logo blog

Dell பிசினஸ் லேப்டாப்புகள் - ஒரு சிறப்பு பார்வை

பிரபலமான மடிக்கணினி தயாரிப்பு நிறுவனம் டெல். இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய, நவீன ரக லேப்டாப்புகளை (Latitude line) பற்றிப் இப்பதிவில் பார்ப்போம். 

Dell நிறுவனம் Latitude வகை மடிக்கணினிகளை வெளியிட்டதன் மூலம் தனது லேடிட்யூட் படைப்புகளை விரிவாக்கம் செய்துள்ளது. 

Latitude 7000, Latitude 5000, Latitude 3000 ஆகிய டேப்டாப்களை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் Touch Screen வசதியுடன், டிஸ்பிளே கீரல் விழாமல் இருப்பதற்காக Corning Gorilla Glass நுட்பத்துடன் வெளிவந்துள்ளது. 

Dell-Business-Laptops-with--Intel-Core-processors-with-Turbo-Mode-for-fast-data-processing

லேடிட்யூட் 7000 அல்ட்ரா  லேப்டாப்

(Latitude 7000 Ultrabook Features)


Latitude 7000 Ultrabook லேப்டாப் கம்ப்யூட்டரானது 12 அங்குல திரையுடன், 20mm தடிமன், 1.3kg எடையுடன் வெளிவந்துள்ளது. மால்வேரிலிருந்து பாதுகாப்பு, encryption மற்றும் Advanced authentication ஆகிய சிறப்பு வசதிகளும் உள்ளன.

மற்ற சாதனங்களை இதனுடன் இணைக்கும் வகையில்  WiGig wireless docking மற்றும் Latitude docks  வசதிகளைப்பெற்றுள்ளன. கம்பி தொடர்பில்லாமல் வயர்லெஸ் நுட்பத்தின் அடிப்படையில் இவற்றைச் செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.


லேடிட்யூட் 14 மற்றும் 15 லேப்டாப்புகள்

(Latitude 14 And Latitude 15 5000 series Features)


Latitude 14 மற்றும் Latitude 15 5000 series லேப்டாப்கள் முறையே 4.1 அங்குலம் மற்றும் 15.6 அங்குல டிஸ்பிளேக்களைப் பெற்றுள்ளது. Intel Core i7 ultra-low voltage processors ல் இவை இயங்குகின்றன. இந்த லேப்டாப்கள் கூடுதல் வசதிகள் என்று பார்க்கும்போது, mobile broadband, Bluetooth மற்றும் wireless LAN options ஆகிய வசதிகளைக் குறிப்பிடலாம். இதன் அடிப்படையின் பயனாக  HD Webcam மற்றும் microphone துணையுடன் மொபைலிட்டி ஆக்டிவிடிஸ்களுக்குப் பயன்படுகிறது. 

மேற்கண்ட வசதிகளுடன்  E-docking , feature wireless keyboard மற்றும் mouse ஆகியனவற்றைப் பெற்றுள்ளன. 

லேடிட்யூட் 3000 லேப்டாப் 

(Latitude 3000 series Features)


Latitude 3000 series லேப்டாப்களானது டெல் நிறுவனத்தின் வணிக ரீதியான தொடக்க நிலை கம்ப்யூட்டர்கள் ஆகும். இவைகள்  14-inch மற்றும் 15.6-inch Anti-Glare LCD displays களுடன் 2GB video memory வரையும் உள்ள வணிக ரிதியாக தனித்தியங்கும் கிராபிக்ஸ் வசதிகளை வழங்குகிறது. 

மேற்கண்ட இன்டெல் மடிக் கணினிகள் வேகாமான பிராசசிங் செயல்பாடுகளைக் கொடுப்பதற்காக நான்காம் தலைமுறை இன்டெல் கோர் பிராசசர்களைக் (fourth-generation Intel Core processors with Turbo Mode for fast data processing.) கொண்டு இயங்குகின்றன. 

தொலைத்தொடர்பு வசதிகளுக்காக  microphone மற்றும்  HD Webcam ஆகிய சிறப்பு வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆக, தற்பொழுது டெல் நிறுவனத்தார் வெளியிட்டுள்ள Latitude series லேப்டாப்கள் அனைத்துமே நவீன வசதிகளுடன், நல்லதொரு தொடுதிரை வசதியுடன் வெளிவந்துள்ளன. 


நன்றி.

Tags: லேப்டாப், laptop, Dell, Dell laptop, new dell laptop, Dell Business laptop, Dell Latitude series laptops, Dell company laptop for low cost, low cost laptops, main branded laptops, Intel Core processors laptops, HD webcam laptops, HD webcam new intel laptops, Dell brand top level business laps.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.