logo blog

அட்டகாசமான வசதிகளுடன் Google Nexus 5 Smartphone

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் கூகிள் நெக்சஸ் 5 ஸ்மார்ட்போன், தற்பொழுது இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  கூகிள் பிளே ஸ்டோர் தளத்திலும் தகவல்களை வெளியிட்டு கூகிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 



கூகிள் நெக்சஸ் 5 ஸ்மார்போனில் உள்ள சிறப்பம்சங்கள்: 


இரண்டு நிறம் மற்றும் இரண்டு மெமரி ஸ்டோரேஜ் வசதிகளுடன் வெளியிடப்பட்டுள்ள கூகிள் நெக்சஸ் 5 ஸ்மார்ட் போனில் 4.95 அங்குல திரை அகலம் (full HD IPS display), 2.3 GHz Qualcomm Snapdragon 800 Processor, 2ஜிபி ரேம், சிறப்பான வீடியோ மற்றும் போட்டோக்களை எடுக்கப் பயன்படும் 8 மெகா பிக்சல் கேமரா, வீடியோ சாட்டிங் மற்றும் முகம் பார்த்துப் பேசப் பயன்படும் வீடியோ அழைப்பை மேற்கொள்ள 1.3 மெகா பிக்சல் முன்பக்க கேமரா, 17 மணி நேரம் தொடர்ந்து பேசுமளவிற்கு மின்சக்தியை வழங்கும் திறன், மற்றும் 300 மணி நேரம் மின்சக்தியை தேக்கி வைக்கும் திறன்  2300 mAh பேட்டரிஆகியன அமைந்துள்ளன. 

கூகிள் நெக்சஸ் 5 விலை மற்றும் கிடைக்குமிடம்: 


கருப்பு மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு வேறுப்பட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்கிறது. 16GB, 32GB என இரண்டு விதமாக மெமரி ஸ்டோரேஜ்களிலும் கிடைக்கிறது. 

1. 16 ஜிபி மெமரி கொண்ட கூகிள் ஸ்மார்ட்போனின் விலை  ரூபாய் 28,999. 

2. 32ஜிபி மெமரி அளவுகொண்ட கூகிள் நெக்சஸ் 5 ஸ்மார்ட் போனின் விலை  ரூபாய் 32,999. 

இவ்விரு போன்களும் ஆண்ட்ராய்டின் புதிய இயங்குதளமான Android 4.4 kit-kat இயங்குதளத்தில் இயங்குகின்றன. 

ஒருவாரத்திற்குள் (November 14) இந்திய ஆன்லைன் ஸ்டோர்களில் இப்போன் விற்பனைக்கு கிடைக்கும் என பிரபல Indian Retailer Store தெரிவித்துள்ளது. 

Google Nexus 5 important Specifications:


  • 4.95-inch Full HD IPS display with 1920x1080 pixels resolution
  • Android 4.4 KitKat OS
  • 2.3GHz Qualcomm Snapdragon 800 processor
  • 8MP rear facing with Optical Image Stabilization
  • 1.3MP front facing
  • 16GB and 32GB internal storage capacity
  • 2,300 mAH battery
  • Wi-Fi 802.11 a/b/g/n/ac, NFC (Android Beam), Bluetooth 4.0, Micro USB
  • Size: 69.17 x 137.84 x 8.59 mm   Weight: 130 grams
Tags: google, google new android phone, google nexus 5, nexus 5, lg, LG nexus 5, specifications, smartphone specs, mobile specifications.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.