logo blog

கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்கான காரணங்கள் !

வாங்கிய புதியதில் super fast இருந்த கம்ப்யூட்டர், ஒரு சில மாதங்களில் ஸ்லோ ஆகிவிடும். இது எதனால் ஏற்படுகிறது? என்ன செய்தால் கம்ப்யூட்டர் வாங்கிய புதியதில் இருந்த ஸ்பீட் கொண்டு வரலாம் என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

கம்ப்யூட்டர் மெதுவாக இயங்க காரணங்கள்:

கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குவதற்கு முழுமுதற் காரணம் சரியான மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததுதான். வேறு சில காரணங்களாலும் கம்ப்யூட்டரானது மெதுவாக இயங்கும். அவைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
reason for slow computer
கம்ப்யூட்டர் ஸ்லோவாக இருக்க காரணங்கள்


கம்ப்யூட்டரை முறையாக பராமரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் பராமரிப்பு என்பது அன்றாடம் அதில் படியும் தூசிகளை நீக்குவதிலிருந்து, தேவையில்லாத சாப்டவேர்களை/ கோப்புகளை நீக்குவது வரை அனைத்துமே கம்ப்யூட்டர் பராமரிப்பு வகையில் சேரும்.

ஆன்டி வைரஸ்:  கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் இன்டர்நெட் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இன்டர்நெட் மூலம் வெகு விரைவில் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கம் தொடங்கிவிடும். இதனால் முதலில் கம்ப்யூட்டரில் நல்ல தரமான Anti - Virus மென்பொருள் நிறுவ (Install) வேண்டும்.

இலவச மென்பொருட்கள் வேண்டாம்: 

Don't Use FreeWare

இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக, ஏகப்பட்ட மென்பொருட்களை டவுன்லோட் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் ஒழிய, இதுபோன்ற இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்யாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் இலவசமாக யாரும் எதையும் கொடுக்க மாட்டார்கள். கூடவே தீங்கு தரும் புரோகிராம்களும் அதனுடன் இணைந்தே தரவிறங்கும். எனவே முடிந்தளவு இலவச மென்பொருட்களை தவிர்ப்பது நல்லது.

Hard Disk - ல் அதிக கோப்புகள்: 

ஹார்ட் டிஸ்க்கில் தேவையில்லாத மென்பொருட்கள், மற்றும் கோப்புகள் சேர்வதால் ஹார்ட் டிஸ்கின் காலியிடம் குறைந்துவிடும். அதிகமான கோப்புகள் இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதால் ஹார்ட் டிஸ்க் இயங்கும் வேகம் தானாகவே குறைந்துவிடும். குறிப்பாக Operating System பதிந்திருக்கும் C Drive- ல் கால் பகுதி காலியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். My document, Download Folder ம் C ல்தான் இருக்கும். எனவே இதிலிருக்கும் கோப்புகள் அனைத்தையும் வேறொரு டிரைவிற்கு மாற்றிவிட வேண்டும்.

டவுன்லோட் செய்யப்படும் போட்டோக்கள், வீடியோக்கள் இன்ன பிற டேட்டாக்கள் அனைத்துமே Download ஃபோல்டரில்தான் சேமிக்கப்படும். அதே போல நீங்கள் ஒரு கோப்பினை சேமிக்கும்பொழுது Default ஆக Document போல்டரில் சேமிக்கப்படும்.

எனவே இந்த இரண்டு போல்டர்களிலும் சேமித்து உள்ள கோப்புகளை அடிக்கடி சோதனை செய்துகொள்ள வேண்டும். அவற்றில் உள்ள கோப்புகளை வேறொரு டிரைவிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். 

கம்ப்யூட்டர் பயனர்கள் பலரும் இணையத்தில் உலாவும்போது ஏதாவது ஒரு மென்பொருளையோ அல்லது கோப்புகளையோ டவுன்லோட் செய்து விடுவர். ஆனால் மீண்டும் அவற்றை நீக்காமல் அப்படியே விட்டுவிடுவர். இதனால் அங்கு கோப்புகள் நிறைந்து அதிகமான இடத்தை எடுத்துக் கொண்டிருக்கும். 

இதுபோன்று C கோலனின் தேவையில்லாத கோப்புகள் சேர்ந்துவிட்டால் கம்ப்யூட்டர் மிக மெதுவாக செயல்படும். எனவே C கோலனின் கோப்புகளை சேமிப்பதை முடிந்தளவிற்கு தவிர்த்துவிட வேண்டும்.

Device களில் ஏற்படும் பிரச்னை

Device களில் ஏற்படும் பிரச்னைகளும் ஒரு காரணமாக அமையலாம். உங்களது கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்டுள்ள டிவைஸ்களில் ஏதேனும் பிரச்னை என்றாலும் உங்களுடைய கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும். இப்பிரச்னையை தீர்க்க..
  • My computer - ன் மீது ரைட் கிளிக் செய்து Manage மீது கிளிக் செய்து Device Manager தேர்ந்தெடுங்கள்.
  • இப்பொழுது தோன்றும் Device பகுதியில் மஞ்சள்நிற கேள்விக்குறிகளோடு ஏதேனும் டிவைஸ்கள் தோற்றமளித்தால் அவற்றின் மீது கிளிக் செய்து ரீமூவ் செய்திடுங்கள்.
  • சிவுப்பு நிற பெருக்கல் குறிபோன்று இருப்பின் அதன் மீது ரைட் கிளிக் செய்து Enable கொடுக்கவும். 
  • இந்த இரண்டு வழிமுறைகளையும் செய்துவிட்டு உங்கள் கணினியை Restart கொடுக்கவும். 
  • இப்பொழுது அனைத்தும் சரியாகி இருக்கும். 
  • அவ்வாறு ரீஸ்டார்ட் கொடுத்தும் டிவைசின் மீது சிறிய அம்புக்குறிப்போல தோற்றமளித்தால் அதில் பிரச்னை உள்ளது என்று பொருள். எனவே அதற்கான புதிய Driver -ஐ இன்டர்நெட் மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

கம்ப்யூட்டர் வெப்பமடைதல்: 

கம்ப்யூட்டர் சூடாவதற்கு காரணங்கள் நிறைய உண்டு. அதிக நேரம் பயன்படுத்துதல், கம்ப்யூட்டரில் உள்ள வெப்பம் குறைக்கும் காற்றாடிகள் செயலிழத்தல், தூசிகள், processor வெப்பமடைதல் போன்றவை.

அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருப்பின் சிறிது நேரம் ஷட்டவுன் செய்துவிட்டு பயன்படுத்தலாம். வெப்பம் குறைக்கும் காற்றாடிகளில் பிரச்னை எனில் உடன் அதை மாற்ற வேண்டும்.

தூசிகள் போன்றவற்றால் பிரச்னை எனில் கம்ப்யூட்டர் கேபினை திறந்துவிட்டு, காற்று ஊதி மூலம் தூசிகளைப் போக்கி சுத்த படுத்தலாம்.

CCleaner 

கம்ப்யூட்டரில் உள்ள தூசிகள் மற்றும் குப்பைகளை காற்றை ஊதி சுத்தம் செய்வதைப் போல, கம்ப்யூட்டரில் இருக்கும் குப்பையான தேவையற்ற கோப்புகளை நீக்க CCleaner போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். Registry Clean செய்வதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் விரைவாக, வேகமாக செயல்படும்.


Tags: computer, computer tips, fix computer slow down, why computer slow down, tips and tricks,  hardware, freeware, device, hared drive, mother board, cpu, processor.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.