ஆன்லைன் போட்டோ டிசைன் | Photo Punia - Tamil Tech

Nov 20, 2013

ஆன்லைன் போட்டோ டிசைன் | Photo Punia

போட்டோக்களை டிசைன் செய்ய போட்டோஷாப் மென்பொருள் தான் வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுது போட்டோஷாப் மென்பொருள் இல்லாமலேயே ஆன்லைனிலேயே அருமையாக போட்டோ டிசைன் செய்ய முடியும்.

போட்டோ டிசைன் செய்ய ஆன்லைனில் நிறைய  போட்டோ எடிட்டிங் (Online Photo Editing / Design Websites ) இணையதளங்கள் உள்ளன. அது போன்றதொரு போட்டோ டிசைன் செய்யும் இணையதளம்தான் போட்டோ புனியா.

இந்த இணையதளத்தில் உங்களுடைய போட்டோக்களை தரவேற்றி (Upload) , அதில் உள்ள போட்டோ டிசைன்களை செலக்ட் செய்தால், அதிலிருக்கும் டிசைன் மாதிரியே உங்களுடைய போட்டோவும் மாறிவிடும்.

ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் பிண்ணனியுடன் உங்களுடைய போட்டோவை அழகு படுத்திக்கொள்ளலாம். 
Online Photo Design
போட்டோ டிசைன்

போட்டோ புனியாவில் Photo Design செய்யும் வழிமுறை:  

  • முதலில் இத்தளத்தில் உள்ள டிசைன்களில் ஏதேனும் ஒரு டிசைனை தேர்வு செய்யுங்கள்... 
  • பிறகு உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்யுங்கள்... பிறகு go என்பதை சொடுக்குங்கள்.. 
  • பிராசசிங் நடக்கும். 
  • இறுதியாக போட்டோ டிசைன் செய்யப்பட்டு, Save ஆப்சனுடன் கிடைக்கும். 
  • டிசைன் செய்யப்பட்டப் புகைப்பட்டத்தை சமூக இணைய தளங்களிலும் பகிர Share வசதியும் உண்டு. 
Photo Punia இணையதளத்தின் சுட்டி: போட்டோ டினை செய்ய - Photo Punia

Tags: Free Online Photo Editing, Photo design online, Photo Punia, Photo design, ஆன்லைன் போட்டோ டிசைன், போட்டோ எடிட்டிங்.

No comments:

Post a Comment

Write Your Comments Here.