LG Curved Display ஸ்மார்ட்போன்..! - Tamil Tech

Oct 31, 2013

LG Curved Display ஸ்மார்ட்போன்..!

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமான நிறுவனம் LG. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். 

அந்த வகையில் LG ஸ்மார்ட்போன்களும் அடங்கும். தற்போது வளைந்த திரையுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு வளைந்த திரையுடன் கூடிய போனை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

LG G Flex எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 


lg-launched-g-flex-with-curved-oled-display-smartphone


நெகிழும் தன்மையுடன் கூடிய 6 அங்குல OLED Screen ஐப் பெற்றுள்ளது. , 2.26GHz Quad-core SnapDragon 800 Processor இப்போனை இயக்குகின்றது. துல்லியமான வீடியோ மற்றும் படங்கள் எடுக்க 13 MP Camera, 2GB RAM, திரையை இரண்டாகப் பிரித்துப் "Multitasking" வசதியை ஏற்படுத்திக்கொள்ள உதவும் Dual Windows வசதி என அற்புதமான வசதிகளைப் பெற்றுள்ளது. 

திரையை அன்லாக் செய்ய வித்தியாசமான Swing lock Screen வசதி, போனின் பின்பகத்தில் உருவாகும் சின்ன சின்ன கீரல்களைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் தொழில்நுட்பமா Self Healing என்ற புதிய வசதியும் இதில் உள்ளது. 

இதுதவிர இணைய இணைப்பு, தகவல்தொடர்புக்குப் பயன்படும் Connetivity வசதிகளும் உண்டு. இச்சிறப்பு மிக்க ஸ்மார்ட்போனின் விலை ஏதும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், Samsung Curved Smartphone-க்கு நிகரான விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு வெளியிடப்படும்பொழுது சரியான விலை மற்றும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். 

Features of LG G Flex Smartphone:


  • Curved OLED display
  • Android 4.2.2 Jelly Bean 
  • 2.26GHz quad-core CPU (Qualcomm Snapdragon 800 SoC)
  • 2GB RAM
  • 32GB of built-in memory
  • 13MP camera
  • 3,500mAh battery
  • 160.5 x 81.6 x 7.9/8.7mm 

Tags: tech news, LG, LG android smartphone, LG G Flex, LG G flex smartphone, specifications, mobile specifications, tech news, android, technology, curved android phone, LG curved smartphone, LG Flex , samsung smartphone, samsung curved smartphone.

No comments:

Post a Comment

Write Your Comments Here.