இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை - Tamil Tech

Nov 3, 2013

இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை

இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களே இப்பொழுது இல்லை என்ற அளவிற்கு இணையத்தின் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் முதல் பள்ளி சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருமே வலம் வந்து கொண்டுள்ளனர்.
you-must-do-these-tips-for-computer-security-data-security
தமிழ் இன்டர்நெட் டிப்ஸ்

இப்படி உலகத்தின் பெரும்பான்மையானோர் இன்டர்நெட் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாது, Internet Banking, Mail services, என முக்கிய பண பரிவர்த்தனை மற்றும் அலுவலகம், கோடிக்கணக்கான வியாபார தொடர்பான மின்னஞ்சல்கள் பயன்பாடு தரும் வெப்சைட்டுகளையும் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு இணையதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு அவர்களுக்கென தனிப்பட்ட பயனர் பெயர், கடவுச் சொல் இருக்கும். அது அவர்களுக்கு மட்டுமே தெரியும் வண்ணம் இருக்கும் என நம்புகின்றனர்.

உண்மையில் அவ்வாறு உள்ளதா எனில் பெரும்பாலானவர்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை ஹேக்கர்கள் எனப்படும் இணைய திருடர்கள் திருடிவிடுகின்றனர் என்பதுதான் உண்மை.

இதற்கு காரணம் மிக எளிதாக யூகிக்கும் பாஸ்வேர்ட்களை வைத்துக்கொள்வதுதான். இதற்கென தனியாக ஹேக் செய்ய தேவையில்லை. ஒரு சிலர் அவர்களின் செல்போன் நம்பர்களையே பாஸ்வேர்ட்களாக வைத்துள்ளனர். மற்ற சில பொதுவான பெயர்களை வைத்துள்ளனர். இப்படி உலகத்தில் 90 சதவிகித்தினர் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் பாதுகாப்பு அற்றதாக, மிக எளிதாக யூகிக்க கூடியதாகவே இருக்கிறது.

ஒரு சிலரின் பேங்க் அக்கவுண்ட் பற்றிய தகவல்கள் திருடப்பட்டு, அவர்களின் பணம் தவறாக பயன்படுத்துவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், கட்டாயம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் இதை செய்தாக வேண்டும்.

இதற்கு என்ன செய்யலாம்? ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைப்பதுதான் ஒரே வழி.

1. ஸ்ட்ராங் பாஸ்வேர்ட்

பாஸ்வேர்ட் பாதுகாப்பானதாக அமைப்பதற்கு நிறைய Password Mager Software  கள் உள்ளது.

அதைப் பயன்படுத்தலாம். இந்த பாஸ்வேர்ட் மேனேஜர் சாப்ட்வேர்கள் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு இணையதளத்திற்கும் தனித்தனியான பாஸ்வேர்ட்கள் அமைத்துக் கொடுக்கும். யாராலும் எளிதில் யூகிக்க முடியாத, எளிதில் உடைக்க முடியாத பாஸ்வேர்ட்டாக அது இருக்கும். 

ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைப்பு எப்படி என்பதை இந்த பதிவு விளக்குகிறது.

பாதுகாப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி?

பேங்க் சம்பந்தமான பாஸ்வேர்ட் மட்டும் இல்லை... முக்கியமான அலுலவக கோப்புகள் சேமித்து வைத்திருக்கும் Free File Sharing Websites களிலும் அதுபோன்ற ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் அமைப்பது முக்கியம். 

2. Two Step Verification: 

தற்பொழுது முக்கியமான சோசியல் வெப்சைட்கள் அனைத்தும் 2 Step verification முறையை கொண்டு வந்துள்ளது. முக்கியமாக கூகிள் தளத்தின் Two Step Verification - ஐ குறிப்பிடலாம். இந்த முறையில் உங்களுடைய கணக்கில் செயல்படுத்தினால் உங்களைத் தவிர வேறு யாருமே உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட்டை ஓப்பன் செய்யவே முடியாது.

