logo blog

ChromeBook Computer - சிறப்பம்சங்கள்..!

கூகிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் புதிய கம்ப்யூட்டர் குரோம்புக். Chromebook Laptop வழக்கமான விண்டோஸ் கம்ப்யூட்டரிலிருந்து மாறுபட்டது.

விண்டோஸில் இயங்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இதில் இயங்குவதில்லை. முற்றிலும் மாறுபட்ட பயன்பாட்டைக் கொண்ட இந்த குரோம்புக் கம்ப்யூட்டரானது, விரைவான செயல்திறன் மிக்கது.

கணினி பயனர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும்  basic program கொண்டுள்ளது. இணையத்தை அணுகுவது, இணைய கணக்குகளை அணுகுவது, இணைய வழி செயல்முறைகள் (internet access) என அனைத்தையும் வெகுவிரைவில் செய்ய முடியும். 

chromebooks-computer-specifications-availability-price
Chromebook computer


குரோம் கம்ப்யூட்டரின் சிறப்புகள்: 


  • வழக்கமான விண்டோஸ் இயங்குதளத்திற்கு மாற்றாக புதிய Chrome OS இடம் பெற்றுள்ளது. 
  • வினாடி நேரத்தில் கம்ப்யூட்டரை தொடங்கி, வேலைகளை மேற்கொள்ளலாம்.
  • வழக்கமான கம்ப்யூட்டர் போல் அல்லாமல், குரோம் புக் கம்ப்யூட்டர் தானாகவே Update மேற்கொள்வதால், கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகிவிட்டது என்ற பிரச்னைக்கு இடமே இல்லை. 
  • மிக விரைவான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. (Fast Functioning)
  • குரோம் இன்ஸ்டன்ட் மற்றும் குரோம் ஆம்னி பாக்ஸ் போன்ற வசதிகளின் மூலம் விரைவாக இணையத்தை அணுக முடியும். 
  • உங்களுக்குப் பிடித்தமான அப்ளிகேஷன்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் INbuilt செய்யப்பட்டுள்ளது. 

குரோம் ஓ.எஸ்.  கம்ப்யூட்டரில் உள்ள முக்கிய வசதிகள்: 


1. Chat 
2. Work
3. Music
4. Movies
5. Games
6. Office Files
7. Offline

ஸ்நாப் அல்லது புதிய கணக்கில் சைன் இன் செய்வதன் மூலம் ஒரு நொடியில் கணக்குகளுக்கு மாறும் வசதி. 

Guest Mode: 


குரோம்புக் கம்ப்யூட்டரை உங்களது நண்பர்களுக்கு கொடுக்கும்பொழுது, அவர்கள் உங்களுடைய விஷயங்களை அணுகாமல் இருப்பதற்கான ஹெஸ்ட் மோட் Guest Mode வசதி உள்ளது. 

எந்த கம்ப்யூட்டரிலும் உங்கள் கணக்கு: 


எந்த ஒரு குரோம்புக் கம்ப்யூட்டரிலும் நீங்கள் Sign in செய்யும்பொழுதும் உங்களுடைய சொந்த அப்ளிகேஷன் மற்றும் படங்கள் உங்களுக்குகாக அங்கே காத்திருக்கும். அதை நீங்கள் அணுக முடியும். 

மற்ற சாதனங்களில் குரோம் ஓ.எஸ். 


உங்களுடைய மற்ற Tablet Pc, Smartphone ஆகியவற்றிலும் இயல்பாக இயங்குகிறது. 

வைரஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. எரிச்சலூட்டக்கூடிய அப்டேட்கள் எதுவுமில்லை No unwanted updates. குரோம்புக் கம்ப்யூட்டர் விரைவாக செயல்படக்கூடியது.. குரோம் ஓ.எஸ்.சில் இயங்க கூடியது. பாதுகாப்பானதும் கூட. 


குரோம்புக் கம்ப்யூட்டர்கள்: 


இந்தியாவில் இரண்டு வகையா குரோம்புக் கம்ப்யூட்டர் கிடைக்கின்றன. 

1. Acer C720
2. HP Chromebook

1. Acer C720:


இதில் குரோம் ஓ.எஸ் இயங்குகிறது. இக்கம்ப்யூட்டரில் C720 Hasswell Architecture அடிப்படையிலமைந்த செலரான் 2955U Processor மூலம் இயக்கப்படுகிறது. இக் கம்ப்யூட்டரின் திரை அளவு 11.6 அங்குலம். எடை 1.25 Kg. 2ஜிபி ரேம், 16GB SSD சேமிப்பகம், 8.5 மணி நேரம் மின்சக்தியை கொடுக்கவல்ல பேட்டரியும் அமைந்துள்ளது. 

இதன் விலை ரூபாய்: 22,999. 

2. Chromebook 14 


இந்த கம்ப்யூட்டரும் செலரான் 2955U செயலி மூலம் இயக்கப்படுகிறது. சி720 ல் உள்ள சிறப்பம்சங்கள் இதிலும் உள்ளது. ஒரே ஒரு வித்தியாசம் பேட்டரி மட்டுமே. c720 கணினியை விட இதில் ஒரு மணிநேரம் அதிகம் மின்சக்தியைக் கொடுக்க வல்லது பேட்டரி அமைந்துள்ளது. பேட்டரியின் மின்சக்தியை தேக்கி வைத்து வழங்கும்  நேரம் 9.5 மணி ஆகும். 

இதன் விலை ரூபாய்: 26,990

குரோம்புக் கம்ப்யூட்டரும், விண்டோஸ் கம்ப்யூட்டரும்: (Windows computer and chrome-books computer)

வழக்கமாக நாம் பயன்படுத்தும் விண்டோஸ் கம்ப்யூட்டரிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட பயன்பாட்டைப் பெற்றிருக்கிறது கூகிள் குரோம்புக் கம்ப்யூட்டர். இதில் இணையத்தைப் பயன்படுத்துவது எளிது.

வினாடிக்கும் குறைவான நேரத்தில் இணையத்தை அணுக முடியும். மற்ற பயன்பாடுகளும் மிக எளிதாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. குறிப்பாக மிக விரைவாக அனைத்து பயன்பாடுகளும் தொழிற்படுகிறது. 

குரோம் ஓ.எஸ். அடிப்படையிலான குரோம்புக் கம்ப்யூட்டரை பயன்படுத்தியவர்கள் மீண்டும் விண்டோஸ் அடிப்படையிலான கம்ப்யூட்டருக்கு திரும்புவது கடினம். காரணம் அவ்வளவு வேகம்.. விரைவான செயல்பாடு.. 

இந்தியாவில் விரைவில் குரோம்புக் கம்ப்யூட்டர் கிடைக்கும் என கூகிள் அறிவித்துள்ளது. இன்னும் இரண்டே நாட்களில் குரோம்புக் கம்ப்யூட்டர்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்தியாவில் அனைத்து முன்னணி ஆன்லைன் விற்பனையாளர்களிடமும், முன்னணி கம்ப்யூட்டர் விற்பனை கடைகளிலும் (Computer retailers) கிடைக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நன்றி.


Tags: குரோம் கம்ப்யூட்டர், chromebooks, chromebooks computer, chromebooks in india, specifications of chromebook, chromebook 14, Acer C720 chromebook computer, Features of Chromebook computer

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.