logo blog

டிரான்ஸ்பார்மர் வெடிக்காமல் இருக்க உதவும் புதிய தொழில்நுட்பம்

மின்மாற்றி எனப்படும் டிரான்பர்மர்கள் சில நேரங்களில் பெருத்த சத்தத்துடன் வெடிப்பதை பார்த்திருப்போம். அவ்வாறு வெடிப்பதற்கு முக்கிய காரணம், திடீரென அதிக மின்னழுத்தம் ஏற்படுவதால், அதில் உள்ள கனிம எண்ணெய் அதிக சூடாகி தீப்பற்றிக்கொள்ளும். இதனால் அழுத்தம் அதிகமாக டிரான்பார்மர் வெடித்து சிதறுகிறது.

சில நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள டிரான்பார்மர்கள் வெடிப்பதால். பெரிய தீவிபத்தாக மாறி, அதிக பொருட்சேதம் ஏற்பட்டுவிடும். உலகம் எங்கிலும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்பொழுது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதுபோன்று டிரான்ஸ்பார்மர்கள் வெப்ப மிகுதி, அழுத்ததால் வெடித்து சிதறுவதைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



ஃபாஸ்ட் டி-பிரசரைசேஷன் சிஸ்டம்


அமெரிக்காவின் சென்ட்ரி நிறுவனத்தின் சார்பில் டிரான்ஸ்பார்மர்களை தீவிபத்தில் இருந்து தடுக்கும் ஃபாஸ்ட் டி-பிரசரைசேஷன் சிஸ்டம் (fast depreciation system for transformer) என்ற புதிய தொழில்நுட்பம் தான் அது. இந்தியாவில் முதல்முறையாக இத்தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட்டுளளது. 

அந்நிறுவனத்தின் தலைவர் பில் கென்ட்ரிக் இத்தொழில்நுட்பத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். 

"உலகமெங்கும் டிரான்ஸ்பார்மர்கள் தீவிபத்தில் சிக்கி பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுப்பதை கண்டுள்ளோம். இந்த பிரச்னைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க ஃபாஸ்ட் டி-பிரசரைசேஷன் சிஸ்டம் என்ற புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "

  • டிரான்ஸ்ஃபார்மர்கள் சூடேறுவதை இத்தொழில்நுட்பம் முற்றிலும் தடுத்து விடுவதால் டிரான்பார்மர் வெடிப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. 
  • இப்புதிய தொழில்நுட்பத்தை டிரான்ஸ்பார்மர்களில் பயன்படுத்தும்போது தீ விபத்து நிகழ்வது 100 சதம் தடுக்கப்படுகிறது. 
  • மிகப் பெரிய தீ விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க உதவுகிறது. 

tech news, transformer, fast-depreciation-system, power accident, power transformer protection, transformer protection in India, fast-depreciation-system, avoid transformer exploding, new technology avoid from transformer exploding, fast-depreciation-system in Bangalore, fast-depreciation-system protect power transformer. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.