2 Step verification என்பது முதலில் நீங்கள் ஜிமெயில் யூசர்நேம் , பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்ய முற்படும்போது, உங்களுடைய மொபைல் போனுக்கு ஒரு அதில் அனுப்படும் எண்ணை, ஜிமெயிலில் அதற்கான கட்டத்தில் சரியாக கொடுத்தால் மட்டுமே லாகின் திறக்கும்.

இதுபோல தற்பொழுது சில முக்கியமான வெப்சைட்களில் 2 ஸ்டெப் வெரிபிகேசன் வைத்துள்ளனர்.

இது ஒரு மிகச்சிறந்த பாஸ்வேர்ட் பாதுகாப்பு முறை. எனினும் இதிலும் சில சிக்கல்கள் உண்டு. ஒவ்வொரு முறையும் லாகின் செய்யும்பொழுதும் உங்களுடைய செல்போனை கையில் வைத்திருக்க வேண்டும். செல்போன் இல்லாத போது லாகின் செய்ய முடியாது. 

3. Data Encryption 


இந்த முறையில் நீங்கள் ஒரு தகவலை உங்களோட நண்பர்களுக்கு அனுப்பும்போது அதை என்க்ரிப்ட் செய்து அனுப்புவது. அதாவது அனுப்பக்கூடிய தகவல்களை நேரடி தகவல்களாக அனுப்பாமல் குறியாக்கம் செய்து அனுப்பும் முறையாகும். அக்கோப்பை மற்றவர்கள் திறந்தால் அதில் வெறும் குறிமுறைகள் மட்டுமே தெரியும். அதைப் படித்தறிய முடியாது. 

மீண்டும் அதை படிக்க வேண்டும் என்றால், எந்த முறையில் குறியாக்கம் செய்திருக்கிறமோ அதற்குரிய சரியான கீவேர்டை கொடுத்து அக்கோப்பினைத் திறந்தால் மட்டுமே, கோப்பில் உள்ள முழுமையான வாசகங்களைப் படிக்க முடியும். 

இந்த முறையை மிக மிக முக்கியமான கோப்புகளை அனுப்பும்போது பயன்படுத்தலாம். 

Browser Selection பிரௌசர் தேர்ந்தெடுப்பு: 

இணையத்தைப் பயன்படுத்த பல்வேறு பிரௌசர்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அனைத்து பிரௌசர்களும் இணைய உலவலில் பாதுகாப்புகளை கொடுக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது உள்ள பிரௌசர்களிலேயே கூகிள் குரோம் மட்டுமே சரியான, முறையான பாதுகாப்பை அளிக்கிறது. 

அடுத்து பயர்பாக்ஸ் பிரௌசர்.... முன்னணியில் இருப்பது கூகிள் பிரௌசர் மட்டுமே... இது safe browsing tools, sandbox, speedy patching and automatic/silent updating இப்படிப்பட்ட பாதுகாப்புகளை சிறப்பாக கொடுக்கிறது. இதனால் உங்களுக்கு எந்த ஒரு தொந்தரவு இல்லாமலேயே பிரௌசர் தானியங்கியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்டேட் செய்துகொள்கிறது. 

குரோம் பிரோசரில் இருக்கும் ஒரு பயனுள்ள  எக்ஸ்டன்டச் KB SSL Enforcer. இது என்ன செய்யும் என்றால், நீங்கள் கூகிள் குரோம் பிரௌசர் மூலம் இணையத்தில் தகவல்களை பரிமாறும்பொழுது , டேட்டாக்களை தானாகவே என்க்ரிப்சன் செய்துவிடுகிறது. இதனால் உங்களுடைய தகவல்களை இடையில் யாரும் தடுத்து நிறுத்தி அவற்றைப் பார்த்திட முடியாது. 

Data Backup ரொம்ப முக்கியம்...


