. மேலும் தொடுதிரை தொழில்நுட்பத்தைப் பற்றி அறிய கீழுள்ள பதிவை வாசியுங்கள்.


Type of processor in smartphone - செயலி


ஸ்மார்ட் போனில் மிக முக்கியமான அம்சம் பிராசசர் (Processor). ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிகேஷன்களை செயல்படுத்துவதில் பிராசசரின் பங்கு முக்கியமானது. பிராசசரிலும் சில வகை உண்டு. 

அவற்றில் முக்கியமானதொரு பிராச்சர் Qualcomm Snapdragon Processor ஆகும். 

இந்த Processor பயன்படுத்தப்பட்டு வெளிவந்துள்ள ஸ்மார்ட்போன்களின் வரிசை பட்டியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Qualcomm Snapdragon Processor phones


Sony Z Ultra, Sony Xperia Z1, Google Nexus 5, Nokia Lumia 1520, Samsung Galaxy Note 3 (LTE), LG G2, Sony Xperia Z ultra, Samsung Galaxy S4, HTC one Max, HTC One , Samsung Galaxy S4 google play edition, Samsung Galaxy S4 Active, LG Optimus G Pro, HTC One, Samsung Galaxy S4 mini, Motorola MOTO G, Samsung Galaxy mega, HTC One mini, HTC 8XT, HTC First, BLU Studio 5.0 S, BLU STUDIO 5.3 S, ZTE Nubia 5, ZTE Grand S, BlackBerry Z30, Moto X by Motorola, Sony Xperia ZL, Driod DNA by HTC, Google Nexus 4, Lg Optimus G, Nokia Lumia 521, Nokia Lumia 520, Nokia Lumia 1020, Nokia Lumia 925, Samsung Galaxy S III, Balckberry Q10 என்பன போன்ற பல ஸ்மார்ட்போன்களில் இந்நிறுவன பிராசசர்களே இடம்பெற்றிருக்கின்றன. ஸ்மார்ட்போன்களுக்காகவே தயாரிக்கப்பட்ட சிறப்பு பிராசசர்கள் இவை. 

Smartphone Battery - ஸ்மார்ட் போன் பேட்டரி


பல்வேறுபட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் போனிற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க கூடியவை பேட்டரிகள். இந்த பேட்டரியில் சில வகை உண்டு. ஸ்மார்ட் போன் வாங்கும்போது அவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

Smartphone Camera - ஸ்மார்ட்போன் கேமரா


கேமரா இல்லாமல் எந்த ஒரு ஸ்மார்ட் போனும் வெளிவருவதில்லை. இதில் முன்புற கேமரா(Camera), பின்புற கேமரா (Rear Camera)என்ற இரு கேமரா உள்ள போன்களே சிறப்பு வாய்ந்தவைகளாக உள்ளன. இரு கேமராக்கள் இடம்பெற்றுள்ள போன்கள் நவீன 3G, 4G  நெட்வொர்க்களை சப்போர்ட் வசதி கண்டிப்பா இருக்கும். கேமராக்களில் பிக்சல் என்பது போட்டோக்களின் தரத்தை நிர்ணயிக்கிறது. அதிக பிக்சல்கள் கொண்ட கேமராவானது, படங்கள் மற்றும் வீடியோக்களின் தரத்தை அதிகப்படுத்துகிறது. துல்லியமான படங்களைக் கொடுக்கிறது. கேமாரக்களில் Auto sensor, LED Flash போன்றவை கூடுதல் வசதிகள். இவைகள் போட்டோக்களின் தரத்தை மேம்படுத்திக்கொடுக்க கூடியவை.

Smartphone RAM - ஸ்மார்ட்போன் ரேம்


கணினியில் உள்ளதைப்போன்றே ஸ்மார்ட் போனிலும் RAM உண்டு.  Random Access Memory என அழைக்கப்படும் இது 1GB, 2GB என்ற திறனளவுகளில் உள்ளன.  ஒரு ஸ்மார்ட் போனின் நினைவகத்திறனை நிர்ணயிப்பது RAM தான். அதிக நினைவகத்திறன் கொண்ட ஸ்மார்ட் போனில் அதிகளவு அப்ளிகேஷன்களை ப்பயன்படுத்த முடியும். வேகமும் நன்றாக இருக்கும். 

மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட் குறித்த தகவல் குறிப்புகள் அனைத்தும் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்.

இது மட்டும் இல்லாது ஆடியோ, ஹெட்செட்,  தகவல் பறிமாற்றத்திற்கு உதவும் Blue tooth, GPS போன்றவைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.

மேலதிக வசதிகளைப் பற்றியும் அறிந்துகொண்டு, உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட் போனை நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.


Share this