logo blog

உலக திரைப்படங்கள் காண ஒரு சோசியல் வெப்சைட்

உலகத் திரைப்படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காண உருவாக்கப்பட்டதுதான்  வேர்ல்டுப்ளோட் (Worldfloat) வெப்சைட். இது பேஸ்புக், கூகிள் ப்ளஸ் போன்ற தொரு சமூக இணையதளம். இதில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை காண முடியும். 



social-network-for-watching-all-world-movies
உலக திரைப்படங்கள் காண ஒரு வெப்சைட்


18000 க்கும் மேற்பட்ட ஆங்கிலப் திரைபடங்கள், 7000த்திற்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்கள் என வேர்ல்டுப்ளோட் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

உலகளவில் மற்ற தேசிய மொழிகளிலும், குறிப்பாக எதிர்வரும் காலங்களில் பிரஞ்சு, இத்தாலி போன்ற வெளிநாட்டு  மொழிகளில் அமைந்த படங்களையும், இந்தியர்களுக்கான மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி போன்ற மொழிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களை இலவசமாக காண முடியும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

1890 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் படங்கள் முதல், 2013 தற்காலத்தில் உருவாக்கப்பட்ட வண்ணத் திரைப்படங்கள் வரை அனைத்து திரைப்படங்களையும் வேர்ல்ட் ப்ளோட் தளத்தின் மூலம் இலவசமாக அனைவருமே பார்க்க முடியும் . 

இந்த இலவசமாக சேவையை இன்டர்நெட் கனெக்சன் உள்ள லேப்டாப்ஐபேட், ஆண்ட்ராய்ட் போன்கள், டேப்ளட் போன்ற எந்த ஒரு சாதனத்தின் வழியாகவும் காண முடியும்.

தற்பொழுது பாமர மக்களும் பார்க்கும் வண்ணம் வீட்டில் இருக்கும் வண்ணத் தொலைக்காட்சிகளிலும் இந்த இணையதளத்தில் உள்ள படங்களை பார்க்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

வேர்ல்ட்ஃப்ளோட் இணையதளத்தின் முகவரி:http://worldfloat.com/

Tags: Watch movie online, new social network for watching movies, new online movie watching website, social website world float, world float social website, 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.