எப்படிப்பட்ட முக்கிய கோப்பாக இருந்தாலும், என்னதான் பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தியிருந்தாலும் Data Backup மிக முக்கியம். முக்கியமான கோப்புகளை, படங்களை, பேக்கப் எடுத்து தனியாக வேறு கம்ப்யூட்டர், ஃபைல் ஷேரிங் சைட், ஹார்ட் ட்ரவை என சேமித்து வைப்பது மிகச்சிறந்த பாதுகாப்பு வழிமுறைகளில் ஒன்று.

தகவல்களை எப்படி பேக்கப் எடுப்பது என்பது பற்றி கீழுள்ள பதிவு விளக்குகிறது.  டேட்டாக்களை பேக்கப் எடுக்க Online Backup Service ஐயும் பயன்படுத்தலாம். ஆன்லைன் மூலம் உங்களுடைய தகவல்களை பேக்கப் எடுத்து சேமிக்க iDrive, Mozy மாதிரி ஒரு சில முக்கியமான இணைய தளங்கள் உண்டு.

Java Program தேவையா?


ஜாவா புரோகிராம் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இருக்கும். இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு இது உபயோகமா இருக்கும். ஜாவாவைப் பற்றி விளக்கமாக தெரிந்துகொள்ள கீழுள்ள பதிவை வாசிக்கவும். 


ஜாவா வில் இருக்கும் ஒரு பெரிய ஆபத்து என்னவென்றால் இது இயங்கினால், பிரௌசர் மூலம் வைரஸ் மாதிரியான புரோகிராம்கள், ஹேக்கர்களுக்கு ஈசியான வழியை அமைத்து கொடுத்துவிடும். அதுதான் மிகப் பெரிய பிரச்னை.

இதுக்கு தீர்வு... ஜாவா புரோகிராமை அப்டேட் செய்துகொண்டு இருக்க வேண்டும். ஜாவா தேவையில்லாத பட்சத்தில் அதை அப்படியே அன் இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.  

இதோடு மட்டுமில்லாமல், டெம்ப் பைல் டெலீட் பன்றது.. குக்கீஸ் டெலீட் செய்வது, ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் பயன்படுத்துவது என  நிறைய விடயங்கள் உண்டு.

இதைப் பெரும்பாலானவர்கள் செய்துகொண்டுள்ளனர். Temp files போன்ற தேவையற்ற கோப்புகளை நீக்கி கம்ப்யூட்டர் வேகமாக செயல்பட CCleaner போன்ற புரோகிராம்களை பயன்படுத்தலாம். 

External Drive: 


கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் ஹார்ட் டிஸ்கில்தான் (Hard Disk Drive) உங்களுடைய கோப்புகள் அனைத்தும் சேமித்து வைக்கப் பட்டிருக்கும். ஹார்ட் டிஸ்கில் ஏதாவது பிரச்னை என்றால், அதிலுள்ள பைல்களை பயன்படுத்துவது சிரமம்.  அதனால் உடனுக்குடன் அன்றாடம் வேலைகளை முடித்த பிறகு, அந்த கோப்புகளை ஒரு External Disk மூலம் சேமிக்க வைக்கலாம். 

எக்ஸ்டர்னல் டிஸ்க் டிரைவ் ரூபாய் 3000 த்திலிருந்து கிடைக்கும். கோப்புகளின் முக்கியத்துவக்கு தகுந்தாற் போல இதுபோல் எக்ஸ்டர்னல் டிஸ்க் வாங்கி பயன்படுத்துவது நல்லது. இது இன்டர் நெட் இருந்தாலும், இல்லையென்றால் கோப்புகளை பாதுகாக்க ஒரு சிறந்த பாதுகாப்பு வழிமுறை. 


Tags: system security, System protection, system backup, data backup, free backup store, backup file system, online backup , online data backup, free online data backup, data backup software, browser, google browser, good data encryption browser, data protection browser, internet security tips, internet tips and tricks, internet protection, internet security tricks, 

No comments:

Post a Comment

Write Your Comments Here.