logo blog

கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க வழிமுறைகள் !

கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான கோப்புகளை பாதுகாத்திட சில வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சிறப்பான வழிமுறையாக கருதபடுவது ஃபைல்களை "பேக்கப்" எடுத்து வேறொரு இடத்தில் சேமிப்பதுதான்.

வைரஸ் மற்றும் வேறு சில காரணங்களால் கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகள் சில நேரங்களில் அழிந்து போக வாய்ப்புண்டு. கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான கோப்புகளை பாதுகாக்க வேண்டுமெனில் அந்த கோப்புகளை "பேக்கப்" எடுத்து வேறு சேமிப்பகங்களில் சேமித்து வைப்பதுதான் சிறந்த பாதுகாப்பு வழிமுறை.


store important files in cloud storage



கோப்புகளை 'பேக்கப்' எடுப்பது  எப்படி 

கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை பேக்கப் எடுப்பது என்பது அதில் உள்ள கோப்புகளை காப்பி செய்து, வேறொரு இடத்தில் சேமிப்பது ஆகும். கீழ்கண்ட முறையில் கோப்புகளை சேமிக்கலாம்.

1. அதிக storage வசதி கொண்ட பென்டிரைவில் கோப்புகளை சேமித்து வைக்கலாம்.
2. அதிக கொள்ளளவு கொண்டு CD, DVD டேட்டா டிஸ்க்குகளில் சேமிக்கலாம்
3. வேறொரு புதிய ஹார்ட் டிஸ்க் - External Hard Disk வாங்கி, அதில் பைல்களை  காப்பி செய்து ஸ்டோர் செய்து வைக்கலாம்.
4. ஆன்லைனில் கிடைக்கும் Free File Storage Websites இணையதளங்களில் Cloud Storage சேமித்து வைக்கலாம்.

சில கிளவுட் ஸ்டோரேஜ் இணையதளங்கள்: 

1. கூகிள் டிரைவ்
Cloud Storage மூலம் சேமிக்கும் பைல்களை உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கம்ப்யூட்டர், மொபைல் மூலம் மீண்டும் எடுத்து பயன்படுத்தலாம். 

கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆனாலும் கூட இந்த குளூட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்ட கோப்புகளை திறந்து பயன்படுத்தி கொள்ளலாம். தேவையெனில் அக்கோப்புகளை கம்ப்யூட்டரிலும் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட முறையில் கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான கோப்புகளை "பேக்கப்" எடுத்து சேமித்து பாதுகாக்கலாம்.

Tags: cloud storage, free file storage sites, free software, google drive, microsoft skydrive, protect computer files, external hard disk, way to safety files in computer, Anti virus software, Cloud Storage Websites, Internet Storage Websites.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் ஷேர் செய்துகொள்ளுங்கள். 

Share this

1 comment

பயனுள்ள தகவல் களஞ்சியம் நண்பரே...

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.