logo blog

இந்த தீபாவளிக்கு எப்படியாவது....

"கடனை உடனை வாங்கியாவது காரியத்தை செய்" என்று கிராம்புறங்களில் சொல்வழக்கு உண்டு. இது எதற்கென்றால் வாழ்க்கைத் தேவையான அதி முக்கியமான செயல்களை  செய்ய ஊக்குவிப்பதற்காககத்தான். கடன் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக அல்ல.. 

உதாரணமாக திருமணம் செய்தல், புது வீடு கட்டுதல் போன்றவை. ஏனென்றால் ஒரு மனிதன் முழுமை அடைவது என்பது இல்லற வாழ்வில்தான். அதைப்போலவே இருக்கும் இடத்தையும் சொந்தமாக அமைத்துக்கொண்டால் அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைபெறும். 

ஆனால் தற்காலத்தில் மேற்சொன்ன "கடனை வாங்கியாவது..." என்ற சொல்வழக்கானது அனைத்து விழாக்களுக்கும் பொருந்திவிடுகிறது. 


Diwali-festival-loans-announces-from-Indian-banks-for-home-appliances

தீபாவளியா..?!! உடனே கடன் வாங்கியாவது வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய ஆடைகள் எடுத்து விட வேண்டும்.. இனிப்பு வகைகள் பலகாரங்கள் செய்ய வேண்டும்.. செய்ய வேண்டும் என்பதை விட வாங்க வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும். (இப்பல்லாம் யாருங்க வீட்ல மெனக்கெட்டு பலகாரங்கள் செய்றாங்க..) 

பெரும்பாலானவர்கள் இப்பொழுது அதையும் செய்வதில்லை.. இனிப்பகங்களில் வாங்கி விடுகிறார்கள். இதுவாவது சாதாரணமான ஒன்று.. ஏனென்றால் வீட்டில் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு கொடுக்கலாம். ஆனால் தீபாவளிக்கென்றே புதிய பொருட்கள் வாங்குவது இருக்கிறதே.. 

 பெரும்பாலான குடும்பத் தலைவிகள் தீபாவளிக்கென்றே பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். அப்படி வாங்கினால்தான் அந்த வருட தீபாவளியே கொண்டாட்டம் தரும்.. இல்லையென்றால் வெடி கடையில் வாங்கி வெடிக்க வேண்டியதில்லை... வீட்டம்மாவிடமிருந்தே வித விதமான வெடிகள் வெடிக்க ஆரம்பித்துவிடும்...

டிவிகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, எப்படியாவது இந்த பிரிட்ஜை வாங்கிவிட வேண்டும்.. எப்படியாவது புதிய டி.வி.யை வாங்கிவிட வேண்டும்.. லோன் போட்டாவது புதிய கம்ப்யூட்டரை வாங்கிவிட வேண்டும்.. எப்படியாவது புது மாடல் போனை வாங்கிவிட வேண்டும்.. 

என்று அவரவர்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, நிலைகளுக்கு ஏற்ப முடிவு செய்கிறார்கள்.. விளைவு... ????

அந்த பொருள் எவ்வளவு விலை என்றாலும் பரவாயில்லை.. தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாகவே வீடு வந்து சேர்ந்துவிடும்.. அது என்ன விலை.. எவ்வளவு பெறும் என்பதெல்லாம் தீபாவளிக்கு மறுநாளிலிருந்துதான் உறைக்க ஆரம்பிக்கும்... 

இது பொதுவான மனித இயல்பு. கொண்ட்டாட்ட தினங்கள் வரும் வரைக்கும் ஏக தடபுடலாக செல்லும்... மகிழ்ச்சி... கரைபுரண்டோடும்...

தீபாவளி முடிந்ததும் நடக்கும் நிகழ்வுகள் வேறு மாதிரி இருக்கும். சரி.. முக்கியமாக சொல்ல வேண்டிய செய்தியையும் பகிர்ந்திடலாம்.. 

தீபாவளிக்கு கட்டாயம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த செய்தி பயன்படும். 

தீபாளவளிக்கென்று வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு தனியார் வங்கி முதல் அரசு வங்கிகள் வரை கடனுதவி செய்கின்றன. அதுவும் தற்போது போட்டி போட்டுக்கொண்டு வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க கடன்களை வழங்குகிறது வங்கிகள். இதுகுறித்த இன்றைய செய்தி ஒன்று. 

தீபாவளியை முன்னிட்டு கார்கள் , மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், எல்சிடி, டிவி, ஏ.சி. மெஷின்கள் (Cars, Motor Bikes, Scooters, Washing Machine, Refrigerator, LCD, TV, A.C. Machine) உள்ளிட்ட நுகர்பொருட்கள் வாங்க குறைந்த வட்டி கடன் திட்டத்தை ஸ்டேட் பாங்க் அறிவித்துள்ளது.

சிறப்பு வட்டி குறைப்பு சலுகைகளை பிஎன்பி, ஓபிசி, ஐடிபிஐ (PNC, OBC, IDBI Banks ) போன்ற வங்கிகள் சமீபத்தில் அறிவித்தன. அவற்றைத் தொடர்ந்து தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் (State Bank of India)அறிவித்துள்ளது.

குறைந்த வட்டியில் பொதுமக்களுக்கு கடன்கள் கொடுக்க கூடுதல் நிதியை பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்க மத்திய அரசு அண்மையில் முடிவு செய்தது. 

இதன்படி, வங்கிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பண்டிகை கால சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் திட்டங்களை வங்கிகள் ஒவ்வொன்றாக அறிவித்து வருகின்றன.

கார் கடன் வட்டியில் 0.20% குறைத்து 10.55% ஆக்கியுள்ளது. இதற்கு முன்பு வட்டி விகிதம் 10.75 ஆக இருந்தது. 

கடன் தொகையில் 0.51 % ஆக உள்ள நடைமுறை கட்டணத்தில் குறைந்தபட்சமான ரூ.1,020ல் இருந்து ஒரே அளவாக ரூ.500 என்று குறைத்துள்ளது.

இந்த செய்தி இந்த தீபாவளிக்கு எப்படியாவது... இந்த பொருளை வாங்கிடணும் என்று நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். 

நன்றி.. !

- தங்கம்பழனி

Tags: diwali festival, diwali festival loans, bank loan for diwali, home-appliances, diwali festival loans in india, diwali offer and loans in indian banks, diwali festival loans for Cars, Motor Bikes, Scooters, Washing Machine, Refrigerator, LCD, TV, A.C. Machine. diwali festival loans in IOB bank, diwali festival loans in PNB bank, diwali festival loans in IDBI bank, diwali festival loans in OBC Bank. